!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Wednesday, September 2, 2026

வா மணி வா


நீண்ட நாட்களுக்கு பிறகு கவனத்தை ஈர்த்த ஒரு பதிவு. நிசப்தம் மணிகண்டன் எழுதியிருந்தார். வார்த்தைகள் கொஞ்சம் அதிகமாகவே இருந்தன. ஒருவன் கொஞ்சம் அதிகமாகப் பேசினால், அவன் குடித்திருக்கிறான் என்று அர்த்தம். அதுவே வேறு இடங்களில் ரொம்பப் பேசினால், அவன் தான் செய்த தவறுகளை மறைக்கிறான் என்று பொருள். இந்த மணிகண்டனும் அப்படித்தான் போலிருக்கிறது.

இவர் பதிவுலகில் இருந்த ஆரம்பகாலத்தில் இவருக்கிருந்த நற்பெயர் காரணமாக, பலர் இவர் ஆரம்பித்த அறக்கட்டளைக்கு நிதி கொடுத்திருந்தார்கள். ஆரம்பத்தில் இவரும் பலருக்குக் கல்வி உதவி செய்தார்; தகவல்களைப் பதிவாகவும் போட்டார்.