!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, September 12, 2026

(மிசா) ஸ்டாலினும், பாபநாசம் திரைப்படமும்

மிசாவில் ஸ்டாலின் சிறைக்கு போனாரா அல்லது இது வேறு வகையா என்பது குறித்த கட்டுரைகளையும், காணொளிகளையும் சலிக்கும் அளவுக்குக் கவனித்துவிட்டேன். The judgment is ready. இருந்தாலும், எந்த ஒரு செய்தியிலும் ஏதோ ஒரு சுவாரசியமான தகவல் மறைந்திருக்கும் அல்லவா, அதை இங்கே கவனிப்போம்.

இப்போது விவாதங்களில் இரண்டு வார்த்தைகள் அதிகமாகப் பேசப்படுகின்றன. ஒன்று, இந்தக் கம்பி கட்டுன கதை. இரண்டாவது, நேரேட்டிவ் செட் செய்வது. கலைஞர் இந்த இரண்டையும் அந்தக் காலத்திலேயே செய்துவிட்டார் என்பதுதான் இதில் உள்ள சுவாரசியமான செய்தி.

முதலில், நேரேட்டிவ் செட் செய்வது என்றால் என்ன?

ஒரு விஷயத்தில் இதுதான் நடந்தது, இப்படித்தான் நடந்தது என்று நம்மை நம்பவைப்பது. இதைத்தான் பாபநாசம் படத்தில் கமல் செய்தார். ஒரு கொலையை மறைக்க, அந்தத் தேதியில் இவர்கள் வேறு எங்கோ இருந்ததைப் போல் காட்ட ஒரு நாடகமாடினர்.

இதற்காகவே ஒரு பஸ் கண்டக்டர், ஓட்டல் உரிமையாளர், தியேட்டர் ஆபரேட்டர் என வேண்டுமென்றே அந்த இடங்களுக்குப் போய், “நான் கூட போன வாரம்... அந்த ஆன்மிக நிகழ்ச்சியில கலந்துட்டு... இங்க உங்களைப் பார்த்தேனே” என்று பேசி, அப்படி ஒரு சம்பவம் நடந்ததைப் போல் அவர்களை நம்பவைத்து, அவர்களையும் ஒரு சாட்சியாக மாற்றிவிடுவார்.

இதைத்தான் கலைஞர் ஸ்டாலின் விஷயத்தில் செய்திருக்கிறார். அவருக்குத் தெரிந்துவிட்டது, பிள்ளை தடம் மாறிவிட்டான் என்று. கூடவே, கலைஞரின் மனசாட்சியும், ‘நீ மட்டும் யோக்கியமா?’ என்று கேள்வி கேட்டிருக்கிறது. சாதாரண குடும்பங்களுக்கே இது போன்ற செய்திகள் அசிங்கம். அதுவும் ஒரு கட்சியின் தலைவருக்கு இது அரசியல் ரீதியாகவும் பாதிக்கும். எனவே, பிள்ளையையும் கட்சியையும் இந்த அவமானத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என கலைஞர் திட்டம் போட்டிருக்கிறார்.

எனவே, கமலைப் போலவே இவரும் அந்தக் காலத்தில் இந்த வேலையை ஆரம்பித்துவிட்டார். கட்சித் தொண்டர்களோ அல்லது விவரம் தெரியாத யாராவது வந்தாலும், “போன மாசம் கூட நான் உங்ககூட பேசினேனே” என்று இவர் சொல்ல, எதிரே அவர், “போன மாசம் நான் உங்களைப் பார்க்கலையே” என்று குழம்ப... அதற்கு இவர், “அதாங்க... நம்ம தம்பி ஸ்டாலினை மிசாவுல கைது பண்ணாங்களே, அதுக்கு மறுநாள் நான் உங்களுக்குப் போன்ல சொன்னேனே” என்று வாண்டடாக ஒரு தகவலை, அதாவது ஸ்டாலின் மிசாவில்தான் கைது செய்யப்பட்டார் என்ற தகவலை, கலைஞர் பல பேரிடம் பதிய வைத்திருக்கிறார்.

இதைத்தான் நேரேட்டிவ் செட் செய்வது என்று இப்போது சொல்கிறார்கள். இந்த விஷயத்தில் கலைஞர் கொஞ்சம் அட்வான்ஸ்டாக இருந்திருக்கிறார்.

அதுசரி, எல்லோரையும் இப்படி ஏமாற்ற முடியுமா?

ஊடகவியலாளர்களுக்கு எப்படியும் இது தெரியும். ஆனால் அவர்கள் அன்றும் சரி, இன்றும் சரி, ஒரே வகைதான்: மிட்நைட் ஆம்பிளைஸ். அதாவது, இரவில் மட்டும் ஆம்பிளையாகவும், பகலில் கோழையாகவும் இருப்பார்கள். எனவே, அவர்களை மிரட்டுவது பெரிய விஷயமில்லை.

ஆனால், கட்சியில் மூத்த தலைவர்கள் இருப்பார்கள். அவர்களுக்கு என்ன நடந்தது என்று தெரியும். அவர்களை எப்படி சமாளிப்பது? அதற்கும் ஒரு வழி இருந்தது. அதுதான் கம்பி கட்டுன கதை.

சந்தானம், மிர்ச்சி சிவா நடித்த கலகலப்பு திரைப்படம். அதில் ஒரு காட்சி. ஒரு பெண் முறத்தால் புலியை விரட்டும் படி ஒரு புகைப்படம் இருக்கும். “இதுதான் எங்கள் பாட்டி” என்று ஒருவர் சொல்லுவார்.

“இது நம்புற மாதிரி இல்லையே!” என்று சந்தானம் சொல்ல, “நானும் ஆரம்பத்தில் நம்பவில்லை. ஆனால் நம்பினால்தான் சோறு என்று சொன்னார்கள். எனவே, நானும் நம்பிட்டேன்” என்று வசனம் போகும். இதைத்தான் கலைஞர் அந்தக் காலத்தில் சக தலைவர்களிடம் செய்திருக்கிறார்.

“நம்ம தம்பி ஸ்டாலின் மிசாவுல கைது” என கலைஞர் சொல்ல, மற்ற தலைவர்கள், “இல்லையே, இது வேற கசமுசா எனக் கேள்விப்பட்டேனே” என இழுக்க, “இதை நம்பினால்தான் உங்களுக்கு அமைச்சர் மற்றும் கட்சியில் பதவி” என கலைஞர் சொல்ல, வேறு வழியில்லாமல் எல்லோரும் அதையே சொல்ல ஆரம்பித்திருப்பார்கள்.

அந்த காலகட்டம் மிசா கைதுகள் நடந்த காலம். எனவே இது அதில் கலந்துவிட்டது. அதுமட்டுமின்றி, பெண்கள் இந்த காலத்திலேயே புகார் கொடுப்பதில்லை.அப்படியென்றால் அந்த காலத்தில் எப்படி இருந்திருக்கும். எனவே வழக்கமாக போலீஸ் செய்வதுதான். உண்மையான வழக்கை காரணம் காட்டாமல், வேறு வழக்கில் உள்ளே தள்ளுவார்கள். அது மிசாவாகவும் இருக்கலாம். அதுதான் நடந்திருக்கக்கூடும்.

ஆனால், இது பெரியார் மண். இங்கே எதையும் அவ்வளவு சீக்கிரம் மறைக்க முடியாது. எனவே, அந்தத் தகவல் பல மட்டங்களில் பரவி, இப்போது தெரியாத பலருக்கும் அது தெரிந்துவிட்டது.

கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரிந்துவிடும் என்பது பழமொழி. ஆனால், திமுகக்காரன் புளுகு 5 நாட்களில் தெரிந்துவிடும். அதனால்தான் ஒவ்வொரு முறையும் இவர்களின் ஐந்து வருட ஆட்சியைப் பார்த்ததும், “போதும் கண்ணா, போதும்... உங்க தலைவலியே வேணாம். இனி நீ ஓய்வு எடு” என்று இவர்களை வீட்டுக்கு அனுப்பிவிடுகிறார்கள்.

ஆனால், மக்கள் எவ்வளவு அடி கொடுத்தாலும், “நாங்கள் திருந்த மாட்டோம்” என திமுகவினர் அடம்பிடிக்க, இந்த முறை (அநேகமாக) அவர்களுக்கு நிரந்தர ஓய்வைக் கொடுத்துவிட்டார்கள்.

நானும் சில வருடங்களுக்கு முன் ஒரு பதிவு எழுதினேன். அந்தப் பதிவில், திராவிட சாம்ராஜ்யம் விரைவில் முடிவுக்கு வருகிறது; அதன் கடைசி முதல்வராக ஸ்டாலின் இருப்பார் என எழுதியிருந்தேன். அது நடந்துவிட்டது. நானும் கொஞ்சம் அட்வான்ஸ்ட்டாகத்தான் இருக்கிறேன் போலிருக்கிறது.

இனி விஜய்.

இப்போது விஜய் ஆவேசமாக, ஆணவமாக, சில இடங்களில் அநாகரீகமாகவும் பேசுகிறார். இதை அவர் தவிர்க்கலாம். ஆனாலும், இங்கேயும் சில தியரிகள் இருக்கின்றன.

புது மாப்பிள்ளையும் பெண்ணும் 6 மாசத்துக்குக் கொஞ்சம் லேட்டாகத்தான் எழுந்திருப்பார்கள். அது வயசுக்கோளாறு. அதேதான் அரசியலுக்கும். புதிதாக வெற்றி பெற்ற எல்லோருக்கும் கொஞ்ச நாளைக்கு அந்தத் தலைக்கனம் இருக்கும். “நான் ஜெயிச்சிட்டேன்டா” என்ற திமிரும் இருக்கும். இதெல்லாம் இயற்கை. போகப் போக சரியாகிவிடும்.

அதுவும், அப்பனும் புள்ளையும் சேர்ந்து விஜய்க்கு மிகப்பெரிய குடைச்சல் கொடுத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. அந்தக் குடைச்சலுக்குப் பதிலடியாக, விஜய் அவர்கள் வீட்டுக்கே போய், “நான் இப்ப முதல்வர்டா” என்று பந்தா பண்ணிவிட்டு வந்திருக்கிறார்.

அதோடு, திமுகவினர் புரிந்துகொண்டு கொஞ்ச காலம் அமைதியாக இருந்திருக்க வேண்டும். ஆனால், காலம் மாறிவிட்டதை உணராமல் இன்னமும் இவர்கள் விஜய்யுடன் மோதிக்கொண்டிருக்கிறார்கள். இனி அவர் இவர்களை ஓட ஓட விரட்டுவார். இவர்களும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

வரலாறு எவ்வளவோ பாடங்களை கொடுத்துவிட்டது. அன்று சாணக்கியன் அவமானப்படுத்தப்பட்டான். அவன் சந்திரகுப்தனை வளர்த்து அந்த சாம்ராஜ்ஜியத்தையே அழித்தான். அதேதான் காந்தி, பெரியார் கதையும். இதுகுறித்த என்னுடைய பதிவு https://anindianviews.blogspot.com/2026/07/blog-post_18.html

அதே கதைதான் திமுகவிற்கும். எம்ஜிஆர், ஜெயலலிதா தற்போது விஜய் என இவர்களிடம் இந்த கலைஞர் குடும்பம் தன் அகங்காரத்தை காட்டியிருக்கிறது. அவர்களும் பதிலுக்கு வச்சி செஞ்சியிருக்கிறார்கள். ஆனாலும் இவர்கள் திருந்துவதில்லை.

நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் பல விஜய் ரசிகர்களின் பேச்சு அறியாமையின் உச்சம்தான். அதை மறுப்பதற்கில்லை. ஆனால் மக்கள் கவனிக்கிறார்கள். தவெவில் இளைஞர்கள் தற்குறிகளாக இருக்கிறார்கள். ஆனால் திமுகவில் தலைவர்களே தற்குறிகளாக இருக்கிறார்கள். இது ரொம்பவே ஆபத்து என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அதனால்தான் திமுகவிற்கு கொத்து பரோட்டா போட்டுவிட்டார்கள்.

நிதர்சனம் என்னவென்றால், தெருவில் நாயை அடித்தால், அந்த நாய்க்கு ஆதரவாகவும் நாலு பேர் குரல் கொடுப்பார்கள். ஆனால், பாம்பை அடித்தால் யாராவது தடுப்பார்களா? அவர்களும் ரெண்டு சாத்து சாத்துவார்கள். தமிழ்நாட்டில் திமுகவின் நிலை அதுதான்.

தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்க ஒருவன் நல்லவனாக, அறிவாளியாக, புத்திசாலியாக, சமூக சேவகனாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. திமுக ஒரு தீய சக்தி என்று சொன்னால் போதும், மக்கள் அவர்கள் பின்னால் சேர்ந்துவிடுகிறார்கள். அந்த அளவுக்கு நல்ல பெயரை திமுகவினர் எடுத்திருக்கிறார்கள்.

இந்த உண்மையை அவர்கள் கடைசி வரை உணரவில்லை என்பதுதான் மிகப்பெரிய சோகம்.

0 comments:

Post a Comment