நீண்ட நாட்களுக்கு பிறகு கவனத்தை ஈர்த்த ஒரு பதிவு. நிசப்தம் மணிகண்டன் எழுதியிருந்தார். வார்த்தைகள் கொஞ்சம் அதிகமாகவே இருந்தன. ஒருவன் கொஞ்சம் அதிகமாகப் பேசினால், அவன் குடித்திருக்கிறான் என்று அர்த்தம். அதுவே வேறு இடங்களில் ரொம்பப் பேசினால், அவன் தான் செய்த தவறுகளை மறைக்கிறான் என்று பொருள். இந்த மணிகண்டனும் அப்படித்தான் போலிருக்கிறது.
அதன்பின் திமுக ஆட்சிக்கு வந்ததும் இவருக்குத் திமுகவின் அருள் கிடைத்துவிட்டது. தமிழச்சி தங்கபாண்டியன் மூலம் சபரீசன் அறிமுகம் கிடைக்க, இவருக்கு பென் நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பு கிடைத்தது. இவையெல்லாம் அவரே எழுதியவை.
திமுகவின் அதிகார மையத்துக்கு நெருக்கமான பிறகு மனிதர் மாறிவிட்டார். மக்கள் சேவைக்கு குட்பை சொல்லிவிட்டார். நல்ல சம்பளமாகத்தான் இருந்திருக்கும். அவர் சந்தோஷமாக இருக்கிறார் என்றால், நாட்டு மக்கள் எல்லோரும் சந்தோஷமாக இருப்பதாகத்தானே அர்த்தம்! அதேதான்.
குடிகாரன் சகவாசம் எப்படி மோசமோ, அதேதான் இந்தத் திமுக சகவாசமும். மனிதர் மாறிவிட்டார்.
‘திமுக ஆட்சியில் ஏது ஏழை?’ என்று உடன்பிறப்புகள் சொல்ல, இவரும் அதை நம்ப ஆரம்பித்துவிட்டார் போலிருக்கிறது. அப்படி ஏழைகள் இருந்தால்தானே அவர்களுக்கு உதவி செய்ய வேண்டும்? எனவே, இந்த அறக்கட்டளையில் இருந்த பணம் அப்படியே உறங்க ஆரம்பித்துவிட்டது.
இவர் மீது இருந்த நம்பிக்கையில் பணம் கொடுத்தவர்கள், இவர் அதை முறையாகச் செலவு செய்திருப்பார் என விட்டுவிட்டார்கள் போலிருக்கிறது. (நான் எதுவும் கொடுக்கவில்லை.) இப்போது அவர் அதைத் தெரிவித்த பிறகுதான் தெரிகிறது; அந்தப் பணம் அப்படியே வங்கியில் இருந்திருக்கிறது.
பென் நிறுவனத் தலைவர் ஆன பிறகு, அவருடைய அத்தனை திறமையையும் பயன்படுத்தி திமுகவை மீண்டும் ஆட்சிக்கு வர பல கணக்குகள் போட்டார். பட் மேன் ப்ரோபோசஸ், காட் டிஸ்போசஸ் என்று ஆகிவிட்டது.
ஒருவேளை திமுக ஜெயித்திருந்தால், இவருக்கு வேறு ஏதாவது ஒரு முக்கியப் பொறுப்பு கிடைத்திருக்கும். இந்தப் பணமும் அப்படியே உறங்கிக்கொண்டிருக்கும். தற்போது அதற்கு வழியில்லாமல் போய்விட்டது.
தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், ஸ்டாலின் அவர்களுக்கே வேலை இல்லாமல் போய்விட்டது; இவருக்கும் அங்கே மரியாதை போய்விட்டது. காதில் ரத்தம் வரும் அளவுக்குத் திட்டியிருப்பார்கள் போலிருக்கிறது. மனிதர் மீண்டும் பதிவுலகம்/முகநூல் வந்துவிட்டார்.
வரட்டும். வேலை இல்லாதவர்களுக்கு, பொழுது போகாதவர்களுக்கு முகநூல் ஒரு திண்ணைதான். ஆனால் மீண்டும் நல்லவனாக வேடம் போட முடியாது என்பதை அவர் உணர்ந்தால் போதும்.
திமுக அடைந்த படுதோல்வி, அதற்கு இந்த அறிவாளியும் ஒரு காரணம் என்ற குற்றச்சாட்டு போன்றவை இந்த மணிகண்டனை உறுத்தியிருக்கிறது. அதனால்தான் தற்போது மீண்டும் தன்னை நல்லவனாகக் காட்ட, ஏழை மாணவர்களுக்கு உதவித்தொகை என்ற பழைய பல்லவியை மீண்டும் ஆரம்பித்துவிட்டார்.
சரி, அந்தப் பணத்தை அவர் ஆட்டை போடவில்லையே, அதுவே நல்ல விஷயம் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் இது அப்படி அல்ல. திமுகவின் மிகப்பெரிய ஐடி விங் இந்தப் பென் நிறுவனம். அதன் தலைமை நிர்வாகிக்கு நிச்சயம் பல லட்சம் (10-15) சம்பளம் இருந்திருக்கும். அதுபோக, அந்தச் செல்வாக்கைப் பயன்படுத்தியும் வேறு வகையில் பணம் பார்க்க முடியும். இவர் எந்த அளவுக்குத் தரம் இறங்கினார் என்பது நமக்குத் தெரியாது.
ஆனால், திமுகவின் அண்டா என்று பெயர் பெற்ற ஊடகவியலாளர் செந்தில்வேலின் ஒரு ஆடியோ இணையத்தில் வலம் வந்தது. அதில் அவர், ‘நான் கட்சிக்கு எவ்வளவோ செய்திருக்கிறேன், ஆனால் அவன் சில கோடிக்கு வீடு கட்டிவிட்டான்’ என்று புலம்பியிருந்தார். கமெண்ட் பகுதியில் அது மணிகண்டன்தான் என்று சில பதில்கள் வந்தது.
இவையெல்லாம் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் திமுகவின் காற்றே அப்படித்தான். கம்பன் வீட்டு தறியும் கவிபாடும் என்பதுபோல், சிலர் திமுகவுக்கு ஜால்ரா அடிக்கிறார்கள் என்றால், அவர்கள் நிச்சயம் கை நீட்டுபவர்களாகத்தான் இருப்பார்கள். அந்த வகையில் இவரும் கணிசமாக கல்லா கட்டியிருக்கக்கூடும். எனவே, இந்த அறக்கட்டளைப் பணம் என்பது இவருக்குச் சில்லறைப் பணமாகத் தெரிந்திருக்கும்.
இப்போது மீண்டும் சமூக ஆர்வலர் என்ற வேஷம் அவருக்குத் தேவைப்படுகிறது. மக்கள் கொடுத்த அறக்கட்டளைப் பணமும் இருக்கிறது. கை காசைச் செலவழிக்க வேண்டாம். அதுதான் வேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறிய கதை.
எப்படியோ, எல்லோரும் சேர்ந்து திமுகவிற்கு முடிவுரை எழுதிவிட்டார்கள். பலர் வெளியில் இருந்து எழுதினார்கள்; இவர் உள்ளே இருந்தே அவர்கள் கதையை முடித்தார். அதற்காக இவருக்கும் நம் வாழ்த்துக்கள்.

0 comments:
Post a Comment