!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Thursday, September 17, 2026

விஜய் ஏன் லண்டனுக்குப் போனார்; ஒருவேளை இதற்காக இருக்குமோ?

விஜய் லண்டனுக்குப் போய்விட்டு வந்துவிட்டார். ஏகப்பட்ட பேர் ஏதேதோ கருத்துகளைச் சொல்லிவிட்டார்கள். இது அஜித்தின் ரேஸுக்காக என்று சில செய்திகள். அதிகாரப்பூர்வமாக, தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காக என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

ஆனால் நடந்த சம்பவங்களை கவனித்தால், இங்கே ஏதோ ஒன்று இடிக்கிறது. அதாவது, reading between the lines என்று சொல்வார்களே, அதுபோல் ஏதோ ஒன்றை யாரும் கவனிக்கவில்லை போலிருக்கிறது.

முதலில் அஜித். விஜய்க்கும் அஜித்துக்கும் அப்படி ஒன்றும் பெரிய நட்பு இருப்பதாகத் தெரியவில்லை. சென்னையில் வாக்களித்துவிட்டு வெளியே வந்த அஜித், “மாற்றம் தேவையில்லை” என்று பேட்டி கொடுத்துவிட்டு, பின்னர் அது மறுக்கப்பட்டது எல்லோருக்கும் தெரிந்த விஷயம்.

பெரும்பாலான நடிகர்களுக்கு விஜயின் வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை. ரஜினி, கமல், விஜய் சேதுபதி என எல்லோரும் இந்த வகைதான். இருந்தாலும், ஜெயித்த பிறகு என்ன செய்ய முடியும்? எனவே, எல்லோரும் ஏதோ ஒரு வகையில் தங்கள் வெறுப்பைக் காட்டிக்கொண்டிருக்கிறார்கள். இதில் அஜித் மட்டும் விதிவிலக்கா என்ன?

நிஜமாகவே அவர் விஜய்யை அந்த நிகழ்ச்சிக்கு அழைத்தாரா அல்லது சம்பிரதாயத்துக்கு அழைத்தாரா என்று தெரியவில்லை. அந்த அளவுக்குத்தான் அவர்களின் நட்பு இருக்கிறது. இருந்தாலும், அவர் முதல் 10 இடங்களில் வரக்கூடிய ஆளும் இல்லை. அப்படியிருக்கையில், இதற்காகவா விஜய் போயிருப்பார்? சந்தேகம்தான்.

நிஜமாகவே தொழில் முதலீட்டை ஈர்ப்பதற்காகத்தான் சென்றார் என்றால், அதற்கான வாய்ப்பும் இல்லை. அங்கே தொழில் முனைவோர் மாநாடு (expo) எதுவும் நடந்த மாதிரித் தெரியவில்லை. அதுவும் இங்கிலாந்துக்குப் போவது என்பது அதைவிட அபத்தம். ஒரு பணக்காரன் ஏழையிடம் கடன் கேட்பதைப் போன்றது இது. இங்கிலாந்தின் நிலைமை அப்படி இருக்கிறது.

ஒரே வரியில் சொன்னால், சினிமா தியேட்டருக்குப் போய் அங்கே மொபைலில் படம் பார்ப்பதைப் போன்றதுதான் அங்கே முதலீட்டுக்காகப் போவது.

பின்னர் எதற்காக இருக்கும்?

ஒரே காரணம்தான். மனித மனம் கொஞ்சம் அழுக்கானது. எப்பேர்ப்பட்ட பெரிய மனிதனுக்கும், தன்னை எதிர்த்தவர்களை, மட்டம் தட்டியவர்களை கொஞ்சம் சீண்டிப் பார்ப்போம் என்ற எண்ணம் இருக்கும். விஜய்யின் இந்த லண்டன் பயணம் அந்த வகையாக இருக்குமோ என்று எனக்கு ஒரு சந்தேகம்.

ஏற்கனவே விஜய்யிடம் வம்புக்குப் போன உதயநிதியின் வீட்டுக்கே போய், “நான் முதல்வர்டா” என்று சீன் போட்டுவிட்டு வந்தார். இந்த முறை இந்த சீன் சங்கீதாவுக்குப் போலிருக்கிறது.

லண்டன் அவர் பார்க்காததா? ஒரு வேளை தனிப்பட்ட பயணம் என்றால், அவரிடம் பணமா இல்லை? சொந்த செலவிலேயே போயிருக்கலாம். தொழில் முதலீடுதான் காரணம் என்றால், எத்தியோப்பியா, சோமாலியா என்று வேறு ஏதாவது நாட்டுக்குப் பறந்திருக்கலாம். ஆனால் லண்டன் ஏன்?

ஒரே காரணம்தான். அங்கே சங்கீதா இருக்கிறார்.

லண்டனுக்கு முதல்வராகப் பயணிக்க வேண்டும். கூடவே திரிஷாவும் வர வேண்டும். “நான் நானாகத்தான் இருப்பேன்” என்று சங்கீதாவுக்குச் செய்தி சொல்ல வேண்டும். இதுதான் அவருடைய நோக்கமாக இருக்க வேண்டும். இதற்கான வாய்ப்பு அஜித் ரேஸ் மூலம் வர, அப்படி தொழில் முதலீடு என்ற பெயிண்டை அடித்து, அவர் இதைப் பயன்படுத்திக்கொண்டார் என்றுதான் நினைக்கிறேன். இதுதான் ஓரளவுக்கு லாஜிக்காக இருக்கிறது.

இங்கே அவர்களுக்குள் என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. சங்கீதா, “புது புது அர்த்தங்கள்” கீதா மாதிரி ஓவர் பொஸசிவாக இருந்திருக்கலாம். அல்லது சினிமாத் துறையில் ஊடுருவிவிட்ட சில தலைவலிகளை சங்கீதாவால் ஜீரணிக்க முடியாமல் இருக்கலாம். அதுமட்டுமின்றி, விஜய்க்கும் திமுகவுக்கும் பகை இருக்கும் நிலையில், முரசொலி செல்வம் மரணத்துக்கு சங்கீதா மட்டும் தனியாக வந்ததும் ஒரு புதிர்தான்.

விஜய்யுடன் அவர்களுக்குப் பகை என்ற நிலையில், இவரும் ஒதுங்கியிருக்க வேண்டும். எதிரியுடன் உறவு என்பது விஜய்க்கும் கோபத்தை வரவழைத்திருக்கும். இங்கே எல்லாமே ஒரு குழப்பம்தான். ஆனால் தன்னை மட்டம் தட்டியவர்கள் யார் என்பதை காட்டுவதில் விஜய் தீவிரமாக இருக்கிறார் போலிருக்கிறது.

எது எப்படியோ, அவருடைய இரண்டு எதிரிகளுக்கும் தன் பலத்தைக் காட்டிவிட்டார்.

இனியாவது நிர்வாகத்தைக் கவனித்து நாட்டை வழிநடத்த வேண்டும். இன்னமும் பாட்டிலுக்கு 10 ரூபாய் குறையவில்லையாம். மின் தட்டுப்பாடு, போக்குவரத்துக் குளறுபடி என வரிசையாகத் தலைவலிகள் இருக்கின்றன.

எப்படி திடீரென்று ஒரு சூறாவளி வந்து திமுகவை வீழ்த்தியதோ, அதேபோல் திடீர் சூறாவளி இவருக்கும் வரலாம். இவர் தற்போது போன லண்டனிலேயே ஏகப்பட்ட தலைவர்கள் வந்ததும் தெரியவில்லை; போனதும் தெரியவில்லை.

Deliver or quit.

இதுதான் இன்றைய காலம். விஜய் இதைப் புரிந்துகொண்டால் சரி.

0 comments:

Post a Comment