!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, September 26, 2026

சவுக்கு சங்கர், முதல்வர் விஜய், நீதிபதி பத்மா; உங்களுக்கு ஏதாவது புரிகிறதா?

இது ஒரு பேட்டர்ன். நன்றாகக் கவனியுங்கள்; உங்களுக்குப் புரியும்.

தமிழ்நாட்டில் ஏகப்பட்ட பேர் பத்திரிகையாளர்கள் என்று சொல்லிக்கொண்டு திரிந்தார்கள். ஆனால் சவுக்கு சங்கர் வந்தார்; அத்தனையையும் புரட்டிப் போட்டார். பல துணிச்சலான தகவல்களைப் புரியும்படியும், எளிமையாகவும் சொன்னார். ‘நாங்கள்தான் அறிவாளி’ என்று அவர்கள் கட்டிவைத்த பிம்பத்தை இவர் உடைத்தார். இது வெகுஜனப் பத்திரிகையாளர்களுக்கு எரிச்சலைக் கொடுத்தது.

அவர்கள் இவரைப் பத்திரிகையாளராகவே அங்கீகரிக்கவில்லை. இவரின் வளர்ச்சி அவர்களைப் பொறாமையின் உச்சத்துக்கே தள்ளியது. சங்கர் ஒரு சாதாரண யூடியூபர் என்று முடக்கப் பார்த்தார்கள். ஆனால் சவுக்கு சங்கர் இவர்களை லெஃப்ட் ஹேண்டில் தூக்கிக் கடாசிவிட்டு, அவருக்கென்று ஒரு சாம்ராஜ்யத்தை நிறுவிவிட்டார்.

அடுத்து முதல்வர் விஜய். இவரும் திடீரென்று அரசியலுக்கு வந்தார். சக நடிகர்கள் மட்டுமின்றி, எல்லா அரசியல் கட்சிகளும், ‘நாங்கள்தான் அறிவாளி, இவருக்கு எதுவுமே தெரியாது’ என்று இறுமாப்பில் இருந்தார்கள்; அவரை உதாசீனப்படுத்தினார்கள். ஆனால் விஜய் இவர்களையும் லெஃப்ட் ஹேண்டில் தூக்கிக் கடாசிவிட்டு முதல்வராகிவிட்டார்.

இதில் சவுக்கு சங்கருக்கு வெற்றி என்பது கடினமான உழைப்பும், வலியும் நிறைந்த பாதையாக இருந்தது. விஜய்க்கு அப்படி பெரிதாக வலி இல்லை. ஆனால் அதிர்ஷ்டம் அளவுக்கு அதிகமாகவே கைகொடுக்கிறது.

நீதித்துறையிலும் அதே கதைதான் போலிருக்கிறது. நீதிபதி பத்மா போக்ஸோ நீதிபதியாம். நான் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி என நினைத்தேன். இவர் அமர்வு நீதிபதியாம். அதாவது, வழக்கறிஞராக இருந்து நீதிபதியாக வரவில்லை. அதனால் இவர்களிடம் வழக்கை இழுப்பதும், மூடுவதும் சிரமம்.

உயர் நீதிமன்றத்தில் இருப்பவர்கள் வழக்கறிஞராக இருந்து வந்தவர்கள். அவர்கள் உலகமே தனி. அங்கே இப்படி ஒரு வழக்கு போயிருந்தால், ‘எதுக்கு இந்தத் தேவையில்லாத தலைவலி? வாய்தாவிலேயே இன்னும் சில ஆண்டுகள் வழக்கை இழுங்கள். வீரமணியும் இயற்கையாகவே செத்துப் போயிருப்பார். அதன்பின் அவர் குற்றவாளி என அறிவித்து, நாங்களும் நீதியை நிலைநாட்டியிருப்போம்’ என்று அவர்களே காவல் துறையினருக்கு ஐடியா கொடுத்திருக்கக்கூடும்.

(சுஷில் ஹரி சிவ் சங்கர் பாபா வழக்கு பல வருடங்களாக இன்னும் நிலுவையில்தான் இருக்கிறது. அதுவும் அவர் பெயிலில் இருக்கிறாராம். அவருக்கு பெயில் கொடுத்தது உயர் நீதிமன்றம்தான்.)

இனி இந்த போக்ஸோ வழக்கு.

நீதிபதி பத்மா நேரடியாக பதவிக்கு வந்தவர் என்பதால், அதுவும் பெண் என்பதால், தைரியமாகச் செயல்பட்டுவிட்டார்.

இங்கேதான் விதி வேறுவிதமாக விளையாட ஆரம்பித்துவிட்டது. இந்த வழக்கு தவெகவிற்கு ஒரு ஆயுதத்தைக் கொடுத்திருக்கிறது. அதைக்கூட சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் தாங்கிக்கொள்வார்கள். ஆனால் தங்களை விடக் கீழே இருக்கும் ஒரு நீதிபதி, அதுவும் பெண் நீதிபதி, இப்படி திடீரென்று ஒரு புரட்சிப் பெண்ணாக, தைரியமான நீதிபதியாகப் புகழ் பெறுவது அவர்களுக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது.

ஏகப்பட்ட யூடியூபர்களும், மக்களும் இந்தப் பெண் நீதிபதியைப் புகழ்ந்து பேச ஆரம்பிக்க, உயர் நீதிமன்ற நீதிபதிகளுக்குக் காதில் புகை வந்துவிட்டது. இதை எப்படி ஜீரணிப்பது?

இந்த வழக்கு விசாரணையில் இருப்பதால், இதைப் பற்றி பேசக்கூடாது என்று தடை போட்டால்? இப்போது அந்த வழக்கைப் பற்றியும் பேச முடியாது; அந்தப் பெண் நீதிபதியையும் புகழ்ந்தும் பேச முடியாது. அதுதான் இந்தத் தடைக்கு காரணமோ? என்ன ஒரு வில்லத்தனம்?

இப்படித்தான் ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றத்தில் தஹில்ரமணி (பெண்) என்பவர் தலைமை நீதிபதியாக இருந்தார். ஏதோ ஒரு விஷயத்தில், இது சரியில்லை என்று தீர்ப்பு கொடுத்துவிட்டார். (Master of the Roster என்று ஏதோ ஒரு நடைமுறை. அதை புரிந்துகொள்ள மேலும் படிக்க வேண்டும்.)

அது அப்போதிருந்த ஆண் அதிகாரவர்க்க நீதிபதிகளுக்குப் பிடிக்கவில்லை போலிருக்கிறது. உச்ச நீதிமன்றத்துக்குப் புகார் போய், தஹில்ரமணியை சென்னை உயர் நீதிமன்றத்திலிருந்து (75 நீதிபதிகள்) மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு (3) இடம் மாற்றினார்கள். இந்த அவமானத்தை ஏற்க மறுத்து அவர் விருப்ப ஓய்வு பெற்றார். இது நடந்தது 2019-ல். அதன் பின் வந்த ஒரு நீதிபதி, இவர் கொண்டு வந்த சட்டத் திருத்தத்தை ரத்து செய்தாராம்.

இப்போது இந்தப் பத்மா என்ற நீதிபதியும் துணிச்சலான பெண்மணியாக இருப்பதால், இவரையும் வளர விடமாட்டார்கள்; முடக்கப் பார்ப்பார்கள். அது மெல்ல மெல்ல நடக்கும்.

இனி இந்தத் தடைக்கு வருவோம்.

ஒரு வழக்கு விசாரணையில் இருக்கும் போது, அது குறித்து பேசுவது வழக்கின் தன்மையைப் பாதிக்காதா?

நிச்சயம் பாதிக்கும். ஆனால் அதில் ஒரு அளவு வேண்டாமா? குற்றம் நடந்து மூன்று மாதம் என்றால், அதை ஒரு வாதமாக ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் போலீசார் வருடக்கணக்கில் விசாரணையே செய்யாமல் இழுத்தால், நீதிமன்றங்களும் அதை கேள்வி கேட்காமல் மறைமுகமாகத் துணை போனால், எவ்வளவு நாட்களுக்கு இதைப் பேசாமல் இருப்பது?

ஒரு குற்றத்தைப் பற்றி பரபரப்பாக பேசுவதன் மூலம் பலர் பயப்படலாம். பலருக்கு இது போன்ற சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதும் புரியும். அது ஒரு வகையில் லாபம்தானே? அதை ஏன் நீதிமன்றங்கள் தடுக்க வேண்டும்?

காரணம் எல்லோருக்கும் தெரியும். எப்படி காவல் துறை ஊழலில் ஊறிப்போய்விட்டதோ, அதேதான் நீதிமன்றங்களும். தங்களுக்கு படி அளந்த அரசியல்வாதிகளுக்கு காவல் அதிகாரிகள் இன்னமும் துணை போவதைப்போல, நீதிபதிகளும் இப்படிப்பட்ட தடைகளின் மூலம் அரசியல்வாதிகளுக்கு மறைமுகமாக உதவுகிறார்கள்.

இந்த வீரமணி வழக்கு சில வருடங்களுக்கு முன் நடந்த குற்றம். அதுவும் பல வருடங்களாகத் தொடர்ந்த குற்றம். இவர்கள் விரைவாக விசாரணை நடத்திக் குற்றவாளிகளைத் தண்டித்திருந்தால், இப்படி ஒரு நிலை வந்திருக்காது.

குறைந்தபட்சம், அதைப் பற்றி விரிவாகப் பேசுவதன் மூலம் சமூகத்தில் ஒரு பயமாவது வரும். அதையும் இவர்கள் தடுப்பார்கள் என்றால், நீதித்துறையும் நாசமாகிவிட்டது என்றுதான் அர்த்தம்.

0 comments:

Post a Comment