உதயநிதியின் தஞ்சாவூர் (திரிஷா) ஆபாச பேச்சை பல விதமாகப் பிரிக்கலாம். ஏனென்றால் இவர் பல இடங்களில் ஆபாசமாகப் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார். எனவே எந்தப் பேச்சு என்று எதிர்காலத்தில் குழப்பம் வராமல் இருக்க, இப்படி இடத்தையும் குறிப்பிட வேண்டியிருக்கிறது.
என்னைக் கேட்டால் இங்கே முதல் குற்றவாளிகளே நீதிபதிகள்தான். இவர்களால்தான் இவ்வளவு அட்டூழியங்களும் நடக்கின்றன. ஆபாசமாக அருவருக்கத்தக்க முறையில் பலரும் துணிச்சலாகப் பேசுகிறார்கள் என்றால், அவர்களுக்கு நீதித்துறையின் மீது பயம் போய்விட்டதுதான் காரணம்.
ஒரு மூத்த வழக்கறிஞரை நீதிபதிக்கு முன்னே நிறுத்தினால், பணம் அல்லது அதிகாரத்தைக் காட்டினால், ஜாமீன், வாய்தா எல்லாம் நீங்கள் கேட்காமலே கிடைக்கும். "எங்கம்மா வயசுக்கு வந்துட்டாங்க, அதனால வாய்தா கொடுங்க" என்று ஒரு வழக்கறிஞர் சொன்னாலும், "லாஜிக் இடிக்குதே" என யோசிக்காமல் அதற்கும் வாய்தா கொடுப்பார்கள். இப்படிப்பட்ட நீதிபதிகள்தான் இந்தியாவில் இருக்கிறார்கள்.
நிஜத்தில் இதுபோன்ற அவதூறு வழக்குகளுக்குக் கைது என்பதே தேவையில்லை. இங்கே சம்பந்தப்பட்டவர் மன்னிப்புக் கேட்டால் மன்னிக்கப்படலாம். தண்டனையே 6 மாதம் - 1 வருடம்தான். இவர்கள் யாரும் ஓடிவிடப் போவதில்லை. எனவே, காவல் நிலையத்திற்கு வரச்சொல்லி சொந்த ஜாமீனில் அனுப்ப வேண்டிய வழக்குகள் இவை. இருப்பினும் கைது ஏன்?
இந்த வழக்குகளில் யாரும் தண்டிக்கப்படுவதில்லை. உடனடியாக ஜாமீன் கிடைத்துவிடுகிறது. பின்னர் வாய்தாவிலேயே பல ஆண்டுகள் இது ஓடும். எனவே யாருக்கும் பயமில்லை. சாமானிய நபருக்கு இது ஒரு தலைவலியாக இருக்கும்; பணம் படைத்த அரசியல்வாதிகளுக்கு இது பல வழக்குகளில் ஒன்று.
போலீசார் பல வழக்குகளில் குண்டர் சட்டத்தைப் பயன்படுத்துவதன் காரணமும் இதுதான். போலீசார் கஷ்டப்பட்டு ஒரு குற்றவாளியைப் பிடித்து உள்ளே தள்ளினால், இங்கே நீதிபதிகள் "அவன் எதார்த்தமாக் கேட்டான், நான் பதார்த்தமாகப் பெயில் கொடுத்தேன்" எனப் பணம் வாங்கிக்கொண்டோ அல்லது வழக்கறிஞர்களுக்குப் பயந்தோ ஜாமீன் கொடுத்துவிடுகிறார்கள்.
அந்தக் குற்றவாளி சில வாரங்களுக்கு பின் காவல் நிலையத்திற்கு வந்து, "என்ன இன்ஸ்பெக்டர் சார், வாங்க டீ சாப்பிடலாம்" என நக்கலாகக் கேட்டால், அப்போது போலீசாரின் மனநிலை எப்படி இருக்கும்?
ஒன்று, "எப்படியும் இவன் நீதிமன்றத்தில் பணம் கொடுத்து ஜாமீன் வாங்கத்தானே போகிறான், அந்தச் காரியத்தை நாமே செய்வோம்" என அவர்களும் ஊழல் எனும் சாக்கடையில் இறங்கிவிடுகிறார்கள்.
நேர்மையான போலீஸாக இருந்தால், அந்தக் குற்றவாளி மீது இரண்டு பொய்க் வழக்குகளைப் போட்டு, அப்படியே குண்டர் சட்டத்தையும் போட்டுவிடுகிறார்கள்.
இது தவறுதான், ஆனால் வேறு வழியில்லை. ஆக கோளாறு இங்கே நீதிமன்றத்தில் இருக்கிறது. நாட்டில் பெரும்பாலோர் நீதிபதிகள் உத்தமர்கள் என நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அங்கேயும் 70-80 சதவீதம் ஊழல்தான். மீதி இருக்கும் 10-20 சதவீத நல்ல தீர்ப்புகளை மட்டும் செய்திகளில் வரவழைத்து உத்தமர்களாக நடிக்கிறார்கள்.
அவர்களின் வண்டவாளங்களை இவற்றை கவனிக்கும் வழக்கறிஞர்கள் அம்பலப்படுத்த வேண்டும். ஆனால் அதன்பின் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும். எனவே அவர்களும் இந்த ஜோதியில் ஐக்கியமாகிவிடுகிறார்கள்.
ஊடகவியலாளர்களுக்கு இது தெரிய வரும். ஆனால் வெளியே சொன்னால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அவர்கள் மீது வரும். அவர்களும் புல் தடுக்கி பயில்வான்கள்தான். எங்கே குரைக்க முடியுமோ அங்கேதான் வீரத்தை காட்டுவார்கள்.
இங்கே நாம் புரிந்துகொள்ள வேண்டியது, பிரதமரை முதல்வரை அவமதித்தால் அது கருத்து சுதந்திரம்; ஜாமீன் கிடைக்கும். நீதிபதிகளை அவமதித்தால் ஜாமீன் கிடைக்காது. வழக்கும் விரைவாக நடக்கும். அதாவது மற்றவர்களுக்கு வந்தால் அது தக்காளி சட்னி, அவர்களுக்கு அது ரத்தம் என்ற வகை.
மொத்தத்தில் நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் இரண்டு திராவிடக் கட்சிகளைப் போன்றவர்கள். திமுக ஆட்சிக்கு வந்தால் அதிமுக மீது வழக்கு போடும், ஆனால் அதை நடத்தாது; அதேதான் அதிமுக ஆட்சியிலும் நடக்கும்."
அதே பார்முலாவைத்தான் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் கடைபிடிக்கிறார்கள். "உன் ஊழலை நான் சொல்ல மாட்டேன்; அதற்குப் பதிலாக நான் ஆஜராகும் வழக்குகளில் ஜாமீனும் வாய்தாவும் நான் கேட்கும்போதெல்லாம் கொடுக்க வேண்டும்" என்ற புரிதலில் இவர்கள் நீதிமன்றங்களை நடத்துகிறார்கள்.
தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளுக்கு ஒரு அதிர்ச்சி வைத்தியம் கிடைத்தது போல், இந்த விலைபோகும் நீதிபதிகளுக்கும் ஒரு வைத்தியம் தேவை. இயற்கை இதற்கும் ஒரு வழி வைத்திருக்கும்; காத்திருப்போம்.

0 comments:
Post a Comment