!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Showing posts with label அன்னா ஹசாரே. Show all posts
Showing posts with label அன்னா ஹசாரே. Show all posts

Thursday, November 1, 2012

சின்மயி vs ட்வீட்டர்

இந்த வாரம் எங்கு திரும்பினாலும் சின்மயி குறித்த செய்தி அல்லது பதிவுதான். கொஞ்சம் படிக்க ஆரம்பித்தவன் அப்புறம் அதிலேயே மூழ்கினேன். மோசமான ட்வீட்களை ஒருவர் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து போட, நானும் படித்து தொலைக்க, இவர்களை பொதுவெளியில் சாத்த வேண்டும் என்று ஒரு பதிவில் கருத்தும் சொல்லிவிட்டேன்.

அப்புறம் இது குறித்து கருத்து சொல்வது (கடமை!) என்ற முடிவுக்கு வர, இருதரப்பு வாதங்களையும் கவனிக்க ஆரம்பித்தேன்.

இனி பிரச்சினையை பாப்போம். சின்மயியிடம் சிலர் கருத்துக்கள் கேட்க, அவர் மறுத்திருக்கிறார். அதையும் மீறி அவர் சொல்லிய வேறு சில கருத்துக்கள் பிரச்சினைகளை உருவாக்கி இருக்கிறது. இது போக வேறு சில விஷயங்களும் இருக்கிறது.

Friday, December 30, 2011

லோக்பால் என்ற நாடகமும் சில கதம்ப செய்திகளும்

ரெண்டு நாளா பயங்கரமான லோக்பால் என்ற காமெடி படம் பார்த்தோம். காங்கிரஸ் இதை எப்படியாவது பாஸ் பண்ணிடும் என்று நான் நினைக்க, ஆனால் தொடர்ந்து நடந்த காட்சிகள் இது காங்கிரசின் டிராமா என்பதை உணர்த்திவிட்டது. ஆக படம் முடிந்துவிட்ட நிலையில், இனி நாம் கருத்து சொல்லலாம்.

இப்போதைக்கு லோக்பால் என்ற வீல் ஒரு வழியாக சுத்த ஆரம்பித்திருப்பது உண்மை. இது பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா போல் முடங்கிவிடும் என்று சொல்வதெல்லாம் சாத்தியமில்லை. அடுத்த ஆண்டு ஏதோ கொஞ்சம் பலத்துடன் இது சட்டமாகும் வாய்ப்புதான் அதிகம். இந்த சட்டம் 40 வருடங்களாக தூங்கியது அபத்தம் என்றால், தற்போது திடீரென்று சட்டமாக்க முயற்சிப்பதும் அபத்தம்தான். காங்கிரசின் இந்த திடீர் வேகத்தின் காரணம் அன்னா மற்றும் வரவிருக்கும் தேர்தல்தான்.

Wednesday, August 31, 2011

அன்னா ஹசாரேவின் போராட்டத்தினால் கிடைத்த லாபம் + நஷ்டம்


இரண்டாவது சுதந்திரப் போர் (?) முடிவுக்கு வந்துவிட்டது. இதில் யார் ஜெயித்தார்கள் என்று ஆராய்ச்சி செய்யாமல் ஜனநாயகம் ஜெயித்தது என்றே சொல்வோம்.  அரசு அன்னாவின் மிரட்டலுக்கு பணிந்தும் போகவில்லை, அதேசமயம் மீண்டும் ஒரு முறை அவரை கைது செய்து அவருடைய உண்ணாவிரதத்தை முறியடிக்காமல் யதார்த்தமாகவும் செயல்பட்டிருகிறது.

அன்னாவின் மிரட்டலுக்கு அரசு பணிந்து போயிருந்தால் பலர் இந்த பிளாக்மெயில் முறையை பின் பற்ற ஆரம்பித்திருப்பார்கள். அல்லது அடக்குமுறை மூலம் இதை அடக்கி இருந்தாலோ ஏற்கனவே அரசியல்வாதிகளின் மீது கோவத்தில் இருக்கும் மக்கள் மேலும் அந்நியப்பட்டுப் போயிருப்பார்கள். ஆக எதற்கும் இடம் கொடுக்காமல் இரண்டு பேரும் இறங்கி வந்தது பாராட்டுக்குரியது.

Saturday, August 20, 2011

காங்கிரஸ் - அன்னா ஹசாரே. ஜெயிக்கப்போவது யாரு?


காங்கிரசுக்கும் அன்னா ஹசாரே டீமுக்குமான மோதல் கடுமையாகிக் கொண்டிருக்கிறது. இனி நிமிடத்துக்கு ஒரு செய்தி வரும். `காங்கிரஸ் பணிந்தது` என்றோ அல்லது `அன்னாவின் சாயம் வெளுத்தது` என்றோ பலவிதமான அர்த்தங்கள் அதற்கு கொடுக்கப்படும்.  உண்மையில் இதில் யார் ஜெயித்தார்கள் என்பதை தெரிந்து கொள்ள நாம் சில மாதங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால் இந்த போராட்டத்தையும்,  இனி  என்ன நடக்கும் என்பதைப் பற்றியும் ஓரளவு ஆராயலாம்.

அன்னா ஹசாரேவையும் அவருடைய போராட்டத்தையும் அலசும் முன் இந்த உதாரணத்துக்கு போய் வருவோம். ஏனென்றால் சில விஷயங்களை உதாரணங்களோடு சொன்னால்தான் புரியும்.