`பிஜேபி 3 0 +` என்று ஒரு பதிவு போட்டாலும் போட்டேன், நான் என்னவோ கோடிகணக்கில் செலவு செய்து தேர்தலில் நிற்பதுபோல் ரிசல்டுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்தேன். வந்தது ரிசல்ட். தலைகுப்பற விழுந்தேன். (நான் மட்டுமா?) இருந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை. மீசை இருந்தாத்தானே ஓட்டறதுக்கு. தற்போது எனக்கு மீசையே இல்லை. அகமதாபாத் வரும் முன்பே அதை எடுத்துவிட்டேன். இப்படி ஒரு அதிர்ஷ்டம்.
If a man empties his purse into his head, no man can take it away from him - Benjamin Franklin
Showing posts with label அதிமுக. Show all posts
Showing posts with label அதிமுக. Show all posts
Saturday, May 24, 2014
தப்புக்கணக்கு
Tuesday, January 21, 2014
விஜயகாந்த்?
விஜயகாந்த் என்ன செய்யப் போகிறார்? இதுதான் தற்போதைய சஸ்பென்ஸ். சில ஷேர்கள் வாங்கிய பிறகு கூட இப்படி நான் நகத்தை கடித்ததில்லை. அந்த அளவுக்கு ஆர்வத்தை இது தூண்டி விட்டிருக்கிறது. என்ன முடிவெடுப்பது என்று புரியாமல் குழம்பி போயிருக்கிறாரா? அல்லது பேரத்தை அதிகரிக்க போக்கு காட்டுகிறாரா என்பது இன்னும் சில வாரங்களில் தெரிந்துவிடும்.அந்த சஸ்பென்ஸ் முடிவுக்கு வரும்முன் நாம் நமது அலசலை பார்ப்போம்.
பிஜேபி அணி விஜயகாந்தையும் சேர்த்துக் கொண்டு பலமான மூன்றாவது அணியாக உருவாகவேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
பிஜேபி அணி விஜயகாந்தையும் சேர்த்துக் கொண்டு பலமான மூன்றாவது அணியாக உருவாகவேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
Labels:
அதிமுக,
அரசியல்,
அனுபவம்,
திமுக,
நீதிமன்றம்,
பி ஜே பி,
விஜயகாந்த்
Thursday, December 13, 2012
தேர்தல்: தமிழகமும், குஜராத்தும்...
குஜராத் தேர்தலையும் தமிழ்நாட்டு தேர்தலையும் கவனிக்கும் போது வித்தியாசங்கள் அநியாயத்துக்கு நம்மை பார்த்து சிரிக்கின்றன. மனமும் இந்த முரண்பாடுகளுக்கு பதிலை தேடுகிறது. சில காரணங்கள் இங்கே.
தமிழகம் மாநில அந்தஸ்த்தை அடைந்தது 1950 ல். குஜராத் அந்த அந்தஸ்த்தை 1960 ல் பெற்றது.
தமிழகம் இயற்கையாகவே இந்தியா என்ற மத்திய அமைப்பிலிருந்து விலகி இருக்கிறது. மாநில உணர்வு இங்கே அதிகம். இது தமிழ்நாட்டில் தேசிய கட்சிகள், மாநில கட்சிகள் என இரண்டு பிரிவை உருவாக்கியது.
Monday, July 2, 2012
மௌனம்தான் பேரமோ?
இந்தியாவிற்கு இன்று தேவைப்படும் முக்கிய சீர்திருத்தங்கள் எவை என்று கேட்டால் நான் சொல்ல விரும்புவது இந்த மூன்றைத்தான்.
1) கடுமையான மக்கள் தொகை கட்டுப்பாடு 2) தேர்தல் செலவுக்கு அரசே நிதி ஒதுக்குவது 3) நீதித்துறை சீர்திருத்தம்.
முதல் இரண்டு விஷயங்கள் பற்றி நான் பதிவுகள் போட்டிருக்கிறேன். இந்த வாரம் நீதித்துறை. நீதித்துறை என்றாலும் இங்கும் பல பிரிவுகள் வரும். இங்கே இந்த வாய்தா ஊழல் மட்டும்.
முதலில் ஒரு கதை. ஒருவன் எல்லையை தாண்டி ஏதோ கடத்துவதாக ஒரு அதிகாரிக்கு சந்தேகம். சைக்கிளில் நிறைய சரக்குகளை ஏற்றிவரும் அந்த நபரை பல முறை சோதித்து பார்த்துவிட்டார். ஒன்றும் சிக்கவில்லை.
Monday, March 5, 2012
மூன்று விஷயங்கள்: அரசியல், என்கவுண்டர், கூடங்குளம்.
இந்த வாரம் அதிகம் படித்தது என்கவுண்டர் தொடர்பான செய்திகள் மற்றும் கருத்துக்கள்தான். `இவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். ஆனால் அதற்கான சட்ட நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். என்கவுண்டர் கூடாது` என்று சிலர்.
`இறந்தவர்களுக்காக நாங்கள் கவலைப்படவில்லை. ஆனால் `பல அரசியல் ஊழல் பேர்வழிகளும், போலீஸ் கொள்ளைகாரர்களும் வெளியில் இருக்க, இந்த கொள்ளையர்களை மட்டும் ஏன் பலிகடாவாக்க வேண்டும்` இது வேறு சிலர்.
வாதப்படி பார்த்தால் எல்லாம் சரிதான். ஆனால் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல் யதார்த்தம் எப்போதுமே வேறுவிதமாகத்தான் இருக்கும்.
Labels:
அணுசக்தி,
அதிமுக,
அனுபவம்,
போலீஸ்,
வங்கிக் கொள்ளை
Tuesday, January 10, 2012
இங்கே நக்கீரர்கள் யாரும் இல்லை!
கடந்த 5 ம் தேதி வெளிவந்த தினமணி தலையங்கம் `தவறான சிகிச்சை` மிக அருமை. டாக்டர்களுக்கு மட்டும் சுரணை இருந்திருந்தால் இதை படித்த பிறகு போராட்டத்தை கைவிட்டு விட்டு சுயபரிசோதனையில் இறங்கி இருப்பார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.
அதேசமயம் டாக்டர்களை மட்டும் குறை சொல்லி பயனில்லை. ஒரு வக்கீல் தாக்கபட்டால் வக்கீல்கள் ஸ்ட்ரைக்; கண்டக்டர் தாக்கப்பட்டால் பஸ்கள் ஸ்ட்ரைக் என்று தன் இனத்துக்காக (துறை) குரல் கொடுக்கும் மனப்பான்மை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. ஜாதி மற்றும் மத உணர்வுக்கு இணையாக நாட்டை நாசாமாக்க கிளம்பி இருக்கும் புது வியாதி இது.
Tuesday, September 13, 2011
வெல்கம் பிஜேபி!
இது (பரபரப்பில்லாத) கிரிக்கெட் சீசன். கிரிக்கெட்டில் அவ்வவப்போது நமது கதாநாயகர்கள் மாறுவார்கள். உண்மையில் கிரிக்கெட்டில் நாம் எந்த ஒரு தனி நபர்களையும் துதி பாடுவதில்லை. அவர்கள் பார்மில் அடித்து ஆடும்போது தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவோம். சரியாக விளையாடாமல் கட்டை போட்டால், `அவுட்டாகித் தொலையேன்` என்று சபிப்போம்.
நாட்டிற்கு வெற்றியையும், பெருமையையும் தேடித்தருகிறார்கள் என்ற வகையில்தான் நாம் இவர்களை ஆதரிக்கிறோம். அவர்களால் நமது அணிக்கு பலம் இல்லை எனும்போது அவர்கள் புறக்கனிக்கப்படுவதையே விரும்புவோம். எனது அரசியல் நிலைப்பாடும் அந்த வகையை சேர்ந்ததுதான். மன்மோகன் சிங் என்ற நேர்மையான பொருளாதார நிபுணர் நம் நாட்டின் பிரதமராக வந்தபோது, இவரால் நாடு வளர்ச்சி பெரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் எதுவும் செய்ய இயலாமல் இவர் பொம்மையாய் இருப்பதை பார்க்கும் போது இவர் போய் சேர்ந்தால் தேவலை என்ற முடிவுக்கே வரவேண்டி இருக்கிறது.
Thursday, June 16, 2011
காங்கிரசின் ஊழல் ஆதரவும், தமிழக மக்களின் அம்மா ஆதரவும்... !
மாமியார் உடைச்சா மண் குடம், மருமகள் உடைச்சா பொன் குடம். இது மனிதர்கள் எந்த ஒரு பிரச்சினையையும் எப்படி அணுகுகிறார்கள் என்பதை புரியவைக்க சொல்லப்படும் வார்த்தை. மாமியார்கள் மட்டுமில்லை, பெரும்பாலான மனிதர்கள் பிரச்சினைகளை அணுகும் விதம் இப்படித்தான்.
கடந்த பதிவில் காங்கிரஸ் கட்சியின் மேல்மட்டத் தலைவர்கள் ஊழலை ஆதரிப்பவர்கள் இல்லை என்று சொல்லி இருந்தேன். ஆனால் இந்தியா இதுவரை கண்ட ஊழல்களில் பெரும்பாலானவை காங்கிரசுடன் தொடர்புடையவை. இப்போது வெளிவந்திருக்கும் பிரபலமான ஊழல்களிலும் காங்கிரஸ்காரர்களின் தொடர்பு இருக்கிறது அல்லது அவர்களின் ஆட்சியில் நடந்திருக்கிறது. எனவே மேம்போக்கான பார்வையிலேயே சொல்லிவிடலாம் காங்கிரஸ் என்றாலே ஊழல்தான் என்று!
Saturday, May 14, 2011
தேர்தல் முடிவுகள்: இது வலைபதிவு நண்பர்களுக்கு.
Tuesday, April 12, 2011
தேர்தல்: முட்டாள்களை அடையாளம் காண ஒரு வழி.
அனைத்துக் கட்சிகளும் தங்கள் பிரச்சாரத்தை முடித்து விட்டார்கள். இனி மக்கள் முடிவெடுக்க வேண்டிய நேரம். ஆனால் இப்போதும் சிலர், `ஆமா, இவங்க ஊழல் பண்ணி பணம் சம்பாதிப்பதற்கு நாம எதுக்கு ஓட்டு போடணும்?` என்று அபத்தமான வாதம் செய்கிறார்கள். இப்படி வாதம் செய்பவர்கள் படித்தவர்கள் என்பதுதான் கொடுமை. இதிலிருந்து ஓன்று தெரிகிறது. கல்வி அறிவு என்பது வேறு. பொது அறிவு என்பது வேறு என்று. இந்தியாவில் கல்வி அறிவு வளரும் வேகத்தில் பொது அறிவு வளரவில்லை. இவர்கள் ஓட்டு போடாததால் மிக மோசமானவர்கள் அதிகாரத்துக்கு வர வாய்ப்பு அதிகரிக்கும் என்பதை இந்த படித்த மேதாவிகளுக்கு யார் புரிய வைப்பது?
உங்கள் மகனை ஒரு நல்ல தரமான கல்லூரியில் சேர்க்க விரும்புகிறீர்கள். ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் அதற்காக நீங்கள் உங்கள் மகனை கல்லூரிக்கு அனுப்பமாட்டீர்களா என்ன? கிடைப்பதில் சிறந்ததை தேர்ந்தேடுப்பதுதானே நடைமுறை வழக்கம். ஆனால் தேர்தலில் மட்டும் மக்கள் இது போல் சிந்திப்பதில்லை. காரணம், தன் மகனின் எதிர்காலத்தில் ஒரு வருடம் கூட பாழாகிபோகக்கூடாது என்று நினைப்பவர்கள், அப்படி ஒரு அக்கறையை தேசத்தின் மீது காட்டுவதில்லை.
Thursday, March 17, 2011
தமிழ்நாட்டில் காங்கிரசின் அரசியல் தற்கொலை!
எப்படியோ திமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டுவிட்டது. இந்த கூட்டணி ஏற்படாமல் இருந்தால் நாட்டுக்கும் நல்லது, காங்கிரசுக்கும் நல்லது என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் என் ஆசையில் காங்கிரஸ் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டது.
கூட்டணி உறுதியானாலும் தலையை பிய்த்துக் கொள்ள வைக்கும் ஒரு கேள்விக்கு இங்கே பதில் இல்லை. நம்மிடம் சொல்லப்படும் எந்த ஒரு செய்தியும் கோர்வையாக இருந்தால்தானே அதை நம்பமுடியும்? `இந்த தேர்தலில் திமுக தோற்றால், அம்மா ஒரு பக்கமும் 2 ஜி ஊழல் இன்னொரு பக்கமும் திமுகவை பந்தாடும் என்பதால், (இவர்களே உருவாக்கிக் கொண்ட) பல அவமானங்களை தாங்கிக் கொண்டு திமுக காங்கிரசுக்கு பணிந்து போகிறது` என்ற செய்தி கோர்வையாக இருப்பதால், நம்மால் இதை நம்ப முடிகிறது.
Subscribe to:
Posts (Atom)










