!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Sunday, December 12, 2010

சிறை அனுபவம்: என்னை சபித்த தினமலர் வாசகர்கள்


இது ஒரு சர்ச்சை. இது மூன்று பதிவுகளாக இருக்கிறது.

                                                   இது முதல் பதிவு. 




eskalin - நியூஜெர்சி,யூ.எஸ்.ஏ
2010-09-18 22:19:37 IST
சிவானந்தம் அவர்களே, நாடு முன்னேற நீங்கள் கூறும் கருத்து அபத்தமானது. நாடு முன்னேற விவசாய நிலங்களை தாரை வார்ப்பது, பெற்றோர்களை சாகடித்து பணத்தை எடுத்து கொண்டு பணக்காரன் ஆவதற்கு சமம்....

எ.கே. ravichandran - Chennai,இந்தியா
I have read the comments of Mr. Sivanandam, since many friends objected to
his comments, i dont want to add further, but I am suprisesd we have such people in our country who donot know the importance of agriculture - food grains. I will pity on him. Regards...
(Already the policemen, lawyers and judges are pitied on me. Now you also joined the list of my sympathizer    

c.ramasamy - tup,இந்தியா
திரு ரா.சிவானந்தம் அவர்களே, நீங்கள் புழல் சிறையில் உள்ளிருந்து பார்த்தால் நீங்கள் எழுதியது சரியே. ஆனால் வெளியில் நாட்டு நடப்பு ரொம்ப மோசமாக உள்ளது தெரியுமா உங்களுக்கு??? இன்னமும் நமது நாட்டில் 40 % மக்கள் வறுமை கோட்டுக்கு கீழே உள்ளார்கள் தெரியுமா? நம் நாடு வேறு, ஜப்பான் நாடு வேறு. அந்த நாட்டில் ஊழல் எந்த அளவுக்கு இருக்கிறது என்று எனக்கு தெரியாது. ஆனால் நம் நாட்டில் சும்மா கண் சிமிட்டும் நேரத்தில் ஊழல் நடக்கிறது, நம் நாட்டில் இன்னும் நெறையபேர்க்கு மூன்று வேளை சோறு கிடைப்பதில்லை, ஒருவேளை உங்களுக்கு சிறைக்குள் மூன்று வேளை உணவு கிடைப்பதால் (மன்னிக்கவும். நான் சிறையில் இரண்டு வேளைதான் சாப்பிட்டேன்)   நமக்கும் கீழ் உள்ளவர்களை மறந்து இது மாதிரி தவறான கருத்துக்களை எழுதவேண்டாம்(புத்திசாலியாக நினைத்துக்கொண்டு) நம் நாட்டில் விவசாயம் அவசியம், விவசாயத்தில் தன்னிறைவு அடைந்ததால்தான் கிலோ அரிசி 1 ரூபாய்க்கு கொடுக்கமுடிகிறது. 100 கோடி மக்களும் வறுமை கோட்டுக்கு மேல் இருக்கிறார்கள் என்றால் எதற்கு இந்த 1 அரிசி திட்டம், தமிழ் நாட்டில் எவ்வளவோ புறம்போக்கு நிலம் இருக்கிறது. அதில் தொழில் தொடங்கட்டும், நன்றாக விளைகின்ற நிலத்தை நாசப்படுத்துவது நம் கண்ணை நாமே பழுத்த கம்பியால் குத்துவதற்கு சமம்....

வ.நந்தகுமார் - chennai,இந்தியா
2010-09-18 14:56:14 IST
சிறை சென்றும் அறிவு வரலையே!!! ஐயகோ... தெரியலீங்கன்னா. என்னை பத்தி நானே பெருமையா பேசிக்க நான் என்ன கலைஞரா? எனக்கு சரின்னு படர விஷ்யங்கள எழுதறேன். இத படிக்கிற வாசகர்கள்தான் பதில் சொல்லணும்.   

SPR Gnanasingh - Tiruttani,இந்தியா
2010-09-18 12:51:57 IST
தினமலருக்கு எனது கனிவான வேண்டுகோள். விவசாயத்தின் முக்கியத்துவத்தை அடிக்கடி மக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுகிறேன். மாதம் ஒருமுறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை உரக்க சிந்தனை பகுதியில் வெளிஇட்டால் மிக நன்றாக இருக்கும். அல்லது தலைப்பு பகுதியில் வெளியிட்டால் நன்றாக இருக்கும். தினம் வெளியிட்டால் கூட நன்றாக இருக்கும். மக்கள் விவசாயத்தின் முக்கியத்துவத்தை மறக்காமல் இருக்க இதை கட்டாயம் செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். நாட்டை நேசிக்கும், அறிவுள்ள, விவசாயத்தின் முக்கியத்தை உணர்ந்த, அது எப்படி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என்பதை அறிந்த ஒரு பொருளாதார மேதையிடம் விளக்கங்களை கேட்டு புள்ளி விவரத்துடன் வெளியிட்டால் மக்கள் பயன் பெறுவார். எப்பவோ ஒரு முறை வெளியிட இது தினம் நடக்கும் செய்தி இல்லை. அனைத்து மக்களின் வாழ்வுடன் தொடர்புடையது. தேசபற்று உள்ள தினமலர் இதற்கு செவி சாய்க்கும் என்று நம்புகிறேன்....
கண்டிப்பாக தினமலர் இதற்கு செவிசாய்க்க வேண்டும். ஆனால் இருதரப்பு வாதங்களுக்கும் சமஉரிமை தரவேண்டும்.   

M இந்தியன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-18 12:33:52 IST
தொடர்ச்சி....மேலை நாடுகள் இந்தியாவில் தொடங்கும் தொழில்களை கவனித்தால் நன்றாக தெரியும். ஒன்று கூட விவசாயத்துடன் தொடர்பு இருக்காது. மிகவும் எதிர் மறையாக இருக்கும். இன்னும் சொல்ல போனால் விவசாயத்தை அழிப்பவையாகதான் இருக்கும். கார், ஆடை, மென்பொருள் உற்பத்தி இவற்றை உதாரணத்திற்கு எடுத்து கொள்வோம். இந்த துறைகளில் உற்பத்தி ஆகும் பெரும்பாலான பொருள்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யபடுகிறது. குறைந்த அளவில்தான் உள்நாட்டு மக்கள் பயன்படுத்துகின்றனர். இவை அனைத்தும் நமது விவசாய நிலங்களை அழித்து அந்த இடத்தில் உருவாக்கபட்டது. அதுவும் ஆடை உற்பத்தியில் வெளியாகும் கழிவுகளால் நிலம், நீர், காற்று இப்படி அனைத்தும் வெகுவாக மாசுபடுகின்றனர். அதை சுற்றி உள்ள விளை நிலங்கள், நிலத்தடி நீர் அழிக்கபடுகின்றனர். சரி அப்படி உற்பத்தி செய்யும் பொருகள் அனைத்தும் நம் மக்களா பயன்படுத்துகின்றனர். இல்லையே. எங்கயோ எவனோ பயன்படுத்தும் ஆடைகளுக்கு நாம் ஏன் நமது நிலத்தை, நீரை மாசுபடுத்த வேண்டும். கார் விசயத்திலும் இதே நிலைதான். இதற்கு ஓரே தீர்வு விவசாயத்தில் அதிகம் கவனம் செலுத்தி, தொழில் புரட்சியை பெருக்கி, உற்பத்தியை பெருக்கி நாம் தன்னிறைவு அடைவது மட்டுமலாமல் ஏற்றுமதி செய்து பொருளாதரத்தை பெருக்க வேண்டும். மற்ற துறைகளில் நமக்கு என்ன தேவையோ அதை மட்டும் உற்பத்தி செய்து, விவசாய நிலங்களை பாதிக்காத வகையில் அதிக உற்பத்தி செய்து தன்னிறைவோடு ஏற்றுமதியும் செய்ய கடுமையான சட்டம் கொண்டு வரவேண்டும். இதுதான் நம் நாட்டின் இருக்கும் சட்டங்களில் மிக பெரிய கடுமையான சட்டமாக இருக்க வேண்டும். அதில் உணவு இறக்குமதி செய்ய தடையும் விதிக்க வேண்டும்....

இரா. முத்துப்பாண்டியன் - சிவகங்கை,இந்தியா
2010-09-18 12:06:53 IST
நல்ல வேளை சிவானந்தம் சிறையில் இருக்கிறார். அவரை சாகும் வரை அங்கேயே வைத்திருங்கள். (சாரி. உங்க ஆசை நிறைவேறல). அதுதான் அனைவருக்கும் நல்லது. ஜப்பானியர்களைப் பற்றி இவர்தான் முட்டாள் தனமாகப் புரிந்தது கொண்டிருக்கிறார். மேலும் சிறையில் தங்கு தடையின்றி முன்று வேளை உணவு கிடைத்து விடுவதால் அதைப் பற்றிய கவலை அவருக்கு இல்லை போலும். எந்த ஒரு நாடும் இறக்குமதியை மட்டுமே நம்பி இருக்க முடியாது. விவசாயம் தான் முதுகெலும்பு என்பதை மறந்தது விட வேண்டாம்....

M இந்தியன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-18 11:34:03 IST
தொடர்ச்சி.............கார், உடை, இருப்பிடம் இல்லாமல் வாழலாம். ஆனால் உணவு இல்லாமல் வாழ முடியாது. இந்த உலகம் அழியும் வரை என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் எந்த ஒரு கால கட்டத்திலும் உணவு இல்லாமல் மனிதன் வாழ முடியாது. இதுதான் இந்த பிரபஞ்சத்தின் விதி. அப்படி இருக்கையில் உலகின் மிக பெரிய விவசாய நாடான இந்தியா விவசாயத்தை ஊக்குவித்து அதில் நிறைய விஞ்ஞானங்களை புகுத்தி, தொழில்களை உருவாக்கி உணவை உற்பத்தி செய்து தன்னிறைவோடு இல்லாமல் ஏற்றுமதி செய்யும் பட்சத்தில் இந்தியா உலக அளவில் தலை நிமிரும். அப்படி இல்லாமல் என்னதான் விவசாயம் சாராத தொழில்களை ஊக்குவித்து தொழில் புரட்சி செய்தாலும் அது ஒரு தற்காலிகமே. விவசாயத்துக்காக நாம் யாரிடமும் விஞ்ஞானத்தை கடனோ அல்லது கையேந்தவோ தேவை இல்லை. அதற்கு தேவையான இயற்கை வளங்களான தரமான நிலம், தற்பவெப்பநிலை, நீர், காற்று போன்றவை உள்ளது. ஜப்பான் காரனுக்கு இவை இல்லை. அவனுக்கு விவசாயத்தை ஊக்குவிக்க முடியவில்லை. அவனுக்கு எது உகந்ததோ அந்த துறையில் தொழில் புரட்சியை செய்கிறான். ஜப்பான் மட்டும் அணுகுண்டுக்கு இரையாகாமல் இருந்திருந்தால் இந்நேரம் உலகுக்கே உணவை வழங்கும் நிலையில் இருந்திருப்பான். அதுதான் அவன் மூளை. நம் மக்களின் மூளையோ எதிலும் தன்னிறைவு அடையாமல் இருப்பது. இந்தியாவின் விவசாய நிலங்களை குறைத்து, உணவு உற்பத்தியை குறைக்க மேலை நாடுகள் கங்கணம் கட்டி கொண்டு செயல்படுகின்றனர். அதன் விளைவுகளை நாம் மெல்ல மெல்ல உணர தொடங்கி உள்ளோம். thodarum..........

சூனா பானா - மடிப்பாக்கம்சென்னை,இந்தியா
2010-09-18 11:25:44 IST
ஏம்பா சிவானந்தம், விவசாய நிலத்தை எல்லாம் தொழில் வளர்ச்சிக்கு எடுத்துகிட்டா அப்புறம் சொத்துக்கு என்ன செய்யுறது. ஏற்கெனவே கொள்முதல் செஞ்சு வெச்சிருக்கிற அரிசியை ஒரு ரூபாய்க்கு எதனை நாளைக்கு கொடுப்பாங்க? கொஞ்ச நாளாவே ரியல் எஸ்டேட்காரங்க இருக்கிற கொஞ்ச நஞ்சம் காடு கரையையும் பிளாட் போட்டு விதிகிட்டு இருக்கானுங்க. போதாகுறைக்கு மிச்சமிருக்கிற விவசாய நிலத்தையும் தொழில் செய்ய எடுத்திக்கிட்டா அப்புறம் மாத்திரையை சாப்பிட்டா உயிர் வாழுறது? இந்த மாதிரி அரைவேக்காட்டு தனமா கருத்து சொல்றத விட்டுட்டு, போய் ஜெயில்ல காய்கறி தோட்டம் ஏக்கரா கணக்குல போட்டிருக்காங்களே (ஜெயில சினிமாவுல பாத்தீங்களோ?)   அதுக்கு தண்ணி ஊத்துயா ... அங்க போய் கேக்க வேண்டியதுதானே ஏன் விவசாயம் பண்றீங்க பேசாம வெளியில வாங்கிக்கலாமேன்னு .... இத மாதிரி மக்களுக்கு லூசுதனமா அறிவுரை சொல்ற கடிதங்கள வெளியிடுற தினமலர சொல்லணும் ..... உள்ள போனமா, ஒழுங்க இருந்தமா, சீக்கிரம் வெளியில வந்தமான்னு இல்லாம, கருத்து சொல்றாராம் கருத்து... போய்யா நீயும் உன் யோசனையும்.......

ராமலிங்கம் - Singapore,சிங்கப்பூர்
2010-09-18 11:23:13 IST
ரா சிவானந்தம் சொல்வது 100 % உண்மை. இது அரசியல்வாதிகளுக்கு தெரியாமல் இருக்காது. குட்டையை குழப்பினள்தான் மீன் கிடைக்கும் என எல்லா அரசியல் வாதிகளும் நினக்கிறார்கள் என்று தோன்றுகிறது... ஏதோ ஒரு ஓட்டாவது கிடைச்சுதே! சந்தோஷம்.  ஆனாலும் டெபாசிட் போயிடுச்சு.  

M இந்தியன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-18 11:02:47 IST
தொடர்ச்சி.......உலக நாடுகளை ஒப்பிடும் போது இந்தியாதான் விவசாயத்துக்கு தேவையான தட்பவெப்பநிலை, மழை, தரமான நிலம் போன்றவற்றை அதிகம் கொண்டுள்ளது. ஆதலால்தான் இவ்வளவு மக்கள் தொகை இருந்தும் உணவு உற்பத்தியில் இதுவரை ஓரளவு தன்னிறைவு பெற்றுள்ளோம். ஆனால் அதை தக்க வைப்பது என்பது மக்களிடத்திலும், அரசிடம் தான் உள்ளது. மேலை நாடுகள் அனைத்தும் தங்களுக்கு தேவையான உணவு உற்பத்தியை தாங்களே உற்பத்தி செய்கின்றனர்.  உதாரணம் நான் நேரிடையாக பார்த்த பிரான்ஸ், இத்தாலி போன்ற நாடுகள். (நீங்க இந்த பதிவ தொடர்ச்சியா படிக்கணும். அதிலும் இந்த தொடர்ச்சில   நான் கடைசியா கொடுத்திருக்கிற புள்ளிவிவரத்தை கண்டிப்பா  படிக்கணும்.)  அவர்களுக்கு விவசாயத்தின் முக்கியத்துவம் நன்றாக தெரிந்ததால்தான் விவசாயத்தை மட்டும் தங்களிடத்தில் வைத்து கொண்டு இதர சுற்றுப்புற சூழலை விரைவாக வெகுவாக மாசுபடுத்தும் கார், ஜவுளி, மென் பொருள் உற்பத்தி போன்றவற்றை இந்தியா போன்ற நாடுகளிடம் தள்ளி விடுகிறார்கள். நம்முடைய அரசியல்வாதிகளும் கட்டிங்கை வாங்கிகொண்டு எதிர்கால சந்ததியை பற்றி கொஞ்சமும் கவலை இல்லாமல் விவசாய நிலங்களை காவு கொடுக்கின்றனர். அதிலும் நம் தமிழ்நாட்டில் மஞ்சள் துண்டு குடும்பத்தின் அட்டகாசம் விண்ணை தொட்டு விட்டது. மேலை நாடுகளும் இந்தியாவிடம் எதிர்பார்ப்பதும் இதுதான். இப்பவே கோதுமை, பருப்பு, சர்க்கரை போன்ற பொருள்கள் இருக்குமதி செய்யபடுகிறது. அதை இதுநாள் வரை உற்பத்தி செய்த விவசாயிகள் போதிய உற்பத்தி விலை கிடைக்காமல் உற்பத்தியை நிறுத்தி விட்டனர். அந்த நிலங்கள்தான் இன்று தொழில் சாலைகளாகவும், பிளாட்டுகளாகவும் மாற்ற பட்டு அந்நிய நாடுகளுக்கு தாரைவார்க்கபடுகின்றனர். Thodarum.........

M இந்தியன் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
2010-09-18 10:34:18 IST
ரா.சிவானந்தம். விவசாயத்தை பற்றி உங்களுக்கு கொஞ்சம் கூட விழிப்புணர்வு இல்லை. நீங்கள் சிறை அதிகாரியா அல்லது சிறை கைதியா என்பது தெரியவில்லை. ஒரு வேளை நீங்கள் சிறை கைதியாக இருந்தால் அதற்கு நீங்கள் பொருத்தமானவர் என்பதை உங்களின் கருத்துக்கள் மூலம் அறியலாம். குதிரைக்கு கடிவாளம் கட்டினது போன்ற உங்கள் கருத்துக்கள்தான் குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவது போல் உள்ளது. ஜப்பானை பற்றிய உங்கள் கருத்து மிக தவறு. அவன் ஏன் தனது நிலங்களை தொழில் வளர்சிக்காக பயன் படுத்துகிறான் என்று தெரியுமா. இரண்டாம் உலகப்போரில் ஜப்பானின் மொத்த நிலங்களும் அணு குண்டுகளுக்கு இரையாகி இனி பல நூறு ஆண்டுகளுக்கு அந்த நிலத்தில் புல் பூண்டுகளே முளைக்காது என்ற நிலையில்தான் அவன் கையில் எடுத்த ஆயுதம் விவசாயம் சாராத தொழில் புரட்சி. ஆனால் அவர்களுக்கு தேவையான உணவு பொருள்களை அவனே உற்பத்தி செய்து தன்னிறைவு பெறுகிறான். எப்படி என்றால் கப்பலில் விவசாய நிலங்களை செயற்கை முறையில் உண்டாக்கி அதில் விவசாயம் செய்து உணவை உற்பத்தி செய்கிறான். உலகத்திலே ஜப்பானில்தான் அத்தியாவசிய உணவு பொருள்களின் விலை மிக அதிகம். காரணம் மேற்கூறியவைதான். எனவே விவசாயம்தான் ஒரு நாட்டின் முதுகெலும்பு. அதுவும் மக்கள் தொகை அதிகம் கொண்ட, உணவுக்கு முக்கியத்துவம் தரக்கூடிய இந்திய போன்ற நாடுகளுக்கு விவசாயம் மிக முக்கியம். தொடரும்..........

saran - singapore,இந்தியா
2010-09-18 09:12:45 IST
பத்தே பத்து சோர வச்சு தக்கனூண்டு மீன் சதையால உருட்டுன சுசின்ர ஜப்பான் சோத்துருண்டையோட விலை நம்மூரு காசுக்கு கிட்டத்தட்ட 100 ரூபா. நமக்கு 50 சாப்பிட்டாலும் வயுத்துக்கு பத்தாது. சாப்பாட்டுக்காக அதிகமாக செலவு வைக்கும் நாடு அவனோடது, அவன் பொருளாதாரத்தில் முன்னேறி சாதிச்சது என்ன?....

k.r.krishnamoorthy - chennai,இந்தியா
2010-09-18 07:02:11 IST
The problem with people like Sivananadan is they misunderstand the term growth. Every economic growth model should be sustainable  (agreed) . The case of Japan is an exception in the sense the citizens of Japan are a highly disciplned society like the ancient athens.Self deniel and patriotism in in their gene. Even there they never allowed conversion of their agricultural land into industrial land.And after being No.2 in the global economic scene they are fast sliding into a nation of also ran due to modern culture and public getting disenchanted with government (Even the rich sometime getting bored with their life. but that  does`t mean that they dislike their status). This within 60 years or 2 generations. What is ailing India. It is not lack of resource,lack of talents,lack of skills. It is deep rooted disparity betweeen the rich and poor.It is corruption in high places. It is feudal attitudes of our bearocrats and so called business men.Due to these factors the vision to accomadate the poor which is ruining the country. That the government tries to encourage NGO's which are again run by Eleitists for vanity purpose will serve no purpose. A deep introspection by affuluent and rich is essential at this moment. A country which gave principles of Dharma is in the clutches of Adharma, and that too from educated white collared criminals.... your sentences are incomplete. let me complete that.  ...and that too from educated white collared criminals.... and also by half-baked educated patriots  

விவசாயிMuthukarthi - sathyamangalam,இந்தியா
2010-09-18 04:16:04 IST
குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதா? ரா.சிவானந்தம், மத்திய சிறை-2, புழல், கைதியெல்லாம் கருத்து சொன்னால் இப்படித்தான் இருக்கும்!! (என்னது! ஒரு மனுஷன் கைதியாயிட்டா  கருத்து சொல்ல கூடாதா? நான் காந்தியோட the story of my experiments with truth படிச்சேனே! அவ்வளவும் வேஸ்டா?) இனி சோறு வேன்டாம், கம்பனிகளில் தயாரிக்கபடும் மாத்திரைகளே போதும்!!!...

அரசு - Chennai,இந்தியா
2010-09-18 00:46:33 IST
திரு ரா.சிவானந்தம், மத்திய சிறை-2, புழல், அவர்களே. தொழில் வளர்ச்சி தேவை தான். அதற்காக சாப்பாட்டுக்கு வெளிநாட்டிடம் பிச்சை எடுப்பீர்களா? ஹெக்டேர் கணக்கில் உள்ள தரிசு நிலத்தில் தொழிற்சாலை அமைக்கட்டும். எனக்கும் உங்க கருத்துல உடன்பாடு உண்டு. ஆனா விவசாயத்துக்கு தண்ணி எப்படி அவசியமோ, அதே போல் தொழிற்சாலைகளுக்கும் சில அடிப்படை வசதி தேவை. யாருமே இல்லாத ஊர்ல அவங்க யாருக்குப்பா டீ போடுவாங்க?  நல்ல வளம் கொழிக்கும் விவசாய நிலத்தை தொழிற்சாலை அமைப்பதில் என்ன பயன்.? ஜப்பான் மக்கள் தொகையோடு இந்திய மக்கள் தொகைய ஒப்பிட்டு பாருங்கள்.நிச்சயம் உணவு பஞ்சம் வரும்....

********************************************

இவர்களை இந்தளவு கோபப்பட வைத்த தினமலரில் வெளியான எனது கடிதம் `குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதா? 



0 comments:

Post a Comment