!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, February 27, 2012

வங்கிக் கொள்ளைகளும், போலீசுக்கு சில ஆலோசனைகளும்!

சிறை பதிவை தொட்ட நேரம் சரியில்லை போலிருக்கிறது. மற்ற விஷயங்கள் சிந்தனையை இழுக்கிறது. வங்கிக் கொள்ளைகள் மீதுதான் இப்போதைய கவனம்.

மக்களை பொறுத்த வரையில், அதிர்ச்சி அளிக்கும் அளவுக்கு சில வங்கிக் கொள்ளைகள் நடந்தன, போலீசார் விரைவாக செயல்பட்டு அவர்களை என்கௌன்டரில் கொன்று விட்டார்கள். ஆக செய்தி முடிந்துவிட்டது.

ஒரு பரபரப்பான கேஸில் போலீசார் வடிகட்டிய பொய்யை சொல்ல வாய்ப்பில்லை. இறந்தவனில் ஒருவன் அப்பாவியாய் இருந்தாலும் அந்த உண்மை வெளிவந்து போலீசாரின் தலை உருளும். எனவே போலீசாரின் வாதத்தை நம்புவோம். ஆனால் இவர்கள் கொல்லப்பட்ட விதம் எப்படி என்பது வேண்டுமானால் விவாதமாகலாம்.

Friday, February 24, 2012

ஷேர் மார்கெட். பிளாட்பார ஃபாரம் முதல் Odin Diet வரை

தலைவலியில் மிகப் பெரிய தலைவலி அரசியல்வாதியாக இருப்பதுதான். மற்ற துறைகளில் அதை தொடர்ச்சியாக கவனிப்பதன் மூலம் அந்த துறை குறித்து ஆழ்ந்த அறிவை பெறமுடியும். ஆனால் அரசியலுக்கு அப்படி சொல்ல முடியாது. இது பல துறைகளை கட்டி ஆளும் துறை என்பதால் எதிலும் உங்களால் பாண்டித்தியம் பெற முடியாது. சில துறைகளில் ஆர்வம் காரணமாக கூடுதலாக கவனிக்கலாம். அவ்வளவுதான்.

இங்கே வாரம் ஒரு பிரச்சினை எழும்பும், உடனே அது குறித்த ஆராய்ச்சியில் மூழ்குவோம். அதில் ஓரளவு புரிதல் வருவதற்குள் இன்னொரு பிரச்சினை நம் கவனத்தை ஈர்க்கும். இப்படி அங்கே இங்கே மேய்வதுதான் அரசியல்வாதிகளின் வேலை. இதே தலைவலிதான் அரசியல் குறித்து எழுதுபவர்களுக்கும்.

Thursday, February 16, 2012

2g கொள்ளையின் மூன்றாவது மோசடி!


இதுவரை 2g யில் இரண்டு மோசடிகளைத்தான் நீங்கள் கேள்விபட்டிருப்பீர்கள். ஓன்று: முறைகேடாக லைசன்ஸ் பெற்றது. இரண்டு: லைசன்ஸ் வாங்கிய பிறகு, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு பங்குகளை விற்றதன் மூலம் அநியாய லாபம் பார்த்தது.

தற்போது அந்த லைசன்ஸ் ரத்து செய்யப்பட்டதன் மூலம் அந்த மோசடி முறியடிக்கப்பட்டது. இனி அவர்கள் புதிதாக லைசன்ஸ் எடுத்தாக வேண்டும். இவர்களின் பங்குகளை வாங்கிய வெளிநாட்டு நிறுவனங்கள் ஏதோ ஒரு வகையில் பேசி அவர்களுடைய பணத்தை வாங்கிவிடுவார்கள் அல்லது தங்களின் தொழிலை தொடர்கிறார்கள். அது அவர்களின் தலைவலி. எனவே அதை விட்டுவிடுவோம். ஆனால் இங்கே ஒரு மூன்றாம் கோணம் இருக்கிறது. அதாவது சொல்ல மறந்த கதை ஓன்று இருக்கிறது. நாம் அதை மட்டும் பார்ப்போம்.

Tuesday, February 14, 2012

2g கொள்ளை. இது வெளிச்சத்துக்கு வராத கொள்ளை!


ஆங்கிலத்தில் laughing all the way to the bank என்று ஒரு பன்ச் டயலாக் உண்டு. அதாவது ஒரு பிரச்சினையில், மற்றவர்களை முட்டாளாக்கிவிட்டு ஜெயித்தவர் பேங்குக்கு சிரித்துக் கொண்டே போனாராம். இந்த 2g வழக்கிலும் அப்படி சிரிப்பவர்கள் இருக்கிறார்கள். எனது ஷேர் மார்கெட் அனுபவத்தில் நான் புரிந்து கொண்டதை சொல்கிறேன், யார் சிரிக்கிறார்கள் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள.

இங்கே நான் உங்களுக்கு ஷேர் மார்கெட் பற்றி கிளாஸ் எடுக்கப் போவதில்லை. மேலோட்டமாக இந்த மோசடி மட்டும்.

இங்கே Insider Trading என்ற மோசடியை பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். ஒரு கம்பனி பற்றிய தகவல்களை, அவர்களிடமிருந்து முன் கூட்டியே தெரிந்து கொண்டு, அந்த ஷேரை குறைந்த விலையில் வாங்கி, பின்னர் அதை நல்ல விலைக்கு விற்று லாபம் பார்ப்பதுதான் அது. இப்படி கம்பனி பற்றிய தகவல்களை மற்றவர்களுக்கு சொல்வது குற்றம்.

Sunday, February 5, 2012

2g உச்ச நீதிமன்ற தீர்ப்பு. நாட்டுக்கு லாபமா, நஷ்டமா?

சில விஷயங்களில் தவறை தவறு என்று கண்டிக்க முடியாது. அதேபோல் சில விஷயங்களில் சரி எனப்படுவதை சரி என்றும் சொல்லமுடியாது.

மேலே சொன்ன வார்த்தைகள் உங்களுக்கு குழப்பமாக இருக்கும். ஆனால் 2g வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தடாலடி தீர்ப்பு இந்த வகைதான். இந்த தீர்ப்பு சட்டத்தை நிலைநாட்டி ஒரு தவறான செயலை ரத்து செய்திருக்கலாம். ஆனால் இதை இப்படி அணுகியது தவறாகவும் போகலாம்.

இந்த உதாரணத்தை பாருங்கள். ஒரு மைனர் பெண்ணுக்கு மேஜர் ஆகாமலேயே கட்டாயத் திருமணம் ஆகிவிட்டது. எனவே இந்த திருமணம் செல்லாது என்று ஒருவர் கோரிக்கை வைக்கிறார். அவர் மைனர் என்பது ஊர்ஜிதமாகி இந்த திருமணம் செல்லாது என்று தீர்பளிக்க முடியுமா?

Wednesday, February 1, 2012

இவர் டாக்டரா, வியாபாரியா?

சிறை அனுபவம் குறித்த் பதிவு அனுமார் வால் போல் நீள்கிறது. முழுவதையும் எழுதிவிட்டுத்தான் அதை வெளியிட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறேன். இதற்கிடையில் வேறு சில அனுபவங்கள். பதிவுலகில் காணாமல் போய்விடக் கூடாது என்பதற்காக இந்த இடைக்கால பதிவு.

சமீபத்தில் என்னுடைய பழைய பதிவு ஓன்று ஒரே நாளில் அதிகம் படிக்கப்பட்டது. அப்படி என்ன அதில் எழுதி இருக்கிறேன் என்ற ஆர்வம் ஏற்பட, மீண்டும் படித்தேன். சில குறைகள் தென்பட்டது. திருத்தினேன்.

அதாவது ஏற்கனவே நான் சொன்ன ஒரு விஷயம் தற்போது அபத்தமாக தெரிய, அதை திருத்திவிட்டேன். அது தேர்தலுக்கு முன் எழுதப்பட்டது. அந்த சூழ்நிலையில் அந்த வார்த்தைகள் பொருத்தமாக இருந்திருக்கும். தற்போது அதை படித்தால் அபத்தமாக இருக்கும். `சவுக்கு` சங்கர் தளத்தில் கட்டுரைகளை தொடர்ந்து படிப்பதாலும், சில கட்டுரைகள் நிறையவே வெளிச்சத்தை காட்டியதாலும் இந்த மாற்றம்.