திருப்பரங்குன்றம் குறித்த ஹேங்கோவர் பலருக்கு முடித்திருக்கலாம். எனக்கு இன்னும் தொடர்கிறது. காரணம், ஏகப்பட்ட சந்தேகம் வந்தது, அதற்கான விடை கிடைக்காததால் இன்னமும் அது குறித்த செய்திகளை படித்துக் கொண்டிருக்கிறேன்.
முதலில் இந்த தீபத்தூண் விஷயத்தை கவனிப்போம். இதில் ஏன் இவ்வளவு சர்ச்சை வருகிறது என்பது எனக்கு புரியவில்லை. இது உண்மையிலேயே தீபத்தூண்தானா அல்லது சர்வே கல்லா என்பது கண்டுபிடிப்பது அவ்வளவு கஷ்டமான விஷயமா?
100-150 ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோவிலில் தீபம் ஏற்றப்படுகிறது. அதுவரைக்கும் பிள்ளையார் சாட்சி சொல்வார். அதற்கு முன் இந்த சர்ச்சைக்குரிய தீபத்தூணில் ஏற்றப்பட்டிருக்கலாம்.
ஒருவேளை அது சர்வே கல்லாக இருந்தால் அது 1800 களில் நிறுவப்பட்டது. ஆக மொத்தத்தில் 250 வருட வரலாறு இருக்கிறது. ஆனால் அதற்கும் முன்பும் எங்கேயாவது தீபம் ஏற்றி இருப்பார்கள் அல்லவா? அது எந்த இடம்?
அப்படி ஒரு இடம் இருந்தால் இந்த சர்ச்சை வந்திருக்காது. அப்படி இல்லாதபட்சத்தில் இங்கே இதற்கான கேண்டிடேட் பிள்ளையாரும் இந்த சர்வே கல்லும்தான். பிள்ளையார் இல்லையென்றால் பை டிபால்ட் இந்த தீபத்தூண் தான் வரும்.
இங்கே ஒரு வாதத்திற்கு அந்த சர்வே கல் என்றே வைத்துக்கொள்வோம். நமக்கு தீபம் ஏற்றவேண்டும், அது உயரமாக இருக்கவேண்டும், அந்த அடிப்படையில் இந்த கல் வசதியாக இருக்கிறது என்று இந்துக்கள் இங்கே ஏற்றிவிட்டார்கள் என்றும் வைத்துக்கொள்வோம். இதை கவனித்த பிரிட்டிஷ் அரசு அதை தடை செய்திருக்கிறது. வேறு இடம் பாருங்கள் என்றும் சொல்லிவிட்டது.
எனவே அவசரத்துக்கு இடம் கிடைக்காமல் பிள்ளையாரிடம் கேட்கும்போது, சரி, தம்பி வீட்டு பங்க்ஷன் தானே என்று பிள்ளையாரும் அவருடைய இடத்தை கொடுத்துவிட்டார். கதை சுபமாக முடிந்தது.
ஆனால் வெள்ளைக்காரன் ஒரு ரிக்கார்ட் பைத்தியம். அவன் பாத்ரூம் போனாலும் காலை 7.42 சென்றேன், 7.57 வெளியே வந்தேன் என்று எழுதி வைக்கும் அளவுக்கு வரலாற்றை பதிவு செய்வான்.
வெள்ளைக்காரர்களை ஏதாவது ஒரு விஷயத்தில் பாராட்டவேண்டுமென்றால், இந்திய வரலாறு ஒழுங்காக (அதில் சில கோளாறுகள் இருந்தாலும்) தொகுக்கப்பட்டது அவர்களுடைய இந்த குணம் காரணமாகத்தான் என்றும் சொல்லலாம்.
எனவே இந்த சர்வே கல்லில் தீபம் ஏற்றக்கூடாது என்று பிரிட்டிஷ் அரசாங்கம் உத்தரவிட்டிருந்தால், ஏன் இப்படி ஒரு உத்தரவு பிறப்பித்தோம் அதற்கான காரணம் என்ன என்பதையும் எங்கேயாவது குறிப்பு எழுதி வைத்திருப்பார்கள். அதை தேடுவது சிரமமாக இருக்கலாம். இருந்தாலும் வேறு வழி இருக்கிறது.
தற்போது ஜனாதிபதிக்கு ஏதாவது சநதேகம் என்றால் உச்ச நீதிமன்றத்திடம் Presidential reference என்ற அடிப்படையில் சந்தேகம் கேட்பார். அவர்களும் அதை ஆராய்ந்து விளக்கம் கொடுப்பார்கள். அதேபோல் இந்த விஷயத்திலும் தற்போதைய பிரிட்டிஷ் அரசிடம், கடந்த காலங்களில் நீங்கள் எடுத்த ஒரு முடிவால் தற்போது எங்களுக்குள் சண்டை வந்துவிட்டது. எனவே நீங்கள் இதை ஆராய்ந்து சொல்லுங்கள் என்று சொன்னால் பிரச்சினை தீர்ந்தது.
இரண்டாவது, திருப்பரங்குன்றம் vs சிக்கந்தர் தர்கா குறித்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய பிரைவி கவுன்சில், அந்த தீர்ப்பில் இந்த தீபத்தூண் அல்லது சர்வே கல் குறித்து ஏதாவது ஒரு குறிப்பு நிச்சயம் எழுதியிருப்பார்கள் என்று நினைத்தேன். அந்த தீர்ப்பு தற்போது இணைய உலகத்தில் கிடைக்கலாம் என எனக்கு தெரிந்த AI க்களிடம் `இந்த தீர்ப்பின் நகல் கிடைக்குமா` என கேட்டேன்.
`இணையத்துல இருப்பதைத்தான் என்னால் தேடி எடுக்க முடியும். இது ரொம்ப ஆழமா இருக்கு, ஒண்ணு அந்த காபி மெட்ராஸ் பிரிட்டிஷ் லைப்பரில இருக்கும், இல்ல லண்டனுக்கு போய்த்தான் தேடணும், என்னால முடியல` என்று பதில் வந்தது.
எனவே லண்டனுக்கு மெயில் அனுப்புவதை தவிர வேறு வழியில்லை.
வழியில் ஒரு நகை கிடக்கிறது. கவரிங்கா தங்கமான்ன தெரியவில்லை. ஒரு நகைக்கடைக்காரனிடம் காட்டினால் அவன் உரசி பார்த்து வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுனு சொல்லிடுவான். அதே நடைமுறைதான்.
ஏற்கனவே கீழடியில பல புராதன பொருட்கள் கிடைத்தபோது மத்திய பிஜேபி அரசு அதை மறுத்தது. ஆனால் தமிழக அரசே அந்த தொல்பொருள் ஆய்வை தொடர்ந்து நடத்தி, அங்கே கிடைத்த பொருட்களை அமெரிக்காவுக்கு அனுப்பி கார்பன் டேட்டிங் பாத்து அதனோட டேட் ஆப் பர்த் என்ன என்பதை கண்டுபிடித்தது. அங்கே மட்டும் விஞ்சானத்தை நம்பும் திமுக அரசு இங்கே அதை ஏன் செய்யவில்லை?
திடீர் சந்தேகம். ஒருவேளை இப்படி இருக்குமோ?
அதாவது இரண்டு தரப்பும் சொல்லும் விஷயங்கள் நம்பும்படி இருக்கிறது. இதில் உண்மை பிரிட்டிஷ்காரனுக்குத்தான் தெரியும். ஆனால், ஒரு வேளை, அநேகமாக, பை சான்ஸ், மே பி என்று சில சிந்தனைகள் வருகிறது.
அதாவது அந்த இடத்தில் தீபம் பல நூற்றாண்டுகளாக ஏற்றப்பட்டிருக்கிறது. பின்னர் வெள்ளைக்காரன் வந்தான். ஏதோ ஒரு காரணத்துக்காக திருப்பரங்குன்றம் மலை மீது இந்த கல்லை வைக்க வாஸ்து பார்க்கும்போது மிகசரியாக அந்த இடம்தான் பொருத்தமா இருந்திருக்கிறது.
இந்துக்கள் ஆட்சேபித்திருக்கிறார்கள். அல்லது வெள்ளைக்காரனிடம் எப்படி சண்டை போடுவது என முழித்திருக்கிறார்கள். ஓன்று, வெள்ளைக்காரன் `எனக்கு இங்கே அளவை கல் வைக்கவேண்டும், வைத்துவிடுகிறேன். பழசு ரொம்ப டேமேஜாக இருக்கு. நான் புதுசா வச்சிடறேன். தீபம் அன்று இதிலேயே நீங்கள் தீபம் ஏற்றலாம். உச்சியில் ஒரு குழி வைத்துவிடுகிறேன் என்று சொல்லியிருக்கலாம். அதாவது என் வேலையும் முடிந்தது. உங்களுக்கும் பிரச்சினை இல்லை என்று மாத்தி யோசித்திருக்கலாம்.
என்ன இருந்தாலும் வெள்ளைக்காரன் கீழே வேலை செய்தவன் நம்ம ஆள்தானே. இது அவர்களோட ஐடியாவாகவும் இருக்கலாம்.
மொத்தத்தில் மாப்பிள்ளை இவர்தான், ஆனா சட்டை என்னுடையது என்பதுபோல், கல் அவன் வைச்சதுதான். ஆனா அந்த இடம் ஏற்கனவே தீபம் ஏற்றப்பட்ட இடம் என்பதாகவும் இருக்கலாம். அதாவது எல்லாம்..லாம்.. லாம்.. வகை.
எப்படியோ பிரிட்டிஷ் காரனை தர்ட் அம்பயரா போட்டு சீக்கிரம் இந்த பிரச்சினைக்கு ஒரு முடிவை காணுங்கள்.

0 comments:
Post a Comment