!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, November 10, 2026

இந்த ஊழலில் திமுகவிற்கு எள்ளளவும் சம்பந்தமில்லை.

நூலக ஊழல் குறித்த விசாரணை முடிந்து அறிக்கை வர நிறைய காலம் ஆகும். அதற்குள் நாமும் புலனாய்வுப் புலியாக மாறி, என்னதான் நடந்திருக்கும் எனத் தோராயமாக ஒரு கணக்கைப் போடுவோம். எல்லாம் தெரிந்த பிறகு சொல்வதைவிட, முன்கூட்டியே இப்படி நடந்திருக்கலாம் என்று கணிப்பதுதான் திறமை. இங்கே என் கணிப்பு தவறாகவும் போகலாம்.

முதலில், இந்த ஊழலில் திமுகவிற்கு எள்ளளவும் சம்பந்தமில்லை. காரணம், இது பிச்சைக்கார ஊழல். மது, கனிமவளம், பத்திரப்பதிவு எனக் கொள்ளையடிக்கப் பல துறைகள் இருக்கும்போது, இந்த 100 கோடி ஊழலுக்கெல்லாம் திமுகவை பொறுப்பாக்க முடியாது. அது அவர்களுக்குக் கௌரவக் குறைச்சல்.

ஆனால், தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகள் உருவாக்கிய நடைமுறைதான் இதற்கு முக்கியக் காரணம்.

ஒரு காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் பெரிய இடத்தில் கையை நீட்டினால், கடைக்கோடியில் இருக்கும் ஒரு கான்ஸ்டபிள் தெருவோரக் கடைகளில் 50 ரூபாய்க்குக் கையேந்துவான். அதேதான் இங்கேயும் நடந்திருக்கிறது.

அமைச்சர்கள் பெரிய அளவில் ஊழலில் இறங்கும்போது, அடுத்த நிலையில் இருக்கும் அதிகாரிகள், கீழே இருக்கும் கட்சிக்காரர்களையும் ஆதரவாளர்களையும், 'இவர்களெல்லாம் மனுஷப் புத்திரர்களா?' என்று கேட்கும் அளவுக்கு இருப்பவர்களையும் கைக்குள் போட்டுக்கொண்டு இந்த அடிமட்ட ஊழலை அரங்கேற்றியிருக்கிறார்கள்.

ஒரு ஊழல் நடந்தது தெரியவந்தால், அந்த இடத்தில் நாம் இருந்தால், அந்தச் செய்தி நமக்கு அதிர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். இங்கே தவறு செய்தவர்கள் யார் என்று சொல்லி, அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றுதான் சொல்வோம்.

ஆனால், இதில் எங்களுக்குச் சம்பந்தமில்லை என்று எல்லா அறிவுஜீவிகளும் ஒரே மாதிரியாகப் பதிலளித்தால், இது அவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது என்றுதானே அர்த்தம்?

இது அவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கிறது. ஆனால், வாயைத் திறக்கவில்லை. பாரதியின் அறச்சீற்றம் எல்லாம் இவர்களுக்கு வரவில்லை. இதையெல்லாம் எதிர்த்துப் பேசியிருந்தால் திமுக சொருகியிருக்கும். எங்கே என்று சொல்லத் தேவையில்லை. அல்லது, விற்க முடியாமல் கிடக்கும் இவர்களின் புத்தகங்களையும் வாங்கி, இவர்களையும் குஷிப்படுத்தியிருப்பார்கள். ஊழலில் முதல் விதிமுறையே எல்லோருக்கும் பங்கு கொடு என்பதுதான்.

ஆனால், தவெக ஆட்சி வந்த பிறகு இந்தச் செயின் சிஸ்டம் உடைந்துவிட்டது. பெருமாள் முருகனுக்கு இனி நமக்கு எதுவும் தேறாது என்பதைப் புரிந்துகொண்டார். எனவே, லாபமே இல்லாமல் எதற்கு இந்த மோசடிக்குத் துணைபோக வேண்டும் என்று ஊழலை வெளியே சொல்லிவிட்டார்.

கடைசித் தகவல்களின்படி, இந்த ஊழல் பல ஆண்டுகளாகப் பல நூலகங்களில் நடந்திருக்கிறது. ஆனால், இப்போதுதான் பெருமாள் முருகன் கண்டுபிடித்திருக்கிறார் என்றால், நான் சொன்னதுபோல் அவருக்கு ஏதோ ஒரு வகையில் வந்த மாமூல் நின்றுவிட்டது என்றுதான் பொருள். அல்லது, இப்படி இருக்கலாம். அவருக்கு இந்த நூலகத் துறையைச் சேர்ந்த சிலரிடம் மோதல் ஏற்பட்டிருக்கலாம். அந்தக் கோபத்தில், 'உங்கள் மானத்தை வாங்குகிறேன் பார்' என்று, பல வருடங்களாக நடந்த ஊழலை நேற்றுத்தான் கண்டுபிடித்தது போல் எழுதியிருக்கிறார்.

ஒருவகையில் இது அன்பில் மகேஷின் கதைதான். அவர் மனைவியிடம் அரசகுமாரின் (?) கார் டிரைவர் கஷ்டத்திற்குப் பணம் கேட்க, அதற்கு மகேஷின் மனைவி, 'என்னிடம் ஏன் கேட்கிறாய்?' என மறுக்கிறார். அதுமட்டுமின்றி, அந்த டிரைவரின் முதலாளியிடமும் போட்டுக்கொடுக்கிறார். இதனால் அந்த டிரைவருக்குக் கோபம் வந்துவிட்டது.

அடுத்த முறை அன்பில் மகேஷ் வீட்டுக்கு லஞ்சப் பணத்தைக் காரில் எடுத்துச் சென்றபோது, அதை வீடியோவாகப் பதிவு செய்து வெளியிட்டுவிட்டார்.

இங்கே நீதி என்ன?

ஊழல் என்றாவது ஒருநாள் மாட்டிக்கொள்ளும். இங்கே எல்லோரையும் கவனித்துக்கொண்டே இருக்க வேண்டும். நாய்க்குப் பிஸ்கட் போடாவிட்டால் அது குறைக்குமல்லவா? அதுபோல் அங்கே டிரைவர் குறைத்துவிட்டார். இங்கே பெருமாள் முருகன்... இதுதான் இந்த நாய்களின் குணம்.

எழுத்தாளர்கள் என்றால் அறச்சீற்றம் கொண்டவர்கள் என்ற நிலை ஒரு காலத்தில் இருந்தது. ஆனால், திராவிட எழுத்தாளர்கள் அறிவை அடகு வைத்தவர்கள் போலிருக்கிறது. இனி திராவிடத் தலைவர்களின் மானம் மட்டுமின்றி, இந்த டுபாக்கூர் அறிவுஜீவிகளின் வேடமும் கலையும்.

நடப்பதெல்லாம் நன்மைக்கே!

0 comments:

Post a Comment