!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Sunday, November 22, 2026

மிஸ்டர் விஜய், இது தேவையில்லாத வேலை!

வி.எஸ். பாபுவின் இறுதிப் பயணத்தில் முதல்வர் விஜய் அவர்களும் உடலைச் சுமந்தாராம்; வெறுங்காலுடன் நடந்தாராம். பார்ப்பதற்கும் கேட்பதற்கும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், இதுபோன்ற செயல்கள் ஒரு மனிதனின் இயல்பான குணத்தைக் காட்டிவிடும்.

சாதாரண மனிதர்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் சில விஷயங்களைக் கவனிக்கலாம். எங்கேயாவது பயணம். லக்கேஜ் நிறைய இருக்கும். ஆளுக்கொரு சாமானை எடுங்கள் என்று சொன்னால் போதும். சிலர் உடனடியாக ஏதோ ஒன்றை எடுப்பார்கள். இருப்பதிலேயே எடை குறைந்த ஒன்றாக அது இருக்கும். இப்படியும் சிலர் சேவை செய்வார்கள். அதாவது, இது 'நானும் உள்ளேன் ஐயா' வகை.

அந்த அனுபவத்தின் அடிப்படையில் பார்த்தால், இவையெல்லாம் ஒருவிதக் கோழைத்தனத்தின் அடையாளம். அதாவது, நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், அதற்காகத் துணிச்சலான நடவடிக்கைகளை இவர்கள் எடுக்க மாட்டார்கள். இதுபோன்ற ஆபத்தில்லாத பப்ளிக் ஜிம்மிக் செயல்களைச் செய்து நல்ல பெயர் எடுக்கப் பார்ப்பார்கள்.

Friday, November 20, 2026

திருப்பரங்குன்றம். நான் நினைத்தேன், உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது

வழக்கமாக நாம் முன்கூட்டியே எழுதி, அது நடந்துவிட்டால் நான் அப்பவே சொன்னேன் என்று சந்தோஷப்படுவோம். இந்த முறை கொஞ்சம் வித்தியாசம். இந்த முறையும் திருப்பங்குன்றம் குறித்து எழுதுவோம் என நினைத்து சில உத்திகளை நினைத்தபோது, அதுபோலவே ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது. இருந்தாலும் நான் நினைத்தது கொஞ்சம் வேறு வகை.

தீர்ப்பு என்னவென்றால் இந்த ஒரு முறை மட்டும் ஏற்றிக்கொள்ளலாமாம். அதேசமயம் எந்த பந்தாவும் இருக்கக் கூடாது என்று ஒரு உத்தரவு. அதாவது சென்னை உயர் நீதிமன்றம் சொல்லிவிட்டது,அவர்கள் மானத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு தீர்ப்பு என நினைக்கிறேன்.

Monday, November 16, 2026

இந்த வார நீயா நானா, தற்குறிகளுடன் ஒரு பேட்டி!

இப்போதெல்லாம் எல்லோருக்கும் தைரியம் வந்துவிட்டது. ஊழலைப் பற்றி பலர் தைரியமாகப் பேசுகிறார்கள். எந்த நூலக அமைப்பில் தேர்வாளர்களாகப் பல வருடங்கள் இருந்தார்களோ, அவர்களே இங்கே ஊழல் நடக்கிறது என்று திடீரென்று ஞானோதயம் வந்ததுபோல் துடிக்கிறார்கள். எல்லாம் நல்ல விஷயம்தான். புத்தியும் துணிச்சலும் தாமதமாக வந்தாலும் வரவேற்கப்பட வேண்டியவையே.


ஆனால், அதை இவர்கள் காட்டும் விதம்தான் கொஞ்சம் இடிக்கிறது.

நிஜம் என்னவென்றால், நீயா நானாவில் இன்றைய இளைஞர்களைத் தற்குறிகளாகக் காட்ட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார்கள். அதற்குத் தகுந்தாற்போல் நிகழ்ச்சியையும் நடத்திவிட்டார்கள். அவ்வளவுதான் விஷயம்.

இதற்கு இரண்டு உதாரணங்கள் சொல்லலாம்.

ஒரு நடிகையை அழகாகக் காட்ட வேண்டும். என்ன செய்யலாம்? அழகில்லாத அல்லது சுமாரான சில துணை நடிகைகளை அவருக்குத் தோழிகளாகப் போட்டால் போதும். இப்போது அந்த நடிகை பேரழகியாகத் தெரிவார்.

Saturday, November 14, 2026

விஜய் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?

சில விஷயங்களை எழுதுவதற்குத் தயக்கமாக இருக்கும். காரணம், இதை படிப்பவர்களுக்கு ஒரு தவறை நியாயப்படுத்துவது போன்ற தொனி தெரியலாம். ஆனால் விமர்சனம் என்று வந்துவிட்டால், அங்கே எல்லா விஷயங்களையும் கவனிக்க வேண்டும்.

இன்றைய உளுத்துப்போன ஊடகங்கள், திமுகவின் உளுத்தம் பருப்புகள், ரத்தமே இல்லாத ரத்தங்கள், நாம் தமிழர் எனும் ஜோம்பிகள் என எல்லோரும் இந்தக் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ.வின் அநாகரிகச் செயலைக் கண்டித்துப் பேசுகிறார்கள். விஜய் ஏன் அவர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று பொங்கி வழிகிறார்கள்.

எல்லாம் நியாயமான கருத்துகள்தான். நானும் இதற்கு முந்தைய பதிவில், இந்த எம் எல் ஏ மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்; அது மற்றவர்களுக்குப் பாடமாக இருக்க வேண்டும் என்று எழுதியிருந்தேன்.

Friday, November 13, 2026

சைக்கிள் டெண்டர், இது என்ன புதுசா இருக்கு?

சவுக்கு சங்கர் இலவச சைக்கிள் வாங்குவதில் ஊழல், ஊழல் எனக் கூக்குரலிட்டார். எனக்கு அப்போதே சந்தேகம். ஊழல் செய்பவர்கள் இவ்வளவு அப்பட்டமாகச் செய்யமாட்டார்கள்; இதில் ஏதோ முரண்பாடு இருக்கிறது, அது பின்னர் தெரியவரும் என்றுதான் நினைத்தேன். கிட்டத்தட்ட அதுதான் நடந்திருக்கிறது.

இருந்தாலும் இதுவும் ஊழல்தான். அதாவது, இப்போதெல்லாம் டெண்டர் என்பது வித்தியாசமாக மாறிவருகிறது. இவர்கள் டெண்டரில் விலையைக் குறிப்பிட்ட விதமே வித்தியாசமாகத்தான் இருந்தது. போட்டியில் சில நிறுவனங்கள் மட்டுமே. விலை வித்தியாசமும் மிகவும் குறைவு. சந்தேகப்படுவதற்கான அத்தனை அறிகுறிகளும் இருந்தன. எனவே, முன்கூட்டியே ஊழல் என்று சங்கர் சொன்னதால் இப்போது அவர்கள் இறங்கி வந்திருக்கிறார்கள் போலும். ஒருவேளை அவர் சொல்லாமல் இருந்திருந்தால்? எனவே, சவுக்கு சங்கர் செய்தது ஒரு உத்திதான்.

Thursday, November 12, 2026

இது ஒரிஜினல் அகல்விளக்கு பதிப்பகம்; அப்ப டூப்ளிகேட் எங்கே?

அகல்விளக்கு பதிப்பக உரிமையாளர் பேட்டியை கவனித்திருப்பீர்கள். அவர் எளிமையாகப் பேசுகிறார், பயப்படாமல் பேசுகிறார். ஆனால் பொது வெளியிலோ அவர்தான் தமிழ்நாட்டின் நம்பர் ஒன் பிராடு என்று பேசப்படுகிறது. இது வினோதமாக இல்லை? இங்கே ஏதோ ஒரு செய்தி மறைந்திருக்கிறது.
இது குறித்து கருத்துத் தெரிவித்த பல முகநூல் கந்தசாமிகள், 'மனுஷன் இவ்வளவு பிராடு பண்ணிவிட்டு அசராமல் பேட்டி கொடுக்கிறார்' என்று ஆச்சரியமாக எழுதியிருந்தார்கள். பாவம், அவர்கள் வெளிச்சத்தை மட்டுமே பார்ப்பவர்கள். நிழலையும் கவனியுங்கள். ஒல்லியாக இருப்பவனின் நிழல் குண்டாக இருந்தால்? அதுதான் இங்கே புதிர்.
பொதுவாகக் குற்றவாளிகளின் இயல்பு என்னவென்றால், பொது வெளியில் அவ்வளவாகப் பேசமாட்டார்கள். எதையாவது உளறி மாட்டிக்கொள்வோம் என்ற பயம் இருக்கும். ஆனால் இந்த மோகன் அவர்களின் பேட்டியில் அப்படி எந்தப் பயமோ தயக்கமோ இல்லை. இது அவருக்குப் புதிது என்பதால் கொஞ்சம் தடுமாறுகிறார், அவ்வளவுதான். மற்றபடி, அவருடைய பேட்டியையும் அதில் அவர் பேசிய வார்த்தைகளையும் வைத்துப் பார்த்தால், இவர் மோசடி செய்திருப்பதுபோல் தெரியவில்லை.
அப்படியென்றால் என்னதான் நடந்திருக்கும்?

Wednesday, November 11, 2026

தவெகவின் இரண்டு நம்ப முடியாத குற்றங்கள்

துணை சபாநாயகர் ஒருவரை அடித்திருக்கிறார். இன்னொரு தவெக எம்.எல்.ஏ., கலெக்டருக்கே தூது விட்டிருக்கிறார்.

முதலில் துணை சபாநாயகரின் கதையைப் பார்ப்போம்.

இங்கே நான் கிட்டத்தட்ட இந்தத் துணை சபாநாயகர் பக்கம்தான். ஏனென்றால், என்னதான் நல்லவனாக இருந்தாலும், தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருந்தால் எப்படிப்பட்டவரையும் அது சினம் கொள்ள வைக்கும்.

எழவு வீட்டில் இளையராஜாவிடம் பேட்டி கேட்டது, நடிகர் சிவகுமாரிடம் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றபோது, அவர் அந்தப் போனைப் போட்டுடைத்தது போன்ற செய்திகளையெல்லாம் நாம் கவனித்திருக்கிறோம். இது மனித இயல்பு.

Tuesday, November 10, 2026

இந்த ஊழலில் திமுகவிற்கு எள்ளளவும் சம்பந்தமில்லை.

நூலக ஊழல் குறித்த விசாரணை முடிந்து அறிக்கை வர நிறைய காலம் ஆகும். அதற்குள் நாமும் புலனாய்வுப் புலியாக மாறி, என்னதான் நடந்திருக்கும் எனத் தோராயமாக ஒரு கணக்கைப் போடுவோம். எல்லாம் தெரிந்த பிறகு சொல்வதைவிட, முன்கூட்டியே இப்படி நடந்திருக்கலாம் என்று கணிப்பதுதான் திறமை. இங்கே என் கணிப்பு தவறாகவும் போகலாம்.

முதலில், இந்த ஊழலில் திமுகவிற்கு எள்ளளவும் சம்பந்தமில்லை. காரணம், இது பிச்சைக்கார ஊழல். மது, கனிமவளம், பத்திரப்பதிவு எனக் கொள்ளையடிக்கப் பல துறைகள் இருக்கும்போது, இந்த 100 கோடி ஊழலுக்கெல்லாம் திமுகவை பொறுப்பாக்க முடியாது. அது அவர்களுக்குக் கௌரவக் குறைச்சல்.

ஆனால், தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகள் உருவாக்கிய நடைமுறைதான் இதற்கு முக்கியக் காரணம்.

Monday, November 9, 2026

தீபாவளிக்கு இந்த முறை நிறையப் படுகொலைகளாம்!

தவெக வந்தவுடன் எல்லோரும் தைரியமாக ஊழலை வெளிப்படுத்துகிறார்கள். இது நல்ல விஷயம்தான். ஊழல் செய்தவர்களே ஊழலைக் கண்டுபிடியுங்கள் என்று புகார் அளிக்கிறார்களா? இது காமெடி!

ஆனால், புதிதாக ஓர் ஆட்சி வந்தவுடன் இப்படித் துணிச்சலாக கொலை செய்யும் தைரியமும் வந்துவிடுமா? 

இது நீண்ட கால வியாதி. இங்கே நீங்கள் விரும்பாவிட்டாலும் கடந்தகால புள்ளிவிவரங்களை கவனித்தாக வேண்டும். இது போன்ற விஷயங்களில் எந்த அரசை விமர்சித்தாலும், அவர்கள் பழைய வரலாறு, பக்கத்து வீட்டின் வரலாறு என எதையாவது எடுத்துப் பேசுவார்கள். இதை எல்லாக் கட்சிகளும் செய்யும். திமுக செய்தது; பிஜேபியும் செய்கிறது. எனவே, பள்ளிக்கல்வி அமைச்சர் ராஜ் மோகன் கடந்த வருடக் கொலைகளை உதாரணமாகச் சொல்வது தவறு என்றாலும், நிர்வாகத்தில் இவை தவிர்க்க முடியாத தவறுகள்.

ஆனால், கவனமாகப் பார்த்தால், இங்கே பெரும்பாலான குற்றங்களுக்கு மதுபோதை ஒரு காரணமாக இருக்கிறது. அந்த மதுவுக்கு, அதுவும் தரமற்ற மதுவுக்கு, அச்சாரம் போட்டது திராவிடக் கட்சிகள்தான். எனவே, இரண்டு திராவிடக் கட்சிகளும் இதற்கு ஏதோ ஒருவகையில் பொறுப்புதானே?

அதே சமயம், தவெகவும் பொறுப்புதான். அவர்கள் எப்படிப் பொறுப்பு என்றால், இப்படித் திடீர் விருந்தாளி போல் சொல்லாமல் கொள்ளாமல் ஆட்சியைப் பிடித்துவிட்டார்கள். அதைக்கூட ஜீரணிக்கலாம், ஆனால் திருந்துவதற்கு அவகாசம் கொடுக்காமல், திடீரென எல்லோரும் திருந்திவிடுங்கள், யாரும் லஞ்சம் வாங்காதீர்கள் என்றால், இவ்வளவு நாள் லஞ்சம் வாங்கிக் கொழுத்த போலீசாரின் நிலை எப்படி இருக்கும்? எனவே, அவர்கள் மறைமுகமாக ஸ்ட்ரைக் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். அதாவது, நாங்கள் கையையும் நீட்ட மாட்டோம், எதையும் கவனிக்கவும் மாட்டோம் என்ற முடிவில் இருக்கிறார்கள்.

அதிலும், இங்கே இந்த ரவுடித்தனத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. அந்தப் புள்ளிவிவரம் தெரியாமல் எதுவும் சொல்வதற்கில்லை. கடந்த ஆட்சியில் ஆளுங்கட்சியில் இருந்த சிறுத்தைகள் இப்போதும் ஆளுங்கட்சியில் இருக்கிறார்கள். இந்தப் புள்ளிவிவரம்தான் உறுத்துகிறது. இவர்களோடு மல்லுக்கட்டி போலீசாரும் மரத்துப்போயிருப்பார்கள். இங்கே யாரைக் குறை சொல்வது?

அடுத்த தீபாவளிக்குள்ளாவது விஜய் பெரும்பான்மையைப் பெறட்டும். முடியாவிட்டால், மறுதேர்தலுக்காவது போகட்டும். ஆனால், மறுதேர்தல் வந்தால் சிறு கட்சிகளின் நிலை இனி அதோகதிதான்!

Sunday, November 8, 2026

திராவிட அறிவு இப்படித்தான் இருக்குமோ?


இப்போதெல்லாம் இந்தத் திராவிடத் தருதலைகள் ஒரு வித்தியாசமான கெட்டப்போடு வருகிறார்கள். வழக்கமாக வண்டி ஓட்டும்போது ஹெல்மெட் போடுவோம். ஆனால், இந்த திமுக பரதேசிகள் முகநூலில்கூட இப்படி ஹெல்மெட்டோடு வருகிறார்கள். அதாவது, கருத்து சொல்வார்களாம்; ஆனால், கமெண்ட் செக்ஷனை மூடி வைத்திருப்பார்களாம். அப்புறம் என்ன மயிருக்கு கருத்து சொல்ல வேண்டும்?

விநாயக முருகன் என்று ஒரு உளுத்தம் பருப்பு. முகநூலில் அடிக்கடி கருத்துச் சொல்வார். நான் ஷேர் டிரேடிங் செய்கிறேன்; அவரும் ஷேர் மார்க்கெட் பிஸ்தா என்பதால் இவருடைய பதிவுகள் ஏதோ ஒரு வகையில் என் பார்வைக்கு வருகின்றன. இவர் ஒரு உளுத்தம் பருப்பு என்பது சில பதிவுகளிலேயே தெரிந்துவிட்டது. இருந்தாலும், எல்லோருக்கும் ஒரு பார்வை இருக்கும் என்பதால், இவருடைய பார்வை என்ன என்று அவ்வப்போது கவனிப்பதுண்டு.

Friday, November 6, 2026

பெரியார் நூலக ஊழல், யார் குற்றவாளி?

சத்தியமாக, இது திமுக ஆட்சியின் ஊழல்தான். ஊழல் இன்றுதான் வெளியாகியிருக்கிறது. முழு உண்மை வெளிவர இன்னும் சில நாட்கள் ஆகும்.

இப்படித்தான் ஃபிளை துபாய் விமானம் கடத்தப்பட்டபோது, விமானி கத்தியால் தாக்கப்பட்டார், விமானம் குட்டிக்கரணம் அடித்தது என்றெல்லாம் செய்திகள் வந்தன. ஆரம்பகட்டச் செய்திகள் எப்போதும் இப்படித்தான் இருக்கும். இன்றைய ஊடகங்கள் பரபரப்புப் பரதேசிகள். செய்திகளை உடனடியாக வெளியிட வேண்டும் என்ற நிர்பந்தம் அல்லது கொள்கை உடையவர்கள். அது அபத்தமாக இருப்பதைப் பற்றி அவர்களுக்குக் கவலையில்லை.

இந்த நூலக ஊழலும் அப்படித்தான். மேலும் பல தகவல்கள் இனி பொறுமையாக வெளிவரும்.

திமுகவினர் ஊழலுக்காகக் கை வைக்காத துறையே கிடையாது. எனவே, இந்தப் புத்தகத்தில் கிடைக்கும் சில்லறைக் காசுக்காக அவர்கள் ஆசைப்பட்டிருக்க மாட்டார்கள் என்றுதான் நானும் நினைத்தேன். ஆனால், வேறு சில முகநூல் பதிவுகளைக் கவனித்தால், இவர்கள் இதிலும் கை வைத்திருக்கிறார்கள் போலிருக்கிறது. படித்த சில செய்திகளிலிருந்து, இவை பல வருடங்களாகவே நடந்து வருகின்றன என்பது தெரிகிறது. முழுமையான தகவல் தெரிந்ததும் மறுபடியும் எழுதுவோம்.

Thursday, November 5, 2026

டாஸ்மார்க் பாட்டில்; இப்படி செஞ்சா என்ன?


இந்த பாட்டில் பிரச்சினை இந்த நூற்றாண்டுக்குள் முடியாது போலிருக்கிறது.

பலர் கண்ட இடங்களில் பாட்டில்களை வீசுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க நீதிமன்றம் முயற்சித்தது என்னவோ நல்ல விஷயம்தான். ஆனால், அது சரிவரவில்லை என்பதைப் புரிந்த பிறகாவது அந்த முயற்சியைக் கைவிட்டிருக்க வேண்டும், அல்லது மாற்று வழியை உருவாக்கியிருக்க வேண்டும்.

ஆனால், நாங்கள் ஒன்றை ஆரம்பித்துவிட்டோம்; எனவே, எப்படியாவது அதை நிறைவேற்றுவோம் என்று அபத்தமாக நீதிமன்றங்களும் அரசுகளும் இந்த விஷயத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.

எனவே, இங்கே நாம் மாற்றி யோசிக்க வேண்டியதுதான்.

Monday, November 2, 2026

குடிச்சுக் கெட்டவனும், படிச்சுக் கெட்டவனும்...

நான் இரண்டாவது வகை. முதல் வகை என்பது எப்போதாவது...

சிறு வயதிலிருந்தே யார் வீட்டுக்காவது சென்றால், அங்கே இருக்கும் புத்தகத்தைத் தேடி உடனடியாக வாசிப்பதுதான் வழக்கம். டீ, காபி எல்லாம் அப்புறம்தான். அதேபோல், எந்த ஊரில் இருந்தாலும் அங்கே இருக்கும் நூலகத்தின் பதிவேட்டில் என்னுடைய பெயரும் இருக்கும். என் வாழ்க்கையில் நான் அதிகம் தேடியது ஓட்டலையும் புத்தகத்தையும்தான். முன்னதில் நான் துரதிர்ஷ்டசாலி; பின்னதில் நான் அதிர்ஷ்டசாலி.

காலம் மாறியது, வயதும் கூடியது, இணையமும் வந்துவிட்டது. தினமும் ஷேர் டிரேடிங் செய்வதால் அதற்குக் கணினி அவசியம். இதனால் வாசிப்புக்குப் பஞ்சமே இல்லை. வாரத்தில் ஐந்து நாட்கள்தான் டிரேடிங். வாசிப்புக்கோ முடிவே இல்லை. கொஞ்சமாகப் படிப்போம் என ஆரம்பித்து, இன்னொரு பெக் அடிப்போம் என்ற அளவுக்கு அது தொடரும். சில சமயம் கடுப்பாகி, நாளை முதல் படிக்க மாட்டேன், இனி எழுத மாட்டேன் எனச் சபதம் எடுத்தாலும், அது குடிகாரன் கதையாகத்தான் முடியும்.

இனி விஷயத்துக்கு வருவோம்.

நிறைய குடித்தால் உடல்நலம் கெடுவது போல், நிறையப் படித்தால் கண் கெடும்; கண்ணாடி வரும். இது எல்லோருக்கும் பொதுவானது. ஆனால் அரசியல் படித்தால்? இங்கே கண்ணும் கெடும்; கூடவே அரசீற்றமும் வரும்.

விஜய் ஆண்டனியின் திமிரு புடிச்சவன் திரைப்படம். அதில் அவர் இன்ஸ்பெக்டராக இருப்பார்.இதில் தானைத்தலைவி நிவேதிதா பெத்துராஜும் நடித்திருப்பார். சமூக அவலங்களைக் கவனிக்கும்போது விஜய் ஆண்டனிக்குக் கை நரம்பில் ரத்தம் ஏறும். அது அவரை அவ்வப்போது மயக்கத்துக்குத் தள்ளும்.

கிட்டத்தட்ட நானும் அந்த நிலைக்கு வந்துவிட்டேன் போலிருக்கிறது. கையில் ரத்தம் ஏறுவது தெரியவில்லை. ஆனால் தலைக்குள் ஏதோ நடப்பதை உணர முடிகிறது. மயக்கம் வருகிறது. டாக்டரிடம் சென்றபோது, ரத்தப் பரிசோதனை மற்றும் வேறு சில டெஸ்ட்களை எடுக்கச் சொன்னார். பரிசோதனை முடிவுகளைப் பார்த்துவிட்டு, எல்லாம் சரியாகத்தான் இருக்கிறது என்றார். 'அப்புறம் ஏன் மயக்கம்?' எனக் கேட்டதற்கு, 'எதற்கும் ஒரு சைக்கியாட்ரிஸ்ட்டிடம் ஒரு செஷன் வைத்துப் பார்ப்போம்' என்றார்.

மறுத்துவிட்டேன். வியாதி தெரிந்துவிட்டது. இனி படிக்காமல் இருக்க வேண்டும்; கண்ணை மூடிக்கொண்டு நடக்க வேண்டும். அதுதான் இந்த வியாதிக்கு மருந்து. அது முடியுமா? நடக்காது. எனவே, எல்லாம் அவன் செயல் எனத் தாண்டிப் போக வேண்டியதுதான்.

******

இந்த முறை கண் பிரச்சினை காரணமாக ஒரு கண் டாக்டரிடம் போயிருந்தேன். இது வேறு ஒரு உலகம். எப்படி எல்லாத் துறையிலும் மொள்ளமாரிகள் இருக்கிறார்களோ, அதே கதைதான் இங்கேயும். கண்களில் நம்பர் வந்ததிலிருந்து பல டாக்டர்களிடம் போய்விட்டேன். ஒவ்வொருவரும் ஒரு விதம்.

இதில் கண்ணாடி விற்பவர்கள் என இன்னொரு கும்பல் இருக்கிறது. கண்ணாடிக் கடைகளில் சில விஷயங்களைக் கவனித்தேன். சில கடைகளில் முதலாளி மாலையில்தான் கடைக்கு வருகிறார். அதாவது, அவருக்கு இந்த வருமானம் போதவில்லையாம். எனவே, வேறு வேலைக்கும் போகிறார். இவர்களிடம் பெரும்பாலும் விலை நியாயமாக இருக்கிறது.

இன்னொரு பக்கம், இங்கே ஒரு பிராண்ட் கடை இருக்கிறது. எல்லா இடங்களிலும் ஒரு கிளை வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு கிளையிலும் ஒரு புதிய பெண்ணை வேலைக்கு வைத்து, கடையைப் பார்த்துக்கொள்ளச் செய்கிறார்கள். அந்தப் பெண்களுக்கு அனுபவம் இல்லை. இளம் பெண்கள். அவர்கள் சொல்லும் விதம் நம்மை நம்ப வைப்பதாகவும் இருக்கிறது; அதே நேரத்தில் ஏமாறவும் வைக்கிறது. ஆரம்பத்தில் நமக்கும் இது புதிது என்பதால், அவர்கள் சொல்வதை நம்பி ஏமாந்துவிடுகிறோம்.

அவர்களுக்கு சேல்ஸ் டார்கெட் வேண்டும். வாடிக்கையாளர்களுக்கு என்ன தேவை, அவர்களுடைய பிரச்சினை என்ன என்பதெல்லாம் புரியாமல், 'ஏதாவது ஒன்றை என்னிடம் வாங்கு' என்ற அடிப்படையில் விற்றுவிடுகிறார்கள். சில அனுபவ வியாபாரிகள் நம்முடைய பிரச்சினைகளை புரிந்து கொண்டு அதற்கு தீர்வும் வழங்குவார்கள். இந்த இளம் வயதினருக்கு விற்பனை மட்டுமே குறிக்கோள்.

சட்டையாக இருந்தால் போட்டுப் பார்த்து வாங்கலாம். இது கண் கண்ணாடி. அது நமக்குச் சரிவரவில்லை என்பது புரியவே சில நாட்கள் ஆகிவிடும். அதன்பின் அது நமக்கு நஷ்டம். வேறு யாருக்கும் பயன்படாது. எனவே, எந்தத் துறையாக இருந்தாலும், இதுபோன்ற பிராண்ட் கடைகளில் அனுபவமில்லாதவர்கள் விற்பனையில் இருந்தால், அவர்களிடம் பொருட்களை வாங்குவதைத் தவிர்ப்பது நல்லது.

இங்கே குழப்பம் என்னவென்றால், இந்தத் துறையில் வருமானம் குறைவு என வேறு வேலைக்கும் போகும் சிலர்; இங்கே வருமானம் அதிகம் என மேலும் கிளைகள் திறக்கும் சிலர். எது உண்மை? ஏதோ ஒன்று இடிக்கிறது. அது என்னவென்று புரியவில்லை.