
முதலில் துணை சபாநாயகரின் கதையைப் பார்ப்போம்.
இங்கே நான் கிட்டத்தட்ட இந்தத் துணை சபாநாயகர் பக்கம்தான். ஏனென்றால், என்னதான் நல்லவனாக இருந்தாலும், தொடர்ந்து சீண்டிக்கொண்டே இருந்தால் எப்படிப்பட்டவரையும் அது சினம் கொள்ள வைக்கும்.
எழவு வீட்டில் இளையராஜாவிடம் பேட்டி கேட்டது, நடிகர் சிவகுமாரிடம் ஒருவர் செல்ஃபி எடுக்க முயன்றபோது, அவர் அந்தப் போனைப் போட்டுடைத்தது போன்ற செய்திகளையெல்லாம் நாம் கவனித்திருக்கிறோம். இது மனித இயல்பு.
இரண்டாவது கடவுளாகப் போற்றப்படும் டாக்டர்கள்கூட, பணிக் களைப்பில் இருக்கும்போதும், வீட்டுக்குப் போகும் நேரத்திலும் கவனித்துப் பாருங்கள். வெடித்துவிடும் மனநிலையில் இருப்பார்கள்.
எனவே, எல்லாவற்றையும் தவறு என்ற கண்ணோட்டத்தில் பார்க்காமல், அந்தச் சூழ்நிலையையும் கவனிக்க வேண்டும். அதிலும் ரவிசங்கர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர். இவர்களின் கோபத்தைப் பற்றிக் கேட்கவே வேண்டாம். கோபம், அதுவும் உடனடிக் கோபம் ஆபத்தானது என்பதை இவர்கள் உணருவதில்லை.
பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றைச் சொல்ல இடமும் முறைகளும் இருக்கின்றன. விழாக்காலங்களில் குடும்பத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில், உடனடியாக என் பிரச்சினையைத் தீர்த்துவிடு என்று எம்.எல்.ஏ.விடம் பிரச்சினை செய்வது என்ன மாதிரியான நடைமுறை? இதில் அடிவாங்கியவர் குடித்திருந்தாராம். இவரும் குடித்திருக்கலாம். இரண்டு எரிமலைகள் மோதியிருக்கின்றன. இதில் பலவீனமானவர் உதை வாங்கியிருக்கிறார்.
இப்படி ஒருவரை அடிப்பது, அதுவும் பொறுப்பில் இருப்பவர்கள் அடிப்பது தவறு என்றாலும், அந்த இடத்தில் நான் இருந்திருந்தாலும் இப்படித்தான் நடந்துகொண்டிருப்பேன். எல்லோருக்கும் ஓர் எல்லை இருக்கிறது. அது சாமானியனுக்கும் பொருந்தும்.
இனி, இந்த நம்ப முடியாத கலெக்டர் கதை.
இதை முதலில் படித்தபோது நம்ப முடியவில்லை. ஒருவன் குடித்துவிட்டு பெட்டிக்கடைகளில் மாமூல் கேட்டு மிரட்டுவான், ரோட்டில் நடந்து செல்லும் நபர்களிடம் கத்தியைக் காட்டி மிரட்டுவான். இதெல்லாம் ஓகே. ஆனால், அந்த வழியாகப் போகும் போலீஸ் ஜீப்பை நிறுத்தி, இன்ஸ்பெக்டரிடமா பணம் பறிப்பான்? இது கற்பனைக்கே எட்டாத ஒன்றாயிற்றே! அப்படித்தான் இருக்கிறது இந்தக் கலெக்டர் கதை.
ஆனால், நடந்திருப்பது என்னவோ நிஜம் என்றுதான் தெரிகிறது. இந்த அளவுக்குத் துணிச்சல் அவருக்கு எப்படி வந்தது என்று தெரியவில்லை. அல்லது மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்கா என்றும் புரியவில்லை.
சில சமயங்களில் சிலர் நம்மைப் பார்த்துச் சிரிப்பதுபோல் தோன்றும். நாமும் சிரித்து வைப்போம். ஆனால், பின்னாலிருந்து அவருடைய நண்பர் வருவார். நாம் அசடு வழிவோம். இது எந்த வகையோ?
இது உண்மையாக இருந்தால், இந்த எம்.எல்.ஏ. மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அது மற்றவர்களுக்குப் பாடமாக இருக்க வேண்டும்.
ஆனாலும், முழு உண்மை தெரிந்தால்தான் என்னதான் நடந்தது என்பது புரியும். அதுவரை வெயிட் அண்ட் சீதான்.
0 comments:
Post a Comment