மாரியம்மன் கோவில்--Indian express |
இங்கே அட்கேஷ்வர் என்ற ஏரியாவில் உள்ளூர் காவலரும் உலக காவலரும் அருகருகே இருக்கிறார்கள். அதாவது இந்த பக்கம் போலீஸ், அந்த பக்கம் கடவுள் (அட்கேஷ்வர்).
ஒருமுறை டூ வீலரில் வந்தவர்கள் வண்டியை விட்டு இறங்கி போலீசாரிடம் லைசன்ஸ் மற்றும் மற்ற இத்யாதிகளை பவ்யமாக காட்டிக் கொண்டிருந்தார்கள். இந்த காட்சியை பார்த்துக் கொண்டே நான் நடந்து வந்து கொண்டிருந்தேன். கோவிலுக்கு அருகில் வந்தபோது, அங்கே ஒருவர் டூ வீலர் வண்டியில் உட்கார்ந்துகொண்டே கோவிலை (சாமியை) பார்த்து முணுமுணுத்துக் கொண்டிருந்தார். பெட்டிஷன் நிறைய இருக்கும் போலிருக்கிறது. நான் அதை தாண்டி கொஞ்ச தூரம் போய் திரும்பி பார்த்தபோதும் முணுமுணுப்புதான். இவ்வளோ பெட்டிஷன் வைச்சிருக்கிறவர் அதை உள்ள போய் முறையா சொல்ல வேண்டியதுதானே?
இப்படி வண்டியில் உட்கார்ந்து கொண்டே, போய்கொண்டே சாமி கும்பிடும் காட்சிகள் இந்தியாவில் சர்வசாதாரணம்தான். ஆனால் இரண்டையும் அடுத்தடுத்து பார்த்தபோது எதார்த்தம் சுட்டது. அழியும் மனிதனுக்கு கிடைக்கும் மரியாதை அழிவில்லாத கடவுளுக்கு கிடையாது. இந்து மதத்தில் கடவுள் மக்களுக்கு நண்பராக இருக்கிறார். எனவே நட்பு அதிகரிக்கும்போது மரியாதை குறையும் போலிருக்கிறது. இந்த முரண்பாட்டை கவனித்துவிட்டு பதிவுக்கு வந்தால், எங்கோ ஒரு இடத்தில் `கம்மனாட்டி முருகன்` என்று படித்தேன். இதுக்கு அவரே தேவலாம்.
`அவர் இருக்கிறார்` என்று உறுதியாக நம்புகிறவர்கள் கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்துவிட வேண்டியதுதானே? Too bad.
சரி, கடவுளாச்சி, அவர் பக்தனாச்சி. நமெக்கென்ன. நான் நடையை கட்டினேன். அதேசமயம் இது ஒரு பதிவுக்கான கருவாக மூளையில் தங்க, கோவில் பற்றிய மற்ற முரண்பாடுகளை நோட்டம் விட ஆரம்பித்தேன். நிறைய கிடைத்தது. அதில் ஓன்று...
ஷீத்தல் மாதா (மாரியம்மன்)
நம்ம ஊர் மாரியம்மனின் உள்ளூர் பெயர் ஷீத்தல் மாதாவாம். அழகேசன் அல்கேட்ஸ் ஆனது போல் இவரும் மாறி இருக்கிறார். மாரியாத்தாவுக்கும் நியுமராலஜி பிராப்ளம்?
ஒருவர் வேறு காரணம் சொன்னார். இங்கே வந்த தமிழர்கள் பெரும்பாலும் தொழிலாளி வர்க்கம். இப்போதுதான் அது மாற ஆரம்பித்திருகிறது. எனவே தமிழர்களால் `வரவு` குறைவாக இருக்கும் போலிருக்கிறது. உள்ளூர்காரர்களோ மாரியாத்தா என்றால் ஏதோ ஒரு ஆத்தா என்று வருவதில்லை. ஷீத்தல் மாத்தா என்று பேர் மாற்றிய பிறகு, அட இவங்களும் நம்ம சாமிதான் என்று வர ஆரம்பித்திருக்கிறார்களாம். அவர்களின் கை கொஞ்சம் தாராளமாகவே இருக்க, இப்போது (பூசாரிகளுக்கு) தட்டில் துட்டு நிறைவே வருகிறதாம். மார்கெட்டிங் மைன்ட். தமிழன் பிழைச்சுக்குவான்.
குஷ்பு
கடந்த பதிவில் ஆட்டோக்களை பற்றி குறிப்பிட்டிருந்தேன்.அதில் ஒரு போர்ஷன் இருந்தது. பதிவு பெரிதாகிவிட்டதால் எடுத்துவிட்டேன். அது இங்கே.
ஒரு முறை ஷட்டல் ஆட்டோவில் பயணம். போக வேண்டிய இடத்தை சொன்னதும் ஆட்டோக்காரர் உட்காரச் சொன்னார். சற்று நேரத்தில் ஒரு பெண் வந்தார். குண்டாக, அழகாக இருந்தார்.
குண்டு பெண் அழகாக இருக்கிறார்# நான் தமிழன்
அந்த பெண் ஒரு இடத்தை சொல்ல, `அங்கே போகாது` என்று ஆட்டோக்காரர் மறுத்தார். எனக்கு அதிர்ச்சி. ஒரு அழகான பெண் பக்கத்தில் உட்காரும் வாய்ப்பு பறிபோனதால் அல்ல, நானும் அங்கதானே போவனும்? அந்த அதிர்ச்சி.
இப்போது எனக்குள் பிளாஷ்பேக் ஓடியது. ஒருமுறை சென்னையில் இருந்து கடலூருக்கு பயணம். கடலூருக்குத்தான் டிக்கெட் கேட்டேன். கண்டக்டர் பாண்டி வரை கொடுத்திருக்கிறார். சாதாரன் பஸ், பாயின்ட் டு பாயின்ட் பஸ் என கட்டணங்களில் வித்தியாசம் இருப்பதால், நானும் கவனிக்கவில்லை.
கடலூரில் இறங்கும்போதுதான், `நீங்க பாண்டிக்குதானே டிக்கெட் எடுத்தீங்க?` என்று கண்டக்டர் சந்தேகமாக கேட்டார். `கடலூருக்குதானே கேட்டேன்` என்று மறுக்க, டிக்கெட்டை வாங்கிப் பார்த்து என்னை முறைத்தார். இப்படித்தான் சில சமயம் தவறு செய்யாமலேயே நாம் குற்றவாளிகளாக தெரிவோம்.
இந்த பிரச்சினை எனக்கு அடிக்கடி ஏற்படும். பேச்சலராக இருக்கும் போது தினம் ஓட்டல்தான். அங்கே இட்லி கேட்டால் பூரியும், சட்னி கேட்டால் சாம்பாரும் வரும். முதல்முறை இப்படி நடந்தபோது சண்டை போட்டேன். அதன்பிறகும் இது தொடர, கோளாறு என்னிடம்தான் என்பது புரிந்தது. அப்படியே, எதிர்காலத்தில் நான் அரசியல்வாதி ஆகி யானை சின்னத்தில் ஓட்டுப் போடச் சொன்னால், மக்கள் பானை சின்னத்தில் போட்டுவிடுவார்களோ என்ற கவலையும் பிறந்தது. (என் போட்டோவ சின்னதாவும், சின்னத்தை பெரிசாவும் போடவேண்டியதுதான்)
சரி, பிளாஷ்பேக்கை முடித்துக் கொண்டு நிகழ்காலத்துக்கு வருவோம். அந்த ஆட்டோக்காரர் அந்த பெண்ணிடம் அங்கே போகாது என்று சொன்னவுடன் எனக்கு இந்த சந்தேகம்தான் வந்தது. நான் சொன்னதை அவர் தவறாக புரிந்துகொண்டாரா?
போகவேண்டிய இடத்தை மறுபடியும் அந்த ஆட்டோக்காரரிடம் சொல்ல, `ஹா.. ஜாயகா...` என்றார். அந்த பெண்ணிடம் `போகாது`என்று சொன்னீர்களே` என்றதற்கு, `உஸ்கிதோ தோ டிக்கெட் லகேகி` என்றார். அப்போதுதான் எனக்கும் எதார்த்தம் உறைத்தது. இவர்கள் ஒரு ஆட்டோவில் 7 பேரை ஏற்றுபவர்கள் ஆயிற்றே. அந்த பெண் நிச்சயம் இரண்டு பேர் இடத்தை ஆக்கிரமிப்பார். ஆனால் அவரிடம் சொல்ல முடியுமா? அது கிண்டலாக பார்க்கப்படும். எனவே இப்படி மறுத்துவிட்டார்.
உடல் குறையை வைத்து மனிதர்களிடம் பாராபட்சம் பார்க்கக் கூடாதுதான். ஆனால் ஏற்கனவே நான்கு பேர் உள்ளே இருக்க இன்னும் இரண்டு பேரை ஏற்றிக்கொண்டுதான் கிளம்புவேன் என்று காத்திருக்கும் அந்த ஆட்டோக்காரரிடம் என்ன சொல்வது?
வயதில் சிறிய அந்த பெண்ணுக்கும் இது புரியாது. ஏன் எந்த ஆட்டோவும் அங்கே போவமாட்டேங்குது என்று குழம்புவார். சில பல அனுபவங்களுக்கு பிறகு புரியும்.
மிஷ்கின் ஃபிலிம் காட்டறார்
தமிழ் லைப்ரரி புண்ணியத்தில் தற்போது விகடன், குமுதம் என படிக்க ஆரம்பித்திருக்கேன். விகடனில் மிஷ்கின் பேட்டி படித்துக் கொண்டிருந்தேன். படிக்கும்போதே ஒரு இடம் நெருடியது. லாஜிக்கோடு பொருந்தாத ஒரு தகவல். மிஷ்கின் 10,000 புத்தகங்கள் வைத்திருக்கிறாராம். இந்த தகவல்தான் என்னை குழப்பியது. இவற்றை படித்துவிட்டாரா, படிக்கப் போகிறா என்பது தெரியவில்லை. இருந்தாலும் முரண்பாடுகளை பார்ப்போம்.
பொதுவாக ஆங்கில நாவல்கள்/புத்தகங்கள் குறைந்தது 300 பக்கங்களை தாண்டித்தான் இருக்கும். தினம் ஒரு புத்தகம் படிப்பவராக இருந்தாலும், இதற்கு 27 வருடங்கள் ஆகுமே? அவர் வேறு வேலையே பார்பதில்லையா? புரியலையே! சரி, இந்த புத்தகங்கள் ஏதோ ஒரு கணக்கில் அவரிடம் சேர்ந்திருக்கின்றன என்றே வைத்துக் கொள்வோம். ஆனால் இவ்வளவு புத்தகங்களை இவர் வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார்?
சென்னையில் ஒரு சம்பவம். ஒரு வங்கியில் பணம் போட சென்றேன். லேட்டாகியது. அந்த நேரத்தில் ஜூவி வாங்கி படித்துக் கொண்டிருந்தேன். பக்கத்தில் ஒருவர் ரொம்ப ஆர்வமாக எட்டிப் பார்த்துக் கூடவே படித்துக் கொண்டிருந்தார். இது மற்றவர்களுக்கு எரிச்சலை தரும். ஒரு காலத்தில் நானும் இப்படி இருந்ததால் எனக்கு வராது.
நான் வேகமாக படிப்பவன் என்பதால் என்னுடைய டோக்கன் வரும் முன் முக்கியமானவற்றை விரைவாக படித்துவிட்டேன். அதன்பின் அந்த புத்தகத்தை அவரிடமே கொடுக்க, அவருக்கு அதிர்ச்சி.
புத்தகங்கள் ப்டிக்கும்வரைதான் பொக்கிஷம். அதன்பின் நமக்கு அது காகிதம்தான். முக்கியமான தகவல் பின்னால் தேவைப்படும் என்ற நிலை இருந்தால் பரவாயில்லை. ஆனால் எல்லாமே தேவை என இவ்வளவு புத்தகங்களை இவர் வைத்திருப்பது என்ன விதம்?
தண்ணீர் தேங்கினால் அது குட்டை. அது ஆற்றைப் போல் நிற்காமல் பலருக்கு பயன்பட ஓடிக் கொண்டே இருக்கவேண்டும் என்று சொல்வார்கள். மிஷ்கின் `இவ்வளவு புத்தகங்களை வைத்திருக்கிறேன்` என்று சொல்வதே ஒரு பந்தாவாக தெரிகிறது. அப்படியே அவர் எந்திரன் `சிட்டி`யாக இருந்து வாசித்திருந்தாலும், அதை குட்டையாக பாழடிக்காமல் ஓட விட வேண்டும்.
விளம்பரம்
சிறையில் சில செல்களில் டிவி உண்டு. பொதிகையும், டிடி நேஷனலும் வரும். நான் முதல் முறை இருந்த செல்லில் டிவி கிடையாது. பக்கத்து செல்லில் ஒரு ரவுடி இருந்தார். அவரிடம் டிவி இருந்தது. சனி, ஞாயிறுகளில் ஜன்னல் வழியாக அந்த செல்லில் படம் பார்ப்போம். சில செல்களில் போய் உட்கார்ந்து பார்க்கலாம். ஆனால் எல்லாம் அராத்துகளாக இருப்பதால் நான் கொஞ்சம் எட்டவே இருந்தேன்.
அதைவிட முக்கியமான பிரச்சினை, சினிமா போடும் நேரம்தான். பொதிகையில் 5 மணிக்கு படம் போடுவார்கள். ஆனால் 6 மணிக்கு லாக்கப் என்பதால், 5 .30 மணிக்கு எல்லோரும் அவரவர் செல்லுக்கு போய்விட வேண்டும். எனவே படம் கொஞ்ச நேரம்தான் பார்க்க முடியும்.
இப்படி எட்டு மாதம் டிவி இல்லாத செல்லில் இருந்துவிட்டு வேறு பிளாக்குக்கு மாறிய போது அங்கே செல்லில் டிவி இருந்தது. .
பசிக்கும்போது சாப்பாடு கிடைத்தால் தேவலை என்று இருக்கும். கிடைத்த பிறகு யாரவது ஊறுகாய் கொடுத்தால் பரவாயில்லை என்றும் தோணுமே? அப்படித்தான் ஆகியது டிவி கதையும். பொதிகை நிகழ்சிகள் அவ்வளவு தரம். நிகழ்ச்சி தரமாக இருந்தால்தானே விளம்பரம் கடுப்படிக்கும். எங்களுக்கு விளம்பரமே தேவலாம் என்ற நிலை. விளம்பரம் இல்லாத டிவியை பார்க்கவே பிடிக்கவில்லை.
இந்த ad30days கதை அப்படித்தான் இருக்கிறது. தமிழ் தளங்களுக்கு விளம்பர வாய்ப்பு என்று இருந்ததால் நானும் பதிவு செய்தேன். அதன்பிறகு சில சமயம் தளம் ஒப்பன் ஆவதில் பிரச்சினை. அதைவிட கொடுமை, விளம்பரங்கள் குறைவாக இருப்பது. (எனக்கு மட்டும் அப்படி ஆகிறதா?)
இந்த துறைக்கு புது வரவு. எனவே விளம்பர நிறுவனங்களின் எண்ணிக்கை (ரொம்பவே) குறைவாக இருக்கக் கூடும். இப்படி இருந்தால் எப்படி வாசகர்களை ஈர்க்க முடியும்? சந்தையில் நிலைக்க வேண்டுமானால் எதையும் பெரிய அளவில் செய்ய வேண்டும் என்ற எதார்த்தத்தை இது உணர்த்துகிறது.
6 comments:
சிவானந்தம்,
கலவையில மட்டும் முழு மூச்சா கலக்கலாம்னு களம் இறங்கிட்டீங்க போல!!!
# //குண்டு பெண் அழகாக இருக்கிறார்# நான் தமிழன் //
ஹி...ஹி....அழகான பெண் குண்டாக இருக்கிறார் # நான் பச்சைத்தமிழன்!
# மிஷ்கின் புத்தக பெருமை நானும் பார்த்தேன், கண்டிப்பாக படிச்சிருக்க மாட்டார்னு தெரியும். இதெல்லாம் "நானும் ரவுடிதான்" போல படிப்பாளினு காட்டிக்க செய்வது :-))
புத்தகம் அதிகம் வச்சிருக்கவங்க அதை எல்லாம் படிக்க ஆசைப்பட மாட்டாங்க :-))
ஸ்வீட் ஸ்டாலில் வேலை செய்றவனுக்கு ஸ்வீட் பார்த்தா நாக்குல எச்சில் ஊறாது :-))
கன்னிமரா லைப்ரரில வேலை செய்றவர் செய்தித்தாள் போன்றவற்றை தான் தினம் படிச்சுட்டு இருக்கிறதை பார்த்துட்டு ,இங்கே எவ்ளோ புக்கு இருக்கு அத எல்லாம் படிச்சிட்டாரா?எப்ப பார்த்தாலும் பேப்பர் வார இதழ்னு படிச்சிட்டு இருக்காரேனு நினைப்பதுண்டு :-))
---------------------------
எழுதுவதன் மூலம் ஏதேனும் சம்பாதிக்கனும் என நினைத்தால் ,பத்திரிக்கைகளில் எழுத முயற்சி செய்யுங்கள், இணைய விளம்பரங்கள் மூலம் ஒன்னும் தேறாது.
10 எழுதினால் 1 வெளியாகும் வாய்ப்பு உண்டு.பத்திரிக்கைகளில் தெரிந்தவர்கள் இருந்தால் எழுதின எல்லாமே வரும் பாக்கியமும் உண்டு!
கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாதம் 500 ரூ அளவுக்கு வரும்படி பத்திரிக்கைகள் மூலம் வந்ததுண்டு. இப்போ நமக்கு கொஞ்சம் தலைக்கனம் அதிகமாகிடுச்சு, 500 ரூவாய்க்காக ஏன் மண்டைய உடைச்சிக்கணும்னு விட்டுப்புட்டேன் அவ்வ்!!!
myskin oru comics virumbi , avaridam comics collection athigam
வவ்வால்,
<<< கலவையில மட்டும் முழு மூச்சா கலக்கலாம்னு களம் இறங்கிட்டீங்க போல >>
இது வசதியாத்தான் இருக்கு. இருந்தாலும் என்னுடைய ஸ்டைல் இதுதானே!
>> எழுதுவதன் மூலம் ஏதேனும் சம்பாதிக்கனும் என நினைத்தால் ,பத்திரிக்கைகளில் எழுத முயற்சி செய்யுங்கள், இணைய விளம்பரங்கள் மூலம் ஒன்னும் தேறாது.>>
நமக்கு பத்திரிக்கை சரிவராது. அதுக்காகத்தான் நானே சிறிய அளவில் ஒன்றை ஆரம்பித்தேன். மாதம் 5000 நஷ்டத்தில் 6 மாதம் நடத்திவிட்டு மூடிவிட்டேன். விற்காத பத்திரிக்கையாக இருந்தாலும் நான்தான் ஆசிரியர்.
>>> கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாதம் 500 ரூ அளவுக்கு வரும்படி பத்திரிக்கைகள் மூலம் வந்ததுண்டு. இப்போ நமக்கு கொஞ்சம் தலைக்கனம் அதிகமாகிடுச்சு,
500 ரூவாய்க்காக ஏன் மண்டைய உடைச்சிக்கணும்னு விட்டுப்புட்டேன் அவ்வ்!!! >>>
அப்ப தினம் ஏதாவது போஸ்ட் பண்ணி இருப்பீங்களே?
மற்றபடி பிரபல எழுத்தாளர்களே இங்கு திருப்தியான வருமானம் இல்லை என்று புலம்புகிறார்கள் (சமீபத்தில் கவனித்தது பிரபஞ்சன் கேள்வி- பதில் ) சில வருடங்களுக்கு முன் ஞாநியும் புலம்பி இருந்தார். கல்கியில் 750 ரூபாய்தான் தருகிறார்கள் என்று. எழுத்தாளன் கதி அந்த அளவில் இருக்கிறது.
இந்த பதிவுகள் நீண்டநாள் நிலைக்காது. அதுவரை கிரிக்கெட்டில் எக்ஸ்ட்ரா ரன் போல ஏதாவது வரும் வாய்ப்பு இருந்தால் அதை ஏன் விடுவானேன் என்ற எதிர்பார்ப்புதான்.
//தமிழ் லைப்ரரி புண்ணியத்தில்//
அந்த புண்ணியம் எங்களுக்கும் கிடைக்க ஒரு தொடுப்ப(link) குடுத்தா இன்னும் கொஞ்சம் புண்ணியம் தேடிக்கலாமே
சிவானந்தம்,
கலவை தான் உங்க பாணியா , நான் தனிப்பதிவா படிச்ச நினைவில் சொல்லிட்டேன்,தொடருங்கள்.
#//நமக்கு பத்திரிக்கை சரிவராது. அதுக்காகத்தான் நானே சிறிய அளவில் ஒன்றை ஆரம்பித்தேன். மாதம் 5000 நஷ்டத்தில் 6 மாதம் நடத்திவிட்டு மூடிவிட்டேன். விற்காத பத்திரிக்கையாக இருந்தாலும் நான்தான் ஆசிரியர். //
ஏற்கனவே எப்பவோ சொல்லி இருக்கீங்க,நாந்தான் மறந்துட்டேன் அவ்வ்.
பத்திரிக்கைகள் மூலம் வரும் வருமானம் என்பது பொதுவாக குறைவு தான், ஆனால் "தமிழ்" வலைப்பதிவுகள் மூலம் வருமானம் பார்க்கலாம் என நினைப்பதை விட பெட்டரான ஆப்ஷன்!
மேலும் பத்திரிக்கைகளில் புழங்க ஆரம்பிச்சால் வருங்காலத்தில் " சொல்லிக்கொள்ளவாது" பயன்ப்படும், இணையத்தில் எழுதினேன் என சொன்னால் அதான் எல்லாரும் எழுதுறாங்களே என "லேசாக" கடந்துவிடுவார்கள் :-))
நீங்க வெளிப்படையாக "இணையத்தில் எழுதினால்" பணம் பண்ண சாத்தியமானு முயற்சிப்பதாக சொன்னதால் "பத்திரிக்கையை பற்றி சொன்னேன். மற்றபடி எழுதி பணம் செய்ய "திறமையை" விட மேலும் சில காரணிகள் தேவைனு அனுபவ ரீதியாக பார்த்துள்ளேன் அவ்வ்!
அப்புறம் அக்காலத்தில நானும் ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கப்போறேன்னு சொல்லிட்டு ரிஜிஸ்ட்ரார் ஆஃப் நியூஸ் பேப்பர்க்கு எழுதிப்போட்டு அப்ளிகேஷன் எல்லாம் வாங்கிட்டு ,நோட்டரி பப்ளிக்கிட்டே அஃபிடவிட் எல்லாம் தயார் செய்தேனாக்கும் :-))
அப்புறம் வழக்கம் போல இதெல்லாம் சரிப்பட்டு வராதுனு பலரும் சொல்லி மனசை மாத்திக்கிட்டேன் ...இல்லைனா இந்நேரம் "அமரர் எஸ்.ஏ.பி "ரேஞ்சில அமுதம் கிமுதம்னு ஏதேனும் பத்திரிக்கைய ஆரம்பிச்சிருப்போம்ல அவ்வ்!
பத்திரிக்கைக்கான விளம்பரம் புடிக்க தெரிஞ்சால் லாபகரமாக நடத்தலாம். ஆனால் விளம்பரம் கிடைப்பது தான் கழுதை கொம்பு :-))
//அப்ப தினம் ஏதாவது போஸ்ட் பண்ணி இருப்பீங்களே? //
ரெண்டு நாளைக்கு ஒரு போஸ்ட் கார்டாவது போட்ருவோம்ல அவ்வ்!
ஹி...ஹி கூட்டிக்கழிச்சு பார்த்தால் நாம போட்ட கடுதாசிக்கான செலவு கூட இருக்கும்னு தான் தோனுது அவ்வ்!
@ Ready 123
/// myskin oru comics virumbi , avaridam comics collection athigam ///
எதுவாக இருந்தாலும் பிறருக்கு பயன்பட வேண்டும்.
---------------------------
@ சேக்காளி
//அந்த புண்ணியம் எங்களுக்கும் கிடைக்க ஒரு தொடுப்ப(link) குடுத்தா இன்னும் கொஞ்சம் புண்ணியம் தேடிக்கலாமே//
முந்தைய பதிவை படிக்கவில்லையா? இந்த லைப்ரரி அகமதாபாத்தில் இருக்கிறது.
--------------------------
@வவ்வால்
///பணம் செய்ய "திறமையை" விட மேலும் சில காரணிகள் தேவைனு அனுபவ ரீதியாக பார்த்துள்ளேன் அவ்வ்!//
நிஜம்.
///அப்புறம் அக்காலத்தில நானும் ஒரு பத்திரிக்கை ஆரம்பிக்கப்போறேன்னு சொல்லிட்டு ரிஜிஸ்ட்ரார் ஆஃப் நியூஸ் பேப்பர்க்கு எழுதிப்போட்டு அப்ளிகேஷன் எல்லாம் வாங்கிட்டு ,நோட்டரி பப்ளிக்கிட்டே அஃபிடவிட் எல்லாம் தயார் செய்தேனாக்கும் :-))///
என்னிடமும் சிலர் சொன்னார்கள். நான் எதற்கும் அப்ளை செய்யவில்லை. `சட்டவிரோதம்` என கைது செய்தால் `உள்ளே` போய்விடுவோம் என்ற மூட் அப்போதே இருந்தது. ஆனா ஒரு பய கம்ப்ளைன்ட் பண்ணலை.
///அப்புறம் வழக்கம் போல இதெல்லாம் சரிப்பட்டு வராதுனு பலரும் சொல்லி மனசை மாத்திக்கிட்டேன் ...இல்லைனா இந்நேரம் "அமரர் எஸ்.ஏ.பி "ரேஞ்சில அமுதம் கிமுதம்னு ஏதேனும் பத்திரிக்கைய ஆரம்பிச்சிருப்போம்ல அவ்வ்!///
தப்பு பண்ணிட்டீங்க வவ்வால். நீங்க ஆரம்பிச்சிருந்தா என்னுடைய கட்டுரையை அட்டையிலேயே போட சொல்லி மிரட்டி இருக்கலாம். :-))
///பத்திரிக்கைக்கான விளம்பரம் புடிக்க தெரிஞ்சால் லாபகரமாக நடத்தலாம். ஆனால் விளம்பரம் கிடைப்பது தான் கழுதை கொம்பு :-))///
வியாபாரிகளை பொறுத்த வரையில் இரண்டே கொள்கைதான். விளம்பரம் கொடுக்கக் கூடாது, அப்படியே கொடுத்தாலும் காசு கொடுக்கக் கூடாது.
இப்படி விளம்பரத்துக்காக கேன்வாஸ் செய்யும்போதுதான் உணர்ந்தேன், ரிசர்வ் டைப்பான நான் `அதுக்கு சரிபட்டு வரமாட்டேன்` என்பதை.
Post a Comment