அரசியல் என்றாலே அது ஒரு சாக்கடைதான் என்றாகிவிட்டது. இங்கே அரசியல்வாதிகள் மட்டுமின்றி அது குறித்து விமர்சிப்பவர்களும் விமர்சனத்திற்கு உள்ளாகாமல் தப்பிக்க முடியாது. ஒரு தரப்பின் குறைகளை விமர்சிக்க ஆரம்பித்தால் உடனே நீ `அந்த பக்கத்து ஆளா?` என்ற விமர்சனம் வந்துவிடுகிறது. விமர்ச்சனங்களை வீசும் போது யார் முன்னே (அதிகாரத்தில்) இருக்கிறார்களோ அவர்கள் மீதுதான் அதிகம் படும் என்ற யதார்த்தத்தை பலர் புரிந்துகொள்வதில்லை. தற்போது ஜெயலலிதா அதிகாரத்திற்கு வந்து விட்டதால் இனி இவர் இந்த யதார்த்தத்திற்கு உட்படுத்தப்படுவார்.
அதேபோல் ஒப்பிடுதலும் அரசியலில் தவிர்க்க முடியாத ஓன்று. கலைஞரையும் ஜெயலலிதாவையும் விமர்சிக்கும் போது `இவர் மட்டும் யோக்கியமா?` என்று எதிர்த்தரப்பையும் சேர்த்துதான் விமர்சிக்க வேண்டியிருக்கும்.