இந்த வாரம் ஒரு காது குத்தும் நிகழ்சிக்காக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு போக வேண்டி இருந்தது. ஆனால் நான் கோவிலுக்கு போவதில்லை என்ற முடிவோடு இருக்கிறேன்.
அறிவியல் சார்ந்த புத்தகங்களையும், பிரபஞ்சம் மற்றும் பல தியரிகளையும் படிக்கும் போது கடவுள் இருக்கிறார் என்று சொல்வதற்கான காரணங்கள் தெரியவில்லை. அதேசமயம், `நீ என்ன செய்தாய் எனக்கு, நான் உன்னை மதிப்பதற்கு` என்ற எனது கோவமும் ஒரு காரணமாய் இருக்கலாம்.