!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, October 31, 2011

கூடங்குளம்: இங்கேயும் சில அன்னா ஹசாரேக்கள்


இதை தினமலருக்காக (இது உங்கள் இடம்) கொஞ்சம் சுருக்கி எழுதினேன். இங்கே இன்னும் கொஞ்சம் விளக்கமாக...


சில வாரங்களுக்கு முன் அணுசக்தி குறித்த தகவல்களில் முழ்கி இருந்தேன். ஆனால் முதலில் என் கதையை போட்டுவிடுவோம் என்று முடிவெடுத்ததால் அதை பற்றி பதிவு எழுதவில்லை. கூடங்குளம் பிரச்சினை இன்னமும் கொதிக்கும் நிலையில் அது குறித்தும் ஒரு பதிவு.

அணுசக்தி விஷயமாக பல செய்திகளை படித்ததில் ஒரு விஷயம் தெளிவாகிவிட்டது. ஒரு செய்தியை சொல்ல வேண்டும் என்பதை விட அதை எப்படி சொல்ல வேண்டும் என்பதில்தான் உங்கள் திறமை அடங்கியிருக்கிறது. ராமாயணத்தில் `கண்டேன் சீதையை` என்ற சொன்னதிலிருந்து, மகாபாரத்தில் `(யானை) அசுவத்தாமா மரணம்` என்று சொன்னது வரை அந்த வார்த்தைகளுக்கு பின் பல நோக்கங்கள் அடங்கி இருக்கிறது. சொல்வது உண்மை என்றாலும் அதை சொல்லும் விதத்தில் நாம் நமது விருப்பத்தை திணிக்கலாம். இந்த தியரி இந்த பதிவுக்கும் பொருந்தும். இருந்தாலும் பலதரப்பட்ட வாதங்களை நீங்கள் கவனிக்க ஆரம்பித்தால் உங்களால் உண்மையை கண்டுபிடித்துவிட முடியும். 

Tuesday, October 4, 2011

நான் நடத்திய பத்திரிகையும், `நான் தமிழன்` ஜோக்கும்.



கூடங்குளம் பிரச்சினை சம்பந்தமாக இணையத்தில் ஒரு செய்தியை படித்தேன். அது குறித்து பதிவு போடும் எண்ணம் இல்லை. இருந்தாலும் அதில் சொல்லப்பட்ட புள்ளிவிவரம் என்னை குழப்பியதால்,மீண்டும் படிக்க நினைத்தேன். ஆனால் எங்கே படித்தேன் என்பது மறந்துவிட்டது. கூகுளில் `அணுசக்தி` என்று கொடுத்து தேடினாலும் கிடைக்கவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் `Indian nuclear energy` என்று கொடுத்து தேடினால், அது கடலை காட்டியது. பின்னர் அதில் பல வடிகட்டிகளை பயன்படுத்தி ஓரளவுக்கு எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டேன்.

சில நாட்கள் இப்படி தகவல்களில் மூழ்கி கிடந்ததில், ஆங்கிலம் என்ற மொழியின் அருமையும், இணையம் ஒரு கடலாக இருந்தாலும் அதில் ஆங்கிலம் என்ற மொழியின் அவசியத்தையும் புரிந்துக் கொள்ள முடிந்தது. அப்படியே இதை கற்றுக் கொள்ள நான் எடுத்த விடா முயற்சியும் நினைவுக்கு வந்தது.