!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Wednesday, October 17, 2012

தேவை ஒரு அடையாளம்

கடலூரில் சில மாதம் இலவச விளம்பர பத்திரிகை நடத்தினேன். முதல் இதழுக்காக டிசைன் செய்த போது, `என்ன கருத்து எதுவும் காணோம், பத்திரிக்கை என்றால் அது இருக்கணுமே!` என்றார் ஒருவர். சம்பிரதாயங்களை மீற முடியுமா. நானும் எழுதினேன்.

முதல் கருத்தாக (2005) எழுதியது ஹாஸ்பிட்டல்கள் பற்றி. அந்த சமயம் ஒருவர் புலம்பினார். ஏதோ ஒரு ஹாஸ்பிட்டலில் உறவினரை சேர்த்திருக்கிறார். பில் வந்த பிறகுதான் அவருக்கு பிபி எகிறியது.

ஆபத்து என்றவுடன் அருகில் இருக்கும் ஹாஸ்பிட்டலில் சேர்த்துவிடுகிறோம். ஆனால் அது நமது தகுதிக்கு தகுந்ததா என்பது நமக்கு தெரிவதில்லை.

சினிமா பார்க்க, ரயிலில் போக, லாட்ஜ்களில் தங்க என எல்லா இடத்திலும் முதல் வகுப்பு, இரண்டாம் வகுப்பு என வகைகள் இருப்பது போல் ஹாஸ்பிட்டல்களுக்கு தரக்குறியீடு இல்லை. இது தெரியாமல் பலர் மாட்டிக் கொண்டு புலம்புவார்கள்.

அவர்கள் அநியாயமாக வாங்கலாம் அல்லது சில இடங்களில் அந்த அளவுக்கு வசதிகள் இருக்கலாம். ஆனால் ஒரு ஹாஸ்பிட்டலுக்கு போகும் முன் அது நமது தகுதிக்கு உட்பட்டதா என்பது  நமக்கு தெரிய வேண்டும். எனவே லாட்ஜ்களுக்கு இருப்பது போல் இவர்களுக்கும் ஸ்டார் (அடையாளம்) தேவை என எழுதி இருந்தேன்.

சமீபத்தில் மத்திய அரசு இந்த முடிவுக்கு வந்திருக்கிறது. ஹாஸ்பிட்டல்கள் தங்கள் கட்டணங்களை போர்டில் எழுதி வைக்கவேண்டுமாம். மற்றும் அவர்கள் அளிக்கும் வசதிகளை பொறுத்து அவர்கள் தரம் பிரிக்கப்படுவார்களாம். நல்ல முயற்சி.

என்ன சட்டம் வந்தாலும் சில டாக்டர்களை திருத்த முடியாது. இருந்தாலும் தகுதிகளை வரைமுறை செய்வதன் மூலம் ஏழை மக்களை ஓரளவு எச்சரிக்கலாம் /காப்பாத்தலாம்.

இவர்களும் பாவப்பட்டவர்கள்தான்

நல்ல கருத்துக்கள் சில இடங்களில் ஒத்து வராது. இது யதார்த்தம். அந்த வகை பிரச்சினை இது.

சமீபத்தில் ஒருவர் மூன்று குழந்தைகளுடன் நடந்து போனார். மூன்றும் பெண் குழந்தைகள். நிச்சயம் அவர் இரண்டு போதும் என நினைத்திருக்கலாம். ஆனால் ஆண் வாரிசு என்ற ஆசை அவரை மூன்று குழந்தைக்கு தகப்பனாக்கி இருக்கிறது.

தமிழ்நாட்டிலும் இப்படி `முயற்சி` செய்து மாட்டிக்கொண்ட ஒருவரிடம் பேசினேன். `என்ன பண்றது ஆசைதான். ஆனா நம்ம தலையெழுத்த மாற்றமுடியுமா` என்று சலித்துக் கொண்டார். 

விருப்பம் போல் விளையாடிவிட்டு பின்னர் கருவை அழிப்பது குற்றம்தான். ஆனால் சில இடங்களில் விதிவிலக்கும்  தேவை. குழந்தை ஊனம் என தெரிந்தால் அதை அழிக்கிறோம். அதேபோல் முதல் முறை பெண் பிறந்து, இரண்டாவது முறையும் பெண் என்றால், அதை அழிக்க அரசு அனுமதிக்க வேண்டும்.

சிக்கலான பிரச்சினைதான். யாரவது சண்டைக்கு வரக்கூடும். ஆனால் இப்படி மூன்றையும் பெண்ணாக பெற்றவர்கள், இந்த கவலையிலேயே வாழ்கையை தொலைப்பர்களே, அது பாவம் இல்லையா? 

நாயை கொன்றால் அது மிருகவதை. ஆனால் ஆடு, கோழி போன்றவற்றை கொன்றால்...? அதுபோன்ற முரண்பாடா இது?

தாய்பாசம் 

சினிமாவில் ஹீரோவை குறும்பு செய்பவனாக, பெண்களை சீண்டுபவனாக காட்டுவதால், அதை  பார்த்து இளைஞர்கள் கெட்டுப் போகிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு.

அதேபோல் சினமாவில் சிறுவயது காதலையும் காட்டுவார்கள். அது தெய்வீகமானது என்று அதை காவியமாக்குவார்கள். இதை பார்த்து சிறுவர் சிறுமியர் கெட்டுப்  போகிறார்கள் என்று இன்னொரு குற்றச்சாட்டு.

இதே போல் பெண்களுக்கும் ஏதாவது இருக்குமே? இருக்கு. அது சின்னத்திரையில்.

அந்த காலத்தில் டஜன் கணக்கில் குழந்தைகள் பெற்றுக் கொண்டதால், பெண்கள் குழந்தைகளை குழந்தைகளாக பார்த்தார்கள். இப்போது இரண்டு என்ற வரைமுறைக்கு வந்துகொண்டிருப்பதால், கொஞ்சம் செல்லம் அதிகரித்திருக்கிறது.

இதில் இன்னும் கொஞ்சம் எண்ணையை ஊற்றும் விதமாக டிவி சீரியல்கள் இருக்கிறது. இந்த தாய்பாசத்தை வச்சி இவங்க பண்ற அலட்டல் இருக்கே...ஸ்ஸ்ஸ்.. தாங்க முடியல.

ஒரு காலத்துல பெண்களுக்கு 10 லிட்டர் தாய்ப்பாசம் பொங்குச்சின்னா, இந்த டிவி சீரியல்கள் புண்ணியத்தில் இனி அது 50 லிட்டராக மாறிவிடும். இது என்ன விளைவை ஏற்படுத்தப் போகிறதோ?

ஹார்லிக்ஸ் க்ரோவ்த் சேலஞ் 

சமீபத்தில் டிவியில் இந்த விளம்பரம் அதிகம் வருகிறது. ஹைதராபாத்தில் ஒரு வருடம் குழந்தைகளை வைத்து ஆராய்ச்சி செய்தார்களாம். பாதி பேருக்கு ஹார்லிக்சும் மற்றவர்களுக்கு சாதாரண ஒன்றும் கொடுத்தார்கள். முடிவு வழக்கம் போல் இவர்களுக்கு சாதகமாய்.

இப்படி ஆராய்ச்சி செய்ய பணம் இவர்களுக்கு ஒரு பிரச்சினை அல்ல. ஆனால் அப்படி செய்தார்களா என்பதுதான் என் சந்தேகம்.

விளம்பரங்களில் பொய் இருக்கும். அது கவிதைக்கு பொய் அழகு என்ற அளவில் இருந்தால் பரவாயில்லை. அப்பட்டமான புள்ளிவிவர பொய் என்றால் அது குற்றமாயிற்றே.

நடைமுறையில் இப்படி ஒரு ஆராய்ச்சி சாத்தியமே இல்லை. பல முரண்பாடுகள் இருக்கிறது. ஒரு வருடம் உங்க குழந்தைக்கு ஹார்லிக்ஸ் கொடுக்க போறோம் என்றால் தாய்மார்கள் சந்தோஷமாக ஒப்புக்கொள்ளலாம். ஆனால் ஆராய்ச்சிக்காக சாதாரண ஒன்றை கொடுக்கப்போகிறோம் என்றால், அந்த மற்ற குழந்தைகளின் தாய்மார்கள் ஒப்புக்கொள்வார்களா? அதுவும் இப்போது பெண்களுக்கு தாய்பாசம் கொஞ்சம் அதிகமாகவே பொங்கும் நிலையில் இது சாத்தியமே இல்லை.

இப்படி பரிசோதனை செய்த குழந்தைகளின் பெயர்களை மற்றும் அந்த ஆராய்ச்சி குறித்த விவரங்களை யாராவது கேட்டால் இவர்களால் தர முடியுமா? 

எனவே இப்படி வடிகட்டிய பொய்யை சொல்லும் நிறுவனங்களை என்ன செய்வது? நம் நாட்டில் பல துறைகளை கண்காணிக்க அமைப்புகள் இருக்கு. இருக்கு... அவ்வளவுதான்..

இவர் ஆம்பளை ஆயிட்டார். ஆனால்... 

வட இந்தியாவில் ஒருவர் 96 வயதில் அப்பா ஆகி இருக்கிறாராம். அம்மாவுக்கு 52 வயது. தமிழ்நாட்டில் கூட ஒரு பெண் 60 வயதில் போராடி தாயானார். இயற்கையா அல்லது செயற்கையா என தெரியாது. ஒரு தமிழ் வார இதழ் அந்த சாதனையை(?) செய்தியாக்கியது.. சில வருடங்களுக்கு முன் படித்தேன். 

இங்கே பலருக்கு தாங்கள் பெற்றோராக வேண்டும் என்ற வெறி இருக்கிறது. ஒரு குழந்தையை பெற்றால்தான்  ஒரு ஆண் ஆணாகவும், பெண் பெண்ணாகவும் முழுமை பெறுவார்கள் என்று சொல்லப்படுவதால், எப்படியாவது அதை நிருபித்துவிட விட வேண்டும் என போட்டி. பாவம், அன்னை தெரசாவும், காமராஜரும் இப்படி முழுமை பெறாமலே போய் சேர்ந்துவிட்டார்கள்.

இங்கே சமூகத்தையும் குறை சொல்ல வேண்டும். இப்படி குழந்தை இல்லாத பெற்றோர்கள் மற்றவர்களின் கிண்டலுக்கு உள்ளாகவேண்டும். அதற்கு பதிலடி கொடுக்க இவர்கள் போராடுகிறார்கள்.

இந்த போராட்டத்தை நான் தவறு சொல்லவில்லை. ஆனால் அதற்கு ஒரு கால அவகாசம் இல்லையா? ஒரு குழந்தை வளரும் வரை பொருளாதார ரீதியாகவும், உடல் ரீதியாகவும்  பெற்றோர்கள் பலமாக இருக்க வேண்டாம?

இது தவிர அந்த குழந்தைகள் சமூகத்தில் படும் அவமானங்கள் தனி. `டேய்..அப்பாவை கூட்டிக்கிட்டு வரசொன்னா, தாத்தாவை கூட்டிகிட்டு வந்திருக்காண்டா`  என்று கூட படிக்கும் பசங்கள் கிண்டல் பண்ணலாம். இப்படி முதிய பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைகளும் பல அவமானங்களை சந்திக்க வேண்டி இருக்கும்.

எனவே இப்படி முட்டாள்த்தனமாக காலம்கடந்து பெற்றோராக முயற்சிக்கும் தம்பதிகளுக்கு, யதார்த்தத்தை புரியவைத்து இதையும் தடுக்கவேண்டும்.

இவை அபூர்வமான சம்பவங்கள் என்றாலும், குறிப்பிட்ட வயதுக்கு மேல் பெற்றோராகும் தகுதி யாருக்கும் கிடையாது என்று சட்டம் வந்தாலும் நல்லதுதான்.

8 comments:

Yaathoramani.blogspot.com said...

அவசியம் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்களை
அருமையாக சுவாரஸ்யமாக பதிவு செய்துள்ளீர்கள்
தொடர வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

tha.ma 1

Anonymous said...

மிக அருமையான பதிவு. :)

திண்டுக்கல் தனபாலன் said...

பல தகவல்களின் அலசல்... நன்று ...

நன்றி...

tm3

Easy (EZ) Editorial Calendar said...

மிக அருமையான பதிவு....பகிர்வுக்கு மிக்க நன்றி....

நன்றி,
மலர்
http//www.ezedcal.com/ta(வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

வவ்வால் said...

சிவானந்தம்,

நல்ல பகிர்வு,

மருத்துவமனைகளில் தோராயமாக என்ன கட்டணம் ஆகும்னு சொல்லிடுவாங்களே, மேலும் இங்க்கு உங்க வசதிக்கு சரியா வராது செக்கப் அப்புறம் வேற மருத்துவமனைக்கு போயிடுங்க என்ன்றும் சொல்வதை பார்த்துள்ளேன்.

இப்போ எல்லா மருத்துவமனையிலும் பிரிபெய்ட் தான், எனவே முதலிலேயே கட்டணம் தெரிந்துவிடும், பின்னர் கூடுதலாக அறை வாடகை இன்ன பிற என்பது சேர்க்கையின் போதே தெரிந்துவிடுகிறது.

நாம் என்ன செலவானலும் பரவாயில்லை என சொன்னால் தான் ,அப்புறம் பில் வரும் போது பிரஷ்ஷர் வரும் :-))

------------
//எனவே இப்படி முட்டாள்த்தனமாக காலம்கடந்து பெற்றோராக முயற்சிக்கும் தம்பதிகளுக்கு, யதார்த்தத்தை புரியவைத்து இதையும் தடுக்கவேண்டும்.//

ஹி...ஹி என்.டி.திவாரி போன்ற சுய முயற்சி உடையவர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்

சிவானந்தம் said...

வாங்க ரமணி சார்,
இக்பால் செல்வன்,
தனபாலன்,
EZ

உங்கள் அனைவரின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிவானந்தம் said...

வாங்க வவ்வால்,

////மருத்துவமனைகளில் தோராயமாக என்ன கட்டணம் ஆகும்னு சொல்லிடுவாங்களே, மேலும் இங்க்கு உங்க வசதிக்கு சரியா வராது செக்கப் அப்புறம் வேற மருத்துவமனைக்கு போயிடுங்க என்ன்றும் சொல்வதை பார்த்துள்ளேன்.///

இப்போது மாறி இருக்கலாம். நான் அதை 2005 எழுதியபோது இந்த பிரச்சினை அதிகமாக இருந்தது.

///ஹி...ஹி என்.டி.திவாரி போன்ற சுய முயற்சி உடையவர்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்///

கவனத்தில் என்ன, வெட்டியே விட வேண்டும்.

Post a Comment