நாட்டை உலுக்கிய டெல்லி கற்பழிப்புக்கு பின்னர் செய்திகளை தொடர்ந்து கவனித்து வந்தால், அது பெரிய அளவில் மாற்றத்தை கொண்டு வந்ததாக தெரியவில்லை.
தினம் ஒரு தகவல் என ஏதாவது ஒரு ஒரு கற்பழிப்பு செய்தி வருகிறது. இதனால் ஏற்பட்ட பாதிப்பால் இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கிறது. அதிலும் பெண்கள் இந்தியா என்றாலே அலறுகிறார்கலாம். சமீபத்திய புள்ளிவிவரம் அப்படி சொல்கிறது. இதனால் நமக்கு அன்னிய செலாவணியும் போச்சு, மானம் மரியாதையும் போச்சு.
சட்டம் இந்த குற்றங்களுக்கு கடுமையை காட்டுவதில்லை என்பது ஒரு முக்கிய குறையாக சொல்லப்பட்டது. அரசு தற்போது சட்டங்களை கடுமையாகி இருப்பதால், அந்த ஓட்டையை அடைத்தாகிவிட்டது என்றே நினைப்போம்.