கடந்த சில மாதமாக எழுத முடியவில்லை. ஒரு உறவினருக்கு உதவியாக ஆஸ்பிடல் போகும் வேலை வர, பதிவுகள் தடைபட்டது. பின்னர் வழக்கமாக அவ்வப்போது வரும் மனச்சோர்வு ஆட்கொள்ள, பதிவுகள் நின்றுவிட்டது. அதன்பிறகு பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது ரயில்வே துறை குறித்த ஒரு விவாதத்தை கவனித்தபோதுதான்.
இதை சன் நியுஸில் கவனித்தேன். ரயில்வே துறை லாபகரமாக நடக்கிறது; (கடந்த காலங்களில்) 10,000 கோடி லாபம் பார்த்திருக்கிறது; அரசுக்கு டிவிடெண்டாக அது கொடுக்கப்பட்டிருக்கிறது என்று ஒருவர் சொன்னார்.
லாபம்?
வழக்கம் போல் இது அரைகுறை புள்ளி விவரம். லாபம் என்றால் என்ன, அதை எப்படி கணக்கிட வேண்டும் என்று வரைமுறை இல்லாமல் மேம்போக்காக சொல்லப்படுபவை.
