இங்கே என் பதிவுகளை போடுவதற்கு முன் சில பேருக்கு நான் நன்றி சொல்லியாக வேண்டும்.
எனது கடிதங்களை அங்கீகரித்து என்னை உற்சாகப்படுத்திய தினமலருக்கு என் முதல் நன்றி.
எனது கடிதங்களை படித்து, ஆரோகியமான விமர்சனங்களை நாங்கள் அனுமதிப்போம் என்று கூறி எனது கடிதங்களை தினமலருக்கு அனுப்பிய புழல், மத்திய சிறை,2, கண்காணிப்பாளர் திரு. ராஜேந்திரன் அவர்களுக்கும் என் நன்றி.
மிக முக்கியமாக, சிறையில் இருப்பவர்கள் எல்லாம் குற்றவாளிகள் / சமுக விரோதிகள் என்று கருதாமல், `நியாமற்ற செயல்` என்ற என் கடிதத்தை தினமலரில் படித்துவிட்டு, என் எழுத்தின் மூலம் என்னை அடையாளம் கண்டு, முகம் தெரியாத எனக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக கடிதம் எழுதிய மதுரை, யாகப்பா நகரை சேர்ந்த திரு. G அமிர்தசேகரன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி.