!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, October 23, 2010

ஆஸ்திரேலியாவில் அடி வாங்குவதை தடுக்கலாம்...

தினமலர் 21-06-09 இதழில் வெளியான கடிதம்

(சிறையிலிருந்து அனுப்பி பிரசுரமானது) 

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதும் , இங்கே இந்தியாவில் கல்லூரிகளில் சட்டவிரோதமாக லட்சகணக்கில் நன்கொடைகள் வாங்குவதும் மத்திய அரசின் மோசமான கல்வி கொள்கையை காட்டுகிறது .

கல்வியின் அவசியத்தை மக்கள் உணர்ந்து வரும் வேளையில் , அதற்க்கு தகுந்தாற்போல் கல்விநிலையங்களின் எண்ணிக்கையை உயர்த்த மத்திய அரசு தவறிவிட்டது .

மிக அதிகப்படியான நன்கொடைகளை தவிர்க்கவும் மற்றும் தரமான கல்வியை தேடியும், இந்திய மாணவர்கள் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை நாடுவதை மத்திய அரசு தடுக்கவில்லை . ஆகவே வெளிநாட்டு கல்வி நிறுவனங்களையே இந்தியாவில் நேரடியாக அல்லது இந்திய நிறுவனங்களின் துணையோடு நடத்த மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் .

இதன் மூலம் நமக்கும் அந்நிய செலவாணி மிச்சமாகும்.

வளர்ச்சி அடைந்த நாடுகளின் பொருளாதார புள்ளிவிவரங்களை நான் இணையதளம் மூலம் ஆராய்ந்திருக்கிறேன் .இன்றைய வளர்ச்சி அடைந்த நாடுகள் தங்களின் வளர்ச்சிக்காக பாராம்பரிய தொழிலையோ அல்லது இயற்கை ஆதாரங்களையோ நம்பி இருக்கவில்லை .

மாறாக, இன்றைய சூழ்நிலைக்கு எந்த துறையில் முதலீடு செய்தால் லாபம் என கணித்து அதன்படி செயல்பட்டு வெற்றி கண்டிருக்கின்றன.

கல்வியை ஒரு லாபமளிக்கும் துறையாக கணித்து, அதன்முலம் ஆஸ்திரேலியர்கள் பெருமளவு அன்னிய செலாவணியை ஈட்டுவது, அவர்களுடைய புத்திசாலி தனத்தைக்  காட்டுகிறது .

இந்தியாவும், இயற்கை சுற்றுலா, மருத்துவ சுற்றுலா மற்றும் கல்வி சுற்றுலா போன்ற துறைகளில் நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், அன்னிய செலாவணியை ஈட்டவும், வாய்ப்புகள் இருப்பதை உணர்ந்து, இத்துறைகளில் கூடுதல் கவனத்தையும் முதலீடுகளையும் செய்யவேண்டும் .

0 comments:

Post a Comment