ராஜ நடராஜன் said... சிவா!உங்களுக்கு எப்படி புரிய வைப்பது என்று தெரியவில்லை.என்னை விட நேரடி வாழ்க்கை அனுபவங்கள் உங்களுக்கு இருந்தும் பிரபாகரன் என்ற சொல்லையும் தாண்டிய ஒரு போராட்டத்தின் மையப்புள்ளி பற்றி அலசாமலும் ஈழப் பிரச்சினைக்கான தீர்வை நோக்கி நகராமலும் குற்றம் சொல்லல் என்ற எல்லையிலே நீங்கள் நிற்பதால் உங்கள் மொழி... வார்த்தை விளையாட்டை நிறுத்திக்கொள்கிறேன்.நன்றி
இது ஈழம் குறித்த ஒரு பதிவின் விவாதத்தில் ஒரு ஈழத்தமிழர் கடைசியாக போட்ட பின்னோட்டம். அவர் சில குற்றச்சாட்டுகளோடு இந்த விவாதத்தை நிறுத்திக் கொண்டார். ஆனால் என்னால் நிறுத்த முடியவில்லை. அவர் மட்டுமில்லை பல இந்திய, இலங்கை தமிழர்கள் மத்தியிலும் இதே உணர்வுதான் இருக்கும். எனவேதான் இந்த பதிவு.
*****************************************************************
நண்பரே, ஈழத்தமிழனின் இன்றைய சோகமான நிலையில் நான் வெந்தபுண்ணில் வேல் பாய்ச்சவில்லை. ஒரு தமிழன் தோற்று, அங்குள்ள தமிழர்கள் நடுத்தெருவில் நிற்பதை இங்குள்ள எந்த தமிழனும் விரும்பவில்லை. ஆனால், இந்தியாவை குறை சொல்லும் முன், உணர்ச்சிகளை தாண்டி நிதானமாக சிந்தித்துப் பாருங்கள். தவறு (அதிகம்) யார் பக்கம் என்பது புரியும். சிங்களவன் எப்படி வெற்றி பெற்றான் என்பது நமக்கு தேவையில்லாத ஓன்று. ஆனால் ஒரு தமிழன் ஏன் தோற்றான்? அதற்கு காரணங்கள் என்ன என்பதை நாம் அலசி ஆராய்ந்தால்தான், மற்றொரு ஈழப்போராட்டம் வரும்போது கவனமாக இருக்க முடியும்.