என் கடையில் வேலை பார்த்த இருவர் தலித்துகள். நான் அதையெல்லாம் தாண்டியவன். எனவே எனக்கு அது பிரச்சினையாகத் தெரியவில்லை. ஆனால் என் கடையில் ஐயர் ஒருவர் அடிக்கடி லாட்டரி டிக்கெட் வாங்குவார். அவர்தான் ஒரு முறை ஒருவரை சுட்டிக்காட்டி எதேச்சையாக கேட்டார் `இவர் தலித்தா?` என்று.
நான் அதற்கு முன் தலித்துகளிடம் பழகியதில்லை என்பதால் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லை. அதைப் புரிந்துகொள்ளும் அளவுக்கு வயதும் அனுபவமும் அப்போது எனக்கு இல்லை. அவர் வயதானவர். ஏதோ ஒரு வித்தியாசத்தை கவனித்துவிட்டார். `பேச்செல்லாம் டீசெண்டா இருக்கே!` என்று கேட்டுவிட்டார். இரண்டு தலித் இளைஞர்கள் இப்படி டீசெண்டாக பேசுவார்கள், நடந்துகொள்வார்கள் என்பது அவருக்கு ஆச்சரியமாக இருந்தது.
என்னிடம் வேலை பார்த்த இருவரும் சம்பிரதாய பட்டதாரிகள். இரண்டாவது, உண்மையிலேயே அவர்களுடைய பேச்சில் நாகரிகம் இருந்தது. அதேசமயம் அந்த ஐயரும் பிராமணராக இல்லாமல் பெருமளவு மாறியிருந்தார். இரண்டு சமூகமும் குணத்தில் மாறிவிட்டது என்பது நல்ல விஷயம் என்பதால் அது ஒரு சின்ன தகவலாக மனதில் பதிந்து மறைந்துபோனது.
ஆனால் சிறைக்குப் போன பிறகுதான் சில விஷயங்கள் உறைத்தன. அங்கே நான் இருந்த பிளாக்கும் சரி, அட்மிஷன் செல்லும் சரி, பெரும்பாலும் தலித்துகள்தான். அதில் இந்து, கிறிஸ்தவர் என எல்லாமே உண்டு.
முதலில் நானே தலைவலியில் இருந்தேன். எதையும் கவனிக்கும் மனநிலையில் நான் இல்லை. பின்னர் நிதானமாக கவனித்தபோதுதான் சில விஷயங்கள் புரிந்தன. அவர்களில் பெரும்பாலோர் தொடர் குற்றவாளிகள், கஞ்சா அடிப்பவர்கள். அதைவிட முக்கியமான விஷயம், கெட்ட வார்த்தைகள் நான் தினம் கேட்கும் வார்த்தைகளாக மாறிப்போனது.
ஒருவன் தன் நெருங்கிய நண்பனின் அம்மாவையே கெட்ட வார்த்தையால் திட்டினால் அவர்கள் தலித்கள் என்ற முடிவுக்கு வந்துவிடலாம் போலிருக்கிறது. அதை அவர்கள் தவறான நோக்கத்தில் சொல்வதில்லை. இப்படிப்பட்ட வார்த்தைகளை எல்லா இடங்களிலும் ஜாலியாக பயன்படுத்துவது தவறே இல்லை என்ற மனநிலையில் அவர்கள் இருக்கிறார்கள் என்று தான் புரிந்துகொள்ள வேண்டும்.
நான் அங்கே போன முதல் வாரத்திலேயே இரண்டு இளைஞர்கள், அதாவது தலித்கள், அவர்களுக்குள் அம்மாவையெல்லாம் இழுத்து திட்டிக்கொண்டார்கள். அவர்கள் பரம்பரை விரோதிகள் என நினைத்தேன். ஆனால் சில மணி நேரங்களிலேயே இருவரும் ஒன்றாக பீடி அல்லது கஞ்சா அடித்துக்கொண்டிருந்தார்கள்.
எனக்கு வேறு வழியில்லை. அந்த செல் எனக்கு பாதுகாப்பாக இருந்ததால் அங்கேயே இருந்தேன். கெட்ட வார்த்தைகளும், கஞ்சா புகையும் பழகிப்போனது. அதன் பின் ஒரு முறை அங்கே பணியில் இருந்த சிறை காவலரிடம் பேசிக்கொண்டிருந்தேன்.
நான் தொடர்ந்து அங்கேயே இருப்பதையும், என்னுடைய பேச்சில் வித்தியாசத்தையும் கவனித்தவர். `கேஸ் என்ன?` என்று கேட்டவர், `ஒரே செக்சன், பெயில் கிடைத்துவிடுமே.. ஏன் போவல?` என்று கேட்டார். கதையை சுருக்கமாகச் சொன்னேன்.
`இந்த செல் புடிச்சிருக்கா?` என்றும் கேட்டார். `பிரச்சினை இல்லை. கெட்ட வார்த்தையும், கஞ்சா புகையும்தான் தலைவலி` என்றேன். `நீ என்ன ஜாதி?` என்றும் அவர் கேட்க .. சொன்னேன். `உனக்கு இந்த இடம் சரிப்படாது. பெயில்ல போற வேலையை பாரு` என்று உபதேசித்தார். இது நடந்தது 2008- ல். நான் அதன்பின் வேறு பிளாக் மாறிவிட்டேன். இந்த இரண்டாவது அனுபவமும் ஒரு தகவலாக மனதில் பதிந்து மறந்துபோனது.
அதேசமயம் நான் இருந்த செல்லில் வேறு சில அனுபவங்களும் எனக்கு கிடைத்தன. அதாவது வெளி உலகில் நீங்கள் ஒரு பட்டப்படிப்பு முடித்தால் சுமாரான மரியாதை. மேலும் சில பட்டங்கள் வாங்கினால் உங்கள் மரியாதை மேலும் கூடும். இந்த தியரி சிறையிலும் உண்டு.
இப்படித்தான் நான் அங்கே இருந்த சமயம் ஒருவர் வந்தார். புள்ளிங்கோதான். வயது இருபதிற்குள். திருட்டு வழக்கு. திருட்டு வழக்கும் தரம் குறைந்த ஒன்று போலிருக்கிறது. அதைவிட தரத்தில் உயர்ந்தது வழிப்பறி.
ஏனென்றால் திருடுவது என்பது யாரும் இல்லாத நேரத்தில் செய்வது. அதற்கு தைரியம் தேவையில்லை, திறமை இருந்தால் போதும். வழிப்பறி அப்படி இல்லை. எதிரே ஆள் இருக்கிறான். அவனை மிரட்ட வேண்டும். அவன் திருப்பி அடிக்கும் வாய்ப்பிருக்கிறது. எனவே இங்கே ராபரி என்பது கிட்டத்தட்ட ரவுடி என்ற நிலை. இதற்கு சிறையில், தலித்துகள் மத்தியில் மரியாதை அதிகம்.
அந்த சமயத்தில் இவருக்கும் உள்ளே இருந்த இன்னொரு புள்ளிங்கோவுக்கும் சண்டை வந்துவிட, `நீ என்ன தெப்ட் தானே` என்று மட்டமாக ஒரு வார்த்தை சொல்லிவிட்டான். எதிரே அந்த பையன் ராபரி கேஸ். அந்த அகங்காரம் அவனுக்கு.
இப்போது இந்த பையனுக்கு அவமானமாகிவிட்டது. இவனும் ராபரியில் இறங்கினாலும் அது அவனுக்கு சமமாகத்தான் இருக்கும். இந்த பையன் அதையும் தாண்டி பயணிக்க வேண்டும். அதுதான் கெத்து. எனவே அடுத்தமுறை உள்ளே வந்தால் மட்டை கேஸோடுதான் வருவேன் என்று கருவிக்கொண்டிருந்தான்.
அதன்பின் பெயிலில் போனான். ஒரு மாதம் கழித்து வந்தான். இப்போது மட்டை கேஸ். என்னிடம் சிறையில் கொடுக்கும் அட்மிஷன் கார்டை காட்டி, `பாருண்ணே! 302 கேஸ்.. `என்று சந்தோஷமாக சொன்னான்.
இப்போது இந்த 4 சிறுவர்கள் வெட்டியதைப் பார்த்து நீங்கள் அதிர்ச்சி அடைந்ததை போல், அப்போது நான் அதிர்ந்தேன். மட்டை கேஸோடு வருவேன் என்று சொல்லி, அதை செய்தும் காட்டிய துணிச்சலை என்னவென்று சொல்வது.
இது உண்மையிலேயே ஏதாவது சண்டையில் நடந்ததா, அல்லது சிறையில் மட்டை கேஸுக்கு மரியாதை அதிகம் என்பதால் அந்த பட்டத்துக்காக செய்தானா என்பது எனக்கு தெரியவில்லை. நான் அந்த பசங்களிடம் பட்டும் படாமலும்தான் பழகினேன். கொஞ்சம் ஜாலியாக பழகியிருந்தால் மேலும் பல தகவல்கள் எனக்கு தெரிந்திருக்கும். அவர்களும் என்னிடம் மரியாதையாகவே நடந்து கொண்டார்கள். இது சிறை அனுபவம்.
அதன்பின் அகமதாபாத் வந்தேன். இங்கேயும் ஒரு முறை இந்த ஊர் தலித்துகள் பெரும்பான்மையாக இருந்த இடத்தில் பேயிங் கெஸ்டாக இருக்க வேண்டியிருந்தது.
அதே கதைதான். இங்கே அவர்கள் வாயில் குஜராத்தி புகுந்து விளையாடும். அகராதியில் இல்லாத வார்த்தைகள். அவர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள் என்ற ஆராய்ச்சியில் இறங்குவதால் எந்த பலனும் இல்லை. தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்ற பழமொழிதான் காரணம்.
தற்போது தலித்துகள் மத்தியில் கல்வியறிவும் வளர்வதால், ஒரு தசாப்தத்திற்கு 10 சதவிகிதம் குறையும் என கணக்கிட்டு இன்னும் ஒரு ஐம்பது வருடம் போனால் இது மறைந்துவிடும் என நம்பிக்கை வைக்கலாம்.
இது தலித்துகளுக்கு மட்டுமில்லை, எல்லோருக்கும் பொருந்தும். `நாங்க ஆண்ட பரம்பரை` என்ற வியாதி பிடித்த நாய்கள், `நாங்கள் பிறக்கும் போதே அறிவாளிகள். அந்த சர்டிபிகேட்டோட பிறக்கிறோம்`என்று உளறும் அவாக்கள் என எல்லாம் இதே கதைதான். இதற்கு மருந்து, காலம்... காலம்.. காலம்தான்.
சரி தற்போதைய பிரச்சினை என்ன? என்ன செய்ய வேண்டும்?
தற்போது ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. அம்பேத்கர் வக்கீலாக இருந்ததால் அவருடைய சீடர்களும் அதேயே பின் தொடர்ந்து அங்கேயே பயணிக்கிறார்கள். நல்ல விஷயம்தான். ஆனால் அம்பேத்கர் சட்ட அறிவை மட்டும் வளர்க்கவில்லை, பொது அறிவையும் சேர்த்தே வளர்த்தார். அதுதான் அவருக்கு இந்தியாவின் சட்டமேதை என்ற பெருமையை தேடித் தந்தது.
ஆனால் இப்போதிருக்கும் தலித்துகளுக்கு அந்த அளவுக்கு பொறுமையில்லை. சட்ட அறிவை பெற ஐந்து ஆண்டுகள் போதும். பொது அறிவு என்பது அளவில்லாத காலம். அவ்வளவு காலம் காத்திருக்க முடியாது. எனவே இருப்பதை வைத்து கல்லா கட்டும் முடிவுக்கு அவர்கள் வந்துவிட்டார்கள்.
இன்னொரு பக்கம் பிராமணர்கள் அவர்களுடைய ஆட்களை எப்படியாவது நீதிபதியாக்கிவிடுகிறார்கள். தலித் வக்கீல்களால் அது முடியவில்லை. நீ உன் ஆட்களுக்கு சப்போர்ட் பண்ணா, நான் எங்க ஆட்களுக்கு... அதாவது பெயில் வாங்கித்தருகிறோம் என இவர்கள் வேறு ஒரு ஆபத்தான விளையாட்டை விடுகிறார்கள். இங்கே லாஜிக் பார்க்கக்கூடாது.
நீதிபதிகள் தகுதி அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களா, குற்றவாளிகளுக்கு பெயில் கொடுப்பது சரியா என்ற கேள்வியெல்லாம் இங்கே யாரும் கேட்கக்கூடாது. இங்கே இனம் தன்னுடைய இனத்துக்கு ஏதோ ஒரு வகையில் சலுகை செய்கிறது, பாதுகாக்கிறது. அதுதான் தலைவலி.
ஒரு பக்கம் வக்கீல்களில் தலித்துகள் எண்ணிக்கை அதிகரிப்பதால் அவர்களை பகைத்துக்கொள்ளவும் முடியாது. இன துவேஷம் காட்டுகிறார் என புகார் போய்விட்டால், பிரமோஷன் பாதிக்கப்படும் என்பதால் நீதிபதிகளும் பயப்படுகிறார்கள். எனவே ஒரு தலித் வக்கீல் அவருடைய கிளையண்ட்டுக்கு பெயில் கேட்டால் கூடுமானவரை கொடுத்தே ஆகவேண்டிய நிர்பந்தத்தில் நீதிபதிகள் இருக்கிறார்கள். இது ஒரு இடியாப்ப சிக்கல்.
அப்படியென்றால் மற்ற சமூகத்தை சேர்ந்த வக்கீல்கள் யோக்கியமா என்று கேட்கக்கூடாது. அவர்கள் பணத்துக்காகவே இந்த காரியத்தை செய்வார்கள். ஆனால் தலித்துகள் இவன் நம்ம ஆள் என்ற உணர்வில், குறைந்த கட்டணத்தில் அதை செய்கிறார்கள். எனவே இங்கே தலித்துகளுக்கு கஞ்சாவும் மலிவாக இருக்கிறது, பெயிலும் மலிவாக இருக்கிறது.
இன்னொரு பக்கம், இந்த படித்த, பண்பட்ட தலித் வக்கீல்களை பார்த்து, ரவுடி தலித்துகள் திருந்துவார்கள் என பார்த்தால், அதுவும் நடக்கவில்லை. ரவுடிகளுக்கு வருமானம் அதிகம். அவர்களும் நன்றாக `ஜாலியாக` இருக்கிறார்கள் என்பதால், இப்போது வக்கீல்களும் கிரிப்டோ ரவுடிகளாக மாற ஆரம்பித்திருக்கிறார்கள். அதற்கு இந்த ஒரிஜினல் ரவுடிகள் பயன்படுவார்கள் என்பதால் அவர்களுடைய நெருக்கமும் அதிகரித்திருக்கிறது. இதுவும் கவலைப்பட வேண்டிய விஷயம்.
இதற்கு ஒரே வழி, சட்டப்பூர்வமாக பெயில் பெறுவதற்கான வழிமுறைகள் கடுமையாக மாற்ற வேண்டும். பெற்றோர்களுக்கு இரண்டு குழந்தைகள், மாணவர்களுக்கு இரண்டு மொழிகள் என லிமிட் வைத்ததை போல், குற்றவாளிகளுக்கு இரண்டு குற்றங்கள்தான் லிமிட் என ஒரு கட்டுப்பாடு தேவை. அதற்கு மேல் போனால், பெயில் கிடையாது, கதை முடிந்தது என்ற பயம் அவர்களுக்கு வரவேண்டும்.
அதாவது, பொது நோக்கங்களுக்காக போராடும் வழக்குகளை தவிர்த்து, சுயநலம், சைக்கோத்தனம், தேசவிரோதம் போன்ற குற்றங்கள் இரண்டாவது முறையாக பதிவு செய்யப்படுமேயானால், குறைந்தபட்சம் 2-5 ஆண்டுகளுக்கு பெயில் கிடையாது என்ற சட்டப்பூர்வ நிர்பந்தம் இருந்தால், நீதிபதிகளும் பெயிலை நிராகரித்துவிடுவார்கள்.
தற்போது எவனோ ஒருவன் பல வழக்குகளில் சிக்கி அது மட்டை கேஸாக இருந்தாலும், பெயிலில் வந்து ஜாலியாக இருக்கிறான். அதை பார்த்துதான் இந்த சிறுவர்கள், அது ஒரு கெத்து என இப்படி இப்படி தடம் மாறுகிறார்கள். அந்த குறையை சரிசெய்யாதவரை எதுவும் மாறப்போவதில்லை.
பெயில் மட்டுமின்றி வேறு சில கட்டுப்பாடுகளும் தேவை. தற்போது பாஸ்போர்ட் பெற போலீஸ் வெரிஃபிகேஷன் கட்டாயம். அதேபோல் திருமணத்திற்கும் கொண்டுவந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இரண்டு வழக்கிற்கு மேல் இருந்தால் அவர்களுக்கு இந்த வெரிஃபிகேஷன் கிடைக்காது என்ற நிலை வந்து, அவர்களுடைய திருமண வாழ்க்கை கேள்விக்குறி ஆகுமேயானால் நிச்சயம் அது ஒரு நல்ல மாற்றத்தை கொண்டு வரும்.
அப்படியும் திருட்டு கல்யாணம் அல்லது `அப்படியே` வாழும் போக்கும் அதிகரிக்கலாம். ஆனால் திருமண சான்றிதழ் இல்லாமல் ரேஷன் கிடைக்காது, பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க முடியாது என நிர்பந்தங்கள் அதிகரிக்கும் போது, வேறு வழியில்லாமல் பெண்கள் இவர்களை புறக்கணிக்கும் சூழ்நிலை உருவாகும்.
உபதேசங்கள் மட்டும் ஒருபோதும் சமூகத்தை திருத்தாது. மிரட்டல்களும் நிர்பந்தங்களும் மட்டுமே அவர்களை மாற்றும்.

0 comments:
Post a Comment