!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Thursday, April 9, 2026

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல். மீண்டும் போரா?

மீண்டும் போர் செய்திதான். இஸ்ரேல் லெபனானில் குண்டு மழை பொழிந்து இருக்கிறது. கணிசமான மக்கள் இறந்திருக்கிறார்கள். போர் நிறுத்தம் இங்கே பொருந்ததாம். இது என்ன குழப்பம்?

வழக்கமாக தேர்தல் நன்னடத்தை விதிமுறை அமலாகப்போகிறது என்பது தெரிந்தவுடன் நம் ஊர் அமைச்சர்கள்   கடுமையாக `உழைத்து` பல திட்டங்களுக்கு ஒரே நாளில் அனுமதி வழங்குவார்கள்.காரணம் உங்களுக்கு தெரியும். அதே கதைதான் இங்கேயும். எல்லா போர் நிறுத்தங்களும் இப்படித்தான். கடைசி நிமிட இலக்கை அந்த ஒப்பந்தத்தை மீறி முடித்துக்கொள்வார்கள். 

ஈரான் இப்படி இறங்கி வரும் என்று இஸ்ரேல் எதிர்பார்த்திருக்கும். ஆனால் சில கணக்குகள் அங்கே நிலுவையில் இருந்திருக்கும். அதை சரிசெய்யும் முன் இந்த ஒப்பந்தம் வந்துவிட்டது. அதனாலதான் இப்படி.

ஈரான் - இஸ்ரேலுக்கு எல்லை இல்லை. லெபனானுக்கு இருக்கிறது. எனவே இங்கே இருக்கும் ஆபத்து அதைவிட பெரியது. அந்த  ஆபத்தை நியூட்ரிலைஃஸ் செய்ய வேண்டியது அவசியமாகிறது. இதுவும் ஒரு குழப்பம். 

அல்லது இப்படியும் இருக்கலாம். வழக்கமாக கடன்காரன் வீடு தேடி வருவான். கணவன் வீட்டிலேயே இருப்பார். மனைவி `அவர் இல்லைங்க` என்று பொய் சொல்லி சமாளிப்பார். அதன்பிறகு 10 நிமிஷமாவது வெளியே வரக்கூடாது. அதுதான் புத்திசாலித்தனம். ஏன்னென்றால் சில அனுபவஸ்தர்கள் மீண்டும் வந்து பார்ப்பார்கள்.

இந்த ஹிஜ்புல்லா போராளிகளுக்கு அந்த அறிவு இல்லை. போர் நிறுத்தம் என்றவுடன் மறைவிடத்திலிருந்து வந்து பார்ட்டி வைத்திருப்பார்கள் போலிருக்கிறது. இஸ்ரேலுக்கு இந்த தகவல் போய்விட்டது. முக்கியமான `தலைகள்` வெளியே வந்தவுடன் இது கோல்டன் ஆபர்ச்சுனிடி என்பது தெரிந்துவிட்டது. ஒப்பந்தம் இன்னும் இரண்டு நாள் கழித்து மீண்டும் வரலாம். ஆனால் இது நல்ல சான்ஸ் என விளையாடிவிட்டார்கள்.

வழக்கம் போல் இப்படிப்பட்ட தலைகள் எல்லாம், சுற்றி பொது மக்களை வைத்துக் கொண்டே வீரம் பேசுவார்கள் என்பதால், அவர்களும் பலியாகிவிட்டார்கள். உலகம் முழுக்க போராளிகள் இப்படித்தான் போலிருக்கிறது. போராளிகள் மக்களுக்காக போராடுகிறோம் என்று சொல்வார்கள், ஆனால் இந்த மக்களின் மரணத்துக்கும் அவர்களே ஒரு காரணமாக மாறுவதுதான் காலத்தின் கொடுமை.   

0 comments:

Post a Comment