!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, April 20, 2026

அமெரிக்கா ஒரு பேப்பர் டைகரா?

அராத்துவின் ஈரான் போர் குறித்த ஒரு பதிவில் கருத்து போர் நடந்து, அது கொஞ்சம் நீளமாக போய்விட்டது. அந்த பின்னூட்டங்கள் இங்கே ஒரு பதிவாக...

அராத்துவுக்கு கென்னடி அளித்த பதில்,

சூழலுக்கு ஏற்ப உங்கள் பார்வையும் நோக்கமும், ஏகாதிபத்திய தலைவரின் செயல்பாடுகள் போல தடம் மாறுகிறது. ஐரோப்பிய ஒன்றியம் தனித்து செயல் பட துவங்கியுள்ளது. ரஸ்யா - சீனா தங்களது வர்த்தகத்தை இனி டாலரில் செய்யப் போவதில்லை என அறிவித்துள்ளது.

அமெரிக்க தடையையும் மீறி இஸ்ரேல் நேற்றைய தினம் லெபனானில் மீது தாக்குதல் நடத்தி உள்ளது. அமெரிக்கா இந்த போரில் பின் வாங்காமல் இருக்க இஸ்ரேல் தூபம் போட்டுக்கொண்டே இருக்கிறது.

இதுதான் கள நிலவரம்.

இதற்கு எனது பதில்

Kennedi அமெரிக்க - ஐரோப்பிய சண்டை பங்காளி சண்டை போன்றது. அடுத்த விசேஷத்தில் கூடிவிடுவார்கள். தலைவர்கள் மாறியதும் அங்கே முரண்பாடுகள் சரியாகிவிடும்.

ஐரோப்பிய கூட்டணி என்பது மக்கள் நலக்கூட்டணி என சின்ன பசங்க ஒரு கூட்டணி வைச்ச கதைதான். ஒரு கூட்டணி என்றால், தலைமை தாங்க மிகப் பெரிய தலை வேண்டும்; அது ஐரோப்பாவில் இல்லை. எனவே அது நிலைக்காது.

டாலருக்கு மாற்று தேவை; ஆனால் சீனாவும் சர்வாதிகார நாடு என்பதால் இதுவும் நிலைக்காது. வேறு ஒரு வழி வந்தால் அது சாத்தியம். மொத்தத்தில் அமெரிக்க எதிர்ப்பாளர்கள் இப்படியே புலம்பிக்கொண்டிருங்கள். இப்போதைக்கு அமெரிக்காவுக்கு மாற்று இல்லை என்பதுதான் நிதர்சனம்.


Kennedi

Shivanantham Nandha இந்த தன்னம்பிக்கை இல்லாமை தான், 250 வயதே ஆன அமெரிக்கா இன்றுவரை உலக சண்டியர்களின் தலைவன் தான் மட்டுமே என்று அங்கலாயித்து கொண்டிருக்கிறது.

39 டிரில்லியன் டாலர்கள் கடனை வைத்துக் கொண்டு, தேவைக்கு அதிகமான டாலர்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டு, பொருளாதார ரீதியாக தோல்வியடைந்து நிற்கும் பேப்பர் பொம்மை தான் அமெரிக்கா.

பூலோக ரீதியாக பாதுகாப்பான நிலப்பரப்பில் அமர்ந்து கொண்டு, உலகின் எந்த மூலையிலாவது போர் நடத்தி ஆயுதங்களை விற்று பிழைப்பை நடத்தி, அதை தடுக்கிறேன் பேர்வழி என இரட்டை வேடம் போடும் நாசகார நாடு அமெரிக்கா.

ஈரான் என்கிற ஒரு நாடாவது எதிர்த்து நிற்கிறதே. இந்த தைரியம் எவருக்கும் இல்லை.

Shivanantham Nandha

Kennedi தன்னம்பிக்கை என்பது வேறு எதார்த்தம் என்பது வேறு. இங்கே அமெரிக்க வரலாறு 250 ஆண்டு என்று சொல்கிறீர்கள். இதுவே பெரிய முரண்பாடு. அங்கே இருக்கும் ஐரோப்பிய மக்களுக்கு இது பொருந்துமா? அவர்களுக்கு பல ஆயிரக்கணக்கான வருடங்களுக்கான வரலாறு இருக்கிறது. கிரிக்கெட் மொழியில் சொன்னால் அமெரிக்கா ஒரு `வெர்ல்டு 11` அதாவது உலகில் எல்லா நாடுகளிலிருந்து திறமையான பிளேயர்களை கொண்டு உருவான அணி. அது பலமாகத்தான் இருக்கும். புலம் பெயர்ந்தவர்கள் எப்போதும் கொஞ்சம் தைரியமாக, முன்னேறியவர்களாக இருப்பார்கள். அதுதான் அமெரிக்கா.

அடுத்தது அவர்கள் பேப்பர் டைகரா?. இதுவும் அபத்தமானது. ஒரு படத்தில் செந்திலும், கவுண்மணியும் வடிவேலுவின் தங்கச்சியை பெண் பார்க்க போவார்கள். பெண்ணை பார்த்ததும் இருவரும் வேண்டாம் என்று மறுப்பார்கள்.

அந்த பெண் செந்திலை தேர்வு செய்ய, கவுண்டமணி சிரிப்பார். அடுத்து செந்தில் அதைவிட சந்தோஷமாக சிரிப்பார். கேட்டால் `இந்த பெண்ணுக்கு கூட உங்களை பிடிக்கவில்லை` என்பார். இது ஒரு மட்டமான காமடி. இருந்தாலும் இதிலும் ஒரு பாடம் இருக்கிறது.

அந்த பேப்பர் டைகரான அமெரிக்காவை படு மோசமாக நாம் இருக்கிறோம் என்பதுதான் நிஜம். அதைத்தான் ஈரான் மதவாதிகள் உணராமல் வம்பை விலை கொடுத்து வாங்குகிறார்கள்.

அதேசமயம் அணு குண்டு என்ற அபாயத்தில் எப்படியோ காலை விட்டுவிட்டோம். அதிலிருந்து வெளியே வர எல்லோரும் போராடும் நிலையில், மேலும் பலரை அங்கே இழுத்துவிடுவது அதைவிட பெரிய தலைவலி.

மொத்தத்தில், இஸ்லாமிய மதத் தீவிரவாதிகளிடம் அணுகுண்டு போய் சேரக்கூடாது என்ற அமெரிக்காவின் நிலைப்பாட்டை நான் ஆதரிப்பதால், நான் அமெரிக்கா பக்கம்தான். உலகமும் அமெரிக்கா பக்கம்தான். சிலர் நடுநிலை என்ற பெயரில் ஓட்டெடுப்பில் கலந்துகொள்ளாமல் மறைமுகமாக இந்த நடவடிக்கையை ஆதரிக்கிறார்கள். டெல்லி பாராளுமன்றத்தில் இந்த கூத்தை அடிக்கடி பார்க்கலாம்.

0 comments:

Post a Comment