இரண்டாவது சுதந்திரப் போர் (?) முடிவுக்கு வந்துவிட்டது. இதில் யார் ஜெயித்தார்கள் என்று ஆராய்ச்சி செய்யாமல் ஜனநாயகம் ஜெயித்தது என்றே சொல்வோம். அரசு அன்னாவின் மிரட்டலுக்கு பணிந்தும் போகவில்லை, அதேசமயம் மீண்டும் ஒரு முறை அவரை கைது செய்து அவருடைய உண்ணாவிரதத்தை முறியடிக்காமல் யதார்த்தமாகவும் செயல்பட்டிருகிறது.
அன்னாவின் மிரட்டலுக்கு அரசு பணிந்து போயிருந்தால் பலர் இந்த பிளாக்மெயில் முறையை பின் பற்ற ஆரம்பித்திருப்பார்கள். அல்லது அடக்குமுறை மூலம் இதை அடக்கி இருந்தாலோ ஏற்கனவே அரசியல்வாதிகளின் மீது கோவத்தில் இருக்கும் மக்கள் மேலும் அந்நியப்பட்டுப் போயிருப்பார்கள். ஆக எதற்கும் இடம் கொடுக்காமல் இரண்டு பேரும் இறங்கி வந்தது பாராட்டுக்குரியது.