!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Friday, December 30, 2011

லோக்பால் என்ற நாடகமும் சில கதம்ப செய்திகளும்

ரெண்டு நாளா பயங்கரமான லோக்பால் என்ற காமெடி படம் பார்த்தோம். காங்கிரஸ் இதை எப்படியாவது பாஸ் பண்ணிடும் என்று நான் நினைக்க, ஆனால் தொடர்ந்து நடந்த காட்சிகள் இது காங்கிரசின் டிராமா என்பதை உணர்த்திவிட்டது. ஆக படம் முடிந்துவிட்ட நிலையில், இனி நாம் கருத்து சொல்லலாம்.

இப்போதைக்கு லோக்பால் என்ற வீல் ஒரு வழியாக சுத்த ஆரம்பித்திருப்பது உண்மை. இது பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா போல் முடங்கிவிடும் என்று சொல்வதெல்லாம் சாத்தியமில்லை. அடுத்த ஆண்டு ஏதோ கொஞ்சம் பலத்துடன் இது சட்டமாகும் வாய்ப்புதான் அதிகம். இந்த சட்டம் 40 வருடங்களாக தூங்கியது அபத்தம் என்றால், தற்போது திடீரென்று சட்டமாக்க முயற்சிப்பதும் அபத்தம்தான். காங்கிரசின் இந்த திடீர் வேகத்தின் காரணம் அன்னா மற்றும் வரவிருக்கும் தேர்தல்தான்.

மக்களிடையே லோக்பால் என்ற வார்த்தை பிரபலமாகிவிட்டது. அன்னா டீமோ இதை தினம் செய்தியாக்கி கொண்டிருக்கிறது. எனவே இதை அப்படியே விட்டால் தலைவலி ஆகிவிடும் என்பதால் காங்கிரஸ் லோக்பாலை சட்டமாக்கும் நாடகத்தை நடத்தி இருக்கிறது. இனி தேர்தல் பிரச்சாரத்தில் `நாங்கள் முயற்சித்தோம், எதிர்கட்சிகள் உடன்படவில்லை` என பிரச்சாரமாவது செய்யலாம்.   

இருந்தாலும் இந்த வண்டி சற்றே முனக ஆரம்பித்திருப்பது ஒருவகையில் மகிழ்ச்சிதான். ஒரு முறை மக்கள் காதில் பூ சுத்தலாம். அடுத்த முறை கொஞ்சம் கவனமாக இருந்தே ஆக வேண்டும். எனவே அடுத்த கூட்டத் தொடரில்  இந்த சட்டத்தை காங்கிரஸ் கொண்டுவராவிட்டாலும் தலைவலி, கொண்டுவந்து தோற்றாலும் தலைவலி. அதாவது 2 ஜி வழக்கைப் போல் ஒரு விஷயம் பரபரப்பாகிவிட்டால் அதில் ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற நிர்பந்தம் ஏற்பட்டுவிடும். எனவே அடுத்த முறை பல அனுசரித்தல்களுடன் இது சட்டமாகும் வாய்ப்பே அதிகம். நம்பிக்கை வைப்போம்.      

அதிலும் காங்கிரஸ் எதிர்ப்புணர்வு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அடுத்து காங்கிரஸ் ஆட்சி அமைந்தால் அது அதிசயம்தான். எனவே பி ஜே பி வரும் பட்சத்தில், அவர்களும் தங்கள் பங்குக்கு சில சீர்த்திருத்தங்களை கொண்டு வந்து,கொஞ்சம் கொஞ்சமாக லோக்பாலை பலபடுத்த வேண்டியதுதான்.

இந்த லோக்பால் விஷயத்தை கவனிக்கும் போது சவுத் ஆப்ரிக்கா பற்றிய செய்தி ஓன்று ஞாபகத்துக்கு வருகிறது. அங்கே வெள்ளையர்களை அதிகாரத்தை விட்டுக் கொடுக்க சொன்ன போது ரொம்பவே தயங்கினார்களாம். காரணம், நிற வேற்றுமை என்ற பெயரில் நிச்சயம் அங்கே பல கொடுமைகள் நடந்திருக்கும். அவற்றை எல்லாம் அடுத்து வரும் கறுப்பர் இன அரசு விசாரிக்க ஆரம்பித்தால் மாட்டிக் கொள்வோமே என்ற பயம் அவர்களை தடுத்தது. பின்னர் சில உத்தரவாதங்கள் கொடுத்த பிறகுதான் அதிகாரத்தை விட்டுக் கொடுக்க சம்மதித்தார்களாம். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோதும், இந்தியா இதே போன்ற உத்தரவாதத்தை இங்கிலாந்துக்கு கொடுத்திருக்கும். அதாவது சுதந்திரத்துக்காக நாம் கொடுக்கும் பல விலைகளில் இதுவும் ஓன்று.

இன்றைய அரசியலும் அப்படிதான். காங்கிரஸ் பல `விஷயங்களில்` மாட்டிக் கொண்டிருக்கும் நிலையில், சி பி ஐ யை ஒரு சுதந்திரமான அமைப்பாக செயல்பட காங்கிரஸ் ஒருபோதும் சம்மதிக்காது.  காங்கிரசின் கடந்த காலம் தோண்டப்படாது என்று உத்தரவாதம் கொடுத்தால் அது சாத்தியமாகும். ஆனால் சுதந்திர இந்தியாவில் அது சாத்தியமில்லையே. 

காங்கிரசை பொறுத்த வரையில் அடுத்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சி பி ஐ பி ஜே பி யின் கட்டுப்பாட்டில் போவதால் அதிக ஆபத்து இல்லை . காரணம் அவர்களும் அரசியல்வாதிகள் என்பதால் பல அரசியல் நிர்பந்தங்களை புரிந்திருப்பார்கள். எனவே வேகம் காட்ட வேண்டிய வழக்குகள் மட்டும் வேகமெடுக்கும். மற்ற `சூழ்நிலை` குற்றங்கள் வலுவிழக்கும்.ஆனால் சுதந்திரமான் ஒரு லோக்பாலில் நீதிபதிகளின் ராஜ்ஜியம்  என்பதால், அவர்கள் எதையும் கருப்பு வெள்ளையாகத்தான் பார்பார்கள். எனவே அது ஆபத்து.

காங்கிரசின் இந்த லோக்பால் நாடகத்தில் எல்லாம் தலைகீழாக இருக்கிறது. எங்கேயாவது `எத்தனை பவுன், கல்யாண செலவை யார் ஏற்பது` என்ற முக்கியமான பேச்சுவார்த்தையை முடிக்காமல் யாராவது  திருமணத்திற்கு தேதியை குறித்ததை கேள்விபட்டிருக்கிறீர்களா? காங்கிரசின் லோக்பாலை சட்டமாகும் முயற்சி அப்படித்தான் இருக்கிறது. முக்கியமான கூட்டணி கட்சியான மம்தாவே பிரச்சினை பண்ணுகிறார் என்றால், இது வேறு ஏதோ ஒரு அரசியல் என்றுதான் அர்த்தம். அதுவும் மிக சமீபத்தில்தான் மம்தா Retail FDI ல் முட்டுக்கட்டை போட்டார். அந்த அனுபவத்திற்கு பிறகும், அவருடைய ஒப்புதல் இல்லாமலா லோக்சபாவில் இந்த சட்டத்தை காங்கிரஸ் கொண்டுவந்திருக்கும்? எனவே தீடிரென அவர் ஏன் முரண்டு பிடிக்க வேண்டும்?  ஓன்று அவர் நம்பகத்தன்மை இல்லாத அரசியல்வாதியாக இருக்க வேண்டும்.  அல்லது காங்கிரஸ் நேரடியாகவோ மறைமுகமாகவோ அவரை தூண்டிவிட்டு லோக்பாலை முடக்க வேண்டும். இதெல்லாம் அரசியல். உள்ளடி வேலை வெளியே தெரியாது. கொஞ்ச நாளாகும்.

காங்கிரசை பொறுத்தவரையில்  அன்னாவுக்கு பதிலடி கொடுக்க வெளியே வீரமாக வசனம் பேசியாகிவிட்டது. பின் வாங்க முடியாது.  வரவிருக்கும் தேர்தலில் இது ஒரு முக்கிய பிரச்சினையாகிவிடும்? அதேசமயம் அவசரகதியில் தனக்கே ஆப்பு வைக்கும் சட்டத்தை கொண்டுவரவும் விருப்பமில்லை. எனவே இதையெல்லாம் சமாளிக்க நடத்தப்பட்ட நாடகமாகத்தான் இது இருக்கும். பல ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஒரு அரசு, பல ஜாம்பவான்களை கொண்ட ஒரு அரசு சரியாக திட்டமிடவில்லை என்று சொல்வது நம்பும்படியாகவா இருக்கிறது.

இனி சில நாட்களாக நான் கண்ட காட்சிகள்

தமிழகத்தில் தேசிய செய்தி சேனலுக்கு இணையாக ஒரு அரசியல் சேனலாக `புதிய தலைமுறை` உருவெடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழர்கள் மானாட மயிலாடவிலும், சீரியல்களிலும் மூழ்கி இருந்தாலும், தமிழில் ஒரு நம்பகமான செய்தி சேனல் இல்லாததும் ஒரு காரணமாக இருக்கலாம். இனி அவர்களுக்கு அந்த குறை இருக்காது.

Timesnow கட்சி மாறிவிட்டார்கள் போலிருக்கிறது. தற்போது அன்னா எதிர்ப்பு செய்திகள் அதிகம் வருகிறது. நேற்று வரை அவரை கடவுளாக கொண்டாடியவர்கள் இப்போது கழட்டி விட்டார்கள். ஒரு குழந்தையை அளவுக்கு அதிகமாக செல்லம் கொடுத்து கெடுத்து விட்டு திடீரென்று திருந்த சொன்னால் எப்படி? அதுதான் அன்னா ஹசாரே. `உடல்நலம் சரியில்லை; பாராளுமன்றத்தில் விவாதம் நடக்கிறது, எனவே உண்ணாவிரதம் வேண்டாம்` என்று சொன்னபோது கேட்காதவர், அங்கே கூடிய கூட்டத்தை பார்த்தவுடன் அதிர்ச்சியில் அவருடைய உடல்நலம் மேலும் கெட்டுவிட்டது. எனவே உண்ணாவிரத்தை வாபஸ் வாங்கிவிட்டார். தேவையா இது?

மணிசங்கர் ஐயரின் வாதங்களை பல முறை கேட்டிருக்கிறேன். ஆனால் NDTV யில் இந்த முறை அவர் பேசிய பேச்சு அதிர்ச்சியாக இருந்தது. அவருடைய கோவத்தை வைத்து பார்த்தால், பி ஜே பி Constitutional திருத்தத்துக்கு ஆதரவளிப்பதாக உறுதி அளித்து கடைசி நேரத்தில் பின் வாங்கியதைப் போல் தெரிகிறது. எனவே மணிசங்கர் ஐயர் பி ஜே பி யை கடித்து குதறி இருந்தார். இந்த வாதத்தில் பி ஜே பி சார்பாக பங்கேற்ற ரவி சங்கர் பிரசாத்தோ, மணி சங்கர் ஐயர் சிறந்த பார்லிமெண்டேரியன் விருது வாங்கியதை நினைவுபடுத்தி அந்த விருது பெற்றவர்கள் கொஞ்சம் நாகரீகமாக பேச வேண்டும் என்பதை நினைவுபடுத்தினார்.

டெல்லி வந்த கர்நாடக லோக் ஆயுக்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டேவை ஒரு சேனல் பேட்டி கண்டது. அதில் `உடல்நலம் கருதி உண்ணாவிரதம் இப்போது வேண்டாம்` என்று அன்னா ஹசாரேவிடம் சொன்னதாக சொன்னார். `அப்படிஎன்றால் நீங்கள் இந்த உண்ணாவிரதத்தை ஆதரிக்கிறீர்களா இல்லையா?` என்று கேட்டதற்கு, `நான் இங்கு டெல்லிக்கு வந்ததே அவருக்கு ஆதரவாகத்தான். அதுவும் சொந்த செலவில்தான் (14 ,000)  வந்திருக்கிறேன். `it means a lot to me` என்றார். இந்த வார்த்தைகள் போதும் அவர் எந்த அளவுக்கு நேர்மையான நீதிபதி என்பதை நிரூபிக்க. இப்படிப்பட்ட நீதிபதிகள்தான் இந்தியாவின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையை அளிக்கிறார்கள். 


9 comments:

vizzy said...

இலக்கியவாதிகளையும்,கலைஞர்களையும்,அறிவுஜீவிகளையும் நியமிக்கப்படவேண்டிய ராஜ்ய சபாவின் நியமன உறுப்பினர் இடத்தில் கட்சி சார்ந்த அரசியல்வாதியான மணிசங்கர் அய்யரை எப்படி ஜனாதிபதி நியமித்தார்?இந்த ஆள் காங்கிரஸ்காரன் என்பதைவிட இந்திரா குடும்ப அடிமை என்பதுதான் உண்மை.நரசிம்மராவ் காலத்தில் இந்த ஆள் கொஞ்சநாள் திர்னாமுள் காங்கிரசுக்கு சென்று குடும்பம் நடத்திவந்தார் என்பது விசேசமான செய்தி.

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நன்றி.

நெல்லை கபே said...

ஹசாரேக்கு ஏது வெற்றியும் தோல்வியும். அந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் மசோதா நிறைவேறவில்லை. அதனால் அவர் பக்கமே இன்னும் மக்கள் ஆதரவு.வேறு வழியில்லாமல் காங்கிரஸ்மாட்டிக் கொண்டுவிட்டது.

Anonymous said...

ஜனங்களும் ஹசாரேவை கிட்டத்தட்ட சூப்பர் ஹீரோவைப் பார்க்கிற மாதிரித்தான் பார்க்கிறார்கள். அவர்கள் கற்பனை நிறைவேறவில்லையெனில் சோர்ந்துபோய் திட்ட ஆரம்பிக்கிறார்கள். இல்லையா!

சிவானந்தம் said...

@ vizzy said...
///இலக்கியவாதிகளையும்,கலைஞர்களையும்,அறிவுஜீவிகளையும் நியமிக்கப்படவேண்டிய ராஜ்ய சபாவின் நியமன உறுப்பினர் இடத்தில் கட்சி சார்ந்த அரசியல்வாதியான மணிசங்கர் அய்யரை எப்படி ஜனாதிபதி நியமித்தார்?இந்த ஆள் காங்கிரஸ்காரன் என்பதைவிட இந்திரா குடும்ப அடிமை என்பதுதான் உண்மை.நரசிம்மராவ் காலத்தில் இந்த ஆள் கொஞ்சநாள் திர்னாமுள் காங்கிரசுக்கு சென்று குடும்பம் நடத்திவந்தார் என்பது விசேசமான செய்தி.///

வாங்க நண்பரே. இந்த வியாதி காங்கிரசில் மட்டுமில்லை பல கட்சிகளில் இருக்கிறது. நான் இதற்கு முன் ஒரு பதிவில் முக்கியமான அரசியல் கட்சிகளின் தேர்தலை தேர்தல் கமிஷனே நடத்த வேண்டும் என்று சொல்லி இருந்தேன். கட்சிகள் இன்று சர்வாதிகார பாணியில் நடத்தப்படுவதால் தலைமைக்கு விசுவாசம் என்பது தவிர்க்க முடியாதது. இன்னும் சில பத்தாண்டுகளில் இது மாறலாம். பார்ப்போம்

சிவானந்தம் said...

//நல்ல பதிவு.
நன்றி.//

வணக்கம் ரத்னவேல் சார்.

உங்களின் தொடர்ந்த ஆதரவுக்கு நன்றி

சிவானந்தம் said...

@ மாயன்

///ஹசாரேக்கு ஏது வெற்றியும் தோல்வியும். அந்தக் கண்ணோட்டத்தில் பார்த்தால் மசோதா நிறைவேறவில்லை. அதனால் அவர் பக்கமே இன்னும் மக்கள் ஆதரவு.வேறு வழியில்லாமல் காங்கிரஸ்மாட்டிக் கொண்டுவிட்டது.///

வாங்க மாயன். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

எப்படி பார்த்தாலும் அன்னா டீமுக்கு ஓரளவு வெற்றிதான். அவர்கள் மட்டும் இதை பெரிய பிரச்சினையாக ஆக்கவில்லை என்றால் இந்த பலம் குறைந்த லோக்பால் கூட தூங்கி இருக்கும். அது சற்றே நகர ஆரம்பித்திருப்பதே அவர்களுக்கு வெற்றிதான். இருந்தாலும் விட்டுக் கொடுத்தல் என்பதே இல்லாமல் அவர் பிடிவாதம் பிடிப்பதால் அவர் தரப்பு ஆட்களே அவரை குறை சொல்ல ஆரம்பிதிருகிரார்கள். நான்தான் சரி என்ற தொனி அவரிடம் தெரிகிறது. அதுதான் அவருடைய செல்வாக்கு குறைய காரணம்.

இன்று அரசியல் தரம்தாழ்ந்து இருப்பது உண்மை. அதற்காக தீடிரென்று அதை சுத்தப்படுத்த முடியுமா? மிரட்டி மிரட்டி கொஞ்சம் கொஞ்சமாகத்தான் மாற்ற முடியும். இந்த புரிதல்தான் அவரிடம் இல்லை.

Anonymous said...

Still now, I believe Anna.

சிவானந்தம் said...

///ஜனங்களும் ஹசாரேவை கிட்டத்தட்ட சூப்பர் ஹீரோவைப் பார்க்கிற மாதிரித்தான் பார்க்கிறார்கள். அவர்கள் கற்பனை நிறைவேறவில்லையெனில் சோர்ந்துபோய் திட்ட ஆரம்பிக்கிறார்கள். இல்லையா!///

வாங்க Chilled beers

இதுதான் தலைவலியே. ஒரு விஷயத்தையோ அல்லது தலைவரையோ மக்கள் நம்ப ஆரம்பித்த பிறகு, அதன் பிறகு அந்த தலைவரிடம் தோல்வியையோ அல்லது மாற்று கருத்தையோ ஏற்க மறுக்கிறார்கள்.

முல்லைப் பெரியாறு விஷயத்தில் சுப்ரீம் கோர்ட் கேரளாவின் மூக்கை உடைத்த பிறகு ஒரு கேரளாக்காரர் மனம் வெறுத்து ஒரு இணையத்தில் கருத்து தெரிவித்திருந்தார். அதாவது அணையை பற்றி நீதிபதிகளுக்கு என்ன தெரியும் என்று சொல்லி இருந்தார். கேரளா மக்களின் உயிருக்கு மரியாதை இல்லை என்றும் புலம்பல். நீதிபதிகள் நேரடியாகவா வந்து ஆராய்வார்கள்? அதற்கான தொழிநுட்ப வல்லுனர்களின் கருத்தை கேட்டல்லவா முடிவெடுத்திருகிறார்கள். அதாவது கேரளா அரசியல்வாதிகளின் தொடர்ந்த பிரச்சாரம் அந்த அணைக்கு ஆபத்து என்பதை ஆழமாக அவர் மனதில் பதிந்துவிட்டது. இனி கேரள முதல்வரே சொன்னாலும் அவர் நம்பமாட்டார்.

இதேதான் கூடங்குளம் விஷயத்திலும் நடக்கிறது. அன்னா விஷயத்திலும் நடக்கிறது. இங்கே முல்லைப் பெரியாறு விஷயத்தில் மட்டும் இருதரப்பிலும் மட்டமான அரசியல் நடக்கிறது. ஆனால் கூடங்குளம் விஷயத்திலும், அன்னாவின் போராட்டத்திலும் அரசியல் இல்லை. அவர்கள் சமூக ஆர்வலர்கள், நாட்டின் மீது அக்கறை உள்ளவர்கள்தான். ஆனால் ஒரு ஏழைக்கு சுத்தமான தண்ணீரோ (மின்சாரம்) அல்லது ஆரோக்கியமான சூழலோ (அரசியல்) நாம் விரும்பினாலும் உடனடி சாத்தியம் இல்லை என்பதை உணர மறுக்கிறார்கள்.

Post a Comment