நம்மை சுற்றி உள்ளவர்கள் நம்மை பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள ஒரே வழிதான் இருக்கிறது. நமக்கு ஏதாவது பிரச்சினை வரவேண்டும். அப்போதுதான் நமது தரம் மற்றும் தகுதி தெரியவரும். அந்த வகையில் எனக்கும் சில அனுபவங்கள் இருக்கிறது. இந்த வாரம் அதை பார்ப்போம்.
If a man empties his purse into his head, no man can take it away from him - Benjamin Franklin
Sunday, July 29, 2012
சிறை அனுபவம் : இப்படியா கொடுமைப்படுத்துவாங்க!
Monday, July 23, 2012
சிறை அனுபவம்: சில வி ஐ பி களுடன்...
முதலில் நான் இருந்த தொடர் குற்றவாளிகள் பிளாக்கில் பிரபலங்கள் வர வாய்ப்பில்லை. பத்திரிகையில் கொஞ்சம் பரபரப்பாக பேசப்பட்டவர்கள் என்ற வகையில் பார்த்தால், சைக்கோ கொலையாளிகள் என்ற பெயரில் சென்னையை நடுங்க வைத்தவர்கள் இங்கே இருந்தார்கள். அந்த நான்கு பெரும் வேறு வேறு செல்/பிளாக் என பிரிக்கப்பட, ஒருவர் நான் இருந்த செல்லில் இருந்தார்.
இதற்கிடையில் நான் வந்த போது இருந்த பிளாக் ரைட்டர் தண்டனை பெற்று பக்கத்து ஜெயிலுக்கு போய்விட்டதால், அவருக்கு கீழே இருந்தவர்கள் அந்த பொறுப்பை ஏற்றார்கள். இவர்கள் வயதில் சிறியவர்கள் என்பதால் இங்கே நான் சீனியர். கொஞ்சம் பழகிய பிறகு எல்லோரும் நண்பர்கள் ஆகிவிடுவோமே, அந்த தியரியும் எனக்கு சாதகமாக இருந்தது.
அதுமட்டுமின்றி இன்னொரு முக்கிய விஷயம்தான் எனக்கு பாதுகாப்பாக இருந்தது. வழக்கமாக கைதிகள் வந்தால் விரைவில் பெயிலில் போய்விடுவார்கள். அல்லது கொஞ்சம் பயம் தெளிந்ததும் அவர்களுக்கு பிடித்த / தெரிந்த நபர்களுடன் ஐக்கியமாகிவிடுவார்கள். இதுதான் சிறை யதார்த்தம். நான் மட்டும் அப்படி இல்லை. பெயில் வேண்டாம் என்றும் மறுத்தேன், அந்த செல்லைவிட்டும் போகவில்லை.
Labels:
அரசியல்,
அனுபவம்,
கன்னட பிரசாத்,
சினிமா,
புழல் சிறை,
ஜஸ்டின் தேவதாஸ்
Monday, July 16, 2012
சிறை அனுபவம்: 302 மாதிரி பேசற!
கடந்த பதிவான `சிறை அனுபவம்: பணம்` சூப்பர் ஹிட். மிகவேகமாக அதிகம் பேரால் படிக்கப்பட்டது. பலர் இதை வாசித்தது சந்தோசம் என்றாலும், இதை படித்த நபர்களில் ஒரு நல்ல பத்திரிக்கையாளர்/சமூகசேவகர் /அரசியல்வாதி இருந்து, அரசுக்கு முறையான அழுத்தம் கொடுக்கப்பட்டு, இங்கேயும் சீர்திருத்தங்கள் விரைவாக வந்தால் அது இன்னும் அதிக சந்தோஷத்தை அளிக்கும்.
இந்த முறை மற்ற பதிவுகளும் கவனிக்கப்பட்டது. நானும் இந்த வாரம் அதிகம் வாசிக்கப்பட்ட பழைய பதிவுகளை மீண்டும் வாசித்தேன். ஒரு பதிவை எழுதி அதை எடிட் செய்ய பல முறை படித்தாலும் கவனிக்க முடியாத குறைகள், அதே பதிவை பல மாதங்கள் கழித்து படித்தபோது தெரிய வருகிறது. குறைகள் என்றால் சொற் பிழை அல்லது வார்த்தைகளை கோர்ப்பதில் உள்ள குறையாக இருக்கலாம். பொறுத்தருள்க.
Sunday, July 8, 2012
சிறை அனுபவம்: பணம்
சிறைக்கு சென்றவுடன் முதலில் என்னை ஆச்சரியப்படுத்தியது இதுதான். புதிய கைதிகள் கடுமையாக தண்டிக்கப்பட (வேலை வாங்கப்பட), பழைய கைதிகள் சொகுசாக வாழ்ந்ததுதான். அடுத்த சில மாதங்களில், பழைய கைதிகளில் சிலர் `உள்ளேயே` நன்றாக சம்பாதிப்பதை பார்த்த போது அது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.
இந்த அதிர்ச்சி விலகி இதுதான் யதார்த்தம் எனப்புரிய பல மாதங்கள் ஆனது. ஊழல் ஒரு கொடிய தொற்று நோய். இதை நீங்கள் செய்ய ஆரம்பித்தால் அது உங்களின் டிராலி பாய், உடன்பிறவா சகோதரி என எல்லோருக்கும் ஏதாவது செய்தாக வேண்டும். இல்லையென்றால் அவர்கள் உத்தமர்களாகி உங்களை காட்டிக் கொடுத்துவிடுவார்கள்.
அரசியலில் இதுதான் யதார்த்தம் என்றால் சிறையிலும் அதுதான். இங்கேயும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. இங்கே உங்களை காட்டிக் கொடுக்கபோவது கீழ்நிலைக் காவலர்கள் மற்றும் கைதிகள்தான். எனவே அவர்களுக்கும் அவர்கள் ரேஞ்சுக்கு புகுந்து விளையாட அனுமதித்தே ஆகவேண்டும்.
Monday, July 2, 2012
மௌனம்தான் பேரமோ?
இந்தியாவிற்கு இன்று தேவைப்படும் முக்கிய சீர்திருத்தங்கள் எவை என்று கேட்டால் நான் சொல்ல விரும்புவது இந்த மூன்றைத்தான்.
1) கடுமையான மக்கள் தொகை கட்டுப்பாடு 2) தேர்தல் செலவுக்கு அரசே நிதி ஒதுக்குவது 3) நீதித்துறை சீர்திருத்தம்.
முதல் இரண்டு விஷயங்கள் பற்றி நான் பதிவுகள் போட்டிருக்கிறேன். இந்த வாரம் நீதித்துறை. நீதித்துறை என்றாலும் இங்கும் பல பிரிவுகள் வரும். இங்கே இந்த வாய்தா ஊழல் மட்டும்.
முதலில் ஒரு கதை. ஒருவன் எல்லையை தாண்டி ஏதோ கடத்துவதாக ஒரு அதிகாரிக்கு சந்தேகம். சைக்கிளில் நிறைய சரக்குகளை ஏற்றிவரும் அந்த நபரை பல முறை சோதித்து பார்த்துவிட்டார். ஒன்றும் சிக்கவில்லை.
Subscribe to:
Posts (Atom)