கடந்த வருடம் `ஒரு கோடி பரிசு` என ஒரு பதிவு போட்டிருந்தேன். சமூகத்தில் நடக்கும் ஊழல்கள், மோசடிகள் போன்றவற்றை அரசுக்கு தெரிவிப்பவர்களுக்கு (அப்படி தெரிவிப்பவர்களில் ஒருவருக்கு), அரசு ஒரு கோடி பரிசை வழங்கலாம் என்றும், அப்படி ஒரு திட்டம் இருக்குமேயானால், பணத்தாசை காரணமாக பலர் துப்பறியும் புலிகளாக மாறி, ஊழல் குறித்த தகவல்களை அரசுக்கு ஆரம்பக்கட்டத்திலேயே தந்துவிடுவார்கள் என்று எழுதி இருந்தேன்.
தற்போதைய கிரானைட் ஊழலை பார்க்குபோது அது எவ்வளவு அவசியம் என்பது உங்களுக்கு புரியும். அப்படி ஒரு நடைமுறை இருந்திருந்தால் கிரானைட் ஊழல் இந்த அளவுக்கு வந்திருக்காது. கோடிக்கு ஆசைப்பட்டு யாராவது ஒருவர் இதை அரசுக்கு முதலிலேயே போட்டுக் கொடுத்திருப்பார்.