சமீபகாலமாக அரசியல் குறித்த பதிவுகள் எழுத ஆரம்பித்தால், அது முற்றுபெறாமல் நின்று விடுகிறது. எனவே நானும் அங்கே அதை பார்த்தேன் இங்கே இதை கேட்டேன் என சொந்தக் கதையையும், நகர்வலங்களை பதிவாக்கி கொண்டிருக்கிறேன்.
அனுபவங்களுக்கும் பஞ்சமில்லை. ஒரு பதிவன் என்ற பார்வையில் எதை பார்த்தாலும் அங்கே ஒரு விஷயம் கிடைத்துவிடுகிறது. இந்தவாரமும் அப்படி சில...
அவனும் அப்படித்தானா?
சாப்பாட்டில் எனக்கு ஒரு வித்தியாசமான பிரச்சினை. பொதுவாக எல்லோருக்கும் சிலது பிடிக்கும்; சிலது பிடிக்காது. இது இயற்கை. எனக்கு விருந்தாளி வாழ்கை என்பதால், இந்த விஷயத்தில் ஒரு சுதந்திரம் எனக்கு பறிபோனது.