!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, March 26, 2013

இலங்கை: இங்கேயும், அங்கேயும்


தமிழில் பதிவுகள் எழுத ஆரம்பித்த பிறகு ஆங்கில இணையதளத்தில் கருத்து சொல்வதை நிறுத்திக் கொண்டேன்.  நமக்கு சரிவராத ஒரு மொழியில் எதற்கு  கஷ்டப்பட்டு கருத்து சொல்லணும் என்பதால் அதில் ஆர்வம் குறைந்தது. ஆனால் இலங்கை பிரச்சினை குறித்த கருத்துக்களை வட இந்திய ஊடகங்களில் படித்தபோது அப்படி இருக்க முடியவில்லை.

பல  வட இந்தியர்கள், `தமிழர்களுக்கு அங்கே மரியாதை இல்லையென்றால் விசாவை முடித்துக் கொண்டு திரும்ப வேண்டியதுதானே` என்று கேட்கிறார்கள். அந்த அளவுக்கு தமிழர்களின் பிரச்சினைகளை அவர்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

Monday, March 18, 2013

பத்திரிகையாளர்களே...நல்லா பாத்துக்குங்க...


இந்தியாவில் பரபரப்பான செய்திகளுக்கு பஞ்சமில்லை. நானும் அதில் சிலவற்றை குறிப்பெடுத்துக் கொண்டு எழுத முயற்சிப்பதுண்டு. ஆனால் அது குறித்து மேலும் படிக்க ஆரம்பிப்பதிலும், பின்னர் எண்ணங்களை பதிவாக மாற்றி செம்மைபடுத்துவதிலும் நேரம் போய்விடுகிறது. அதனால், தமிழ்நாட்டில் ஏதோ ஒரு பிரச்சினை பற்றி எரியும் போது நான் வேறு ஏதோ ஒன்றை பற்றி எழுதுகிறேன் என்று யாரும் நினைக்க கூடாது.

இது கடந்த வாரம் நான் கவனித்த செய்திகள்   

ஷேர் மார்கெட் நிறைய நம்பிக்கையையும் கனவுகளையும் காட்டியபோது நான் எதிர்காலம் குறித்து திட்டமிட ஆரம்பித்தேன். 

இப்படி திட்டமிடும் நேரத்தில் கல்யாண ஆசை மறைந்து, அரசியல் ஆசை தலைதூக்க ஆரம்பித்தது.பணம் என்னை  அங்கே  கொண்டு செல்லுமானால், மக்களிடம், `இதபாருங்க, எனக்கு ஷேர் மார்கெட்ல பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டுது. அதனால தைரியமா எனக்கு ஓட்டு போடுங்க. நான் ஊழல் பண்ணமாட்டேன்` என்றும்,  கட்சிக்காரர்களிடம், `எனக்கு (நேரடி) உறவுகள் எதுவும் கிடையாது. திருமணமும் செய்யமாட்டேன். அதனால் வாரிசு பிரச்சினைகள் வராது` என்றும் உத்தரவாதம் கொடுப்பது என்று முடிவு செய்தேன்.

Monday, March 11, 2013

ரயில்வே: இப்படியும் அப்படியும்

கடந்த சில மாதமாக எழுத முடியவில்லை. ஒரு உறவினருக்கு உதவியாக ஆஸ்பிடல் போகும் வேலை வர, பதிவுகள் தடைபட்டது. பின்னர் வழக்கமாக அவ்வப்போது வரும் மனச்சோர்வு ஆட்கொள்ள, பதிவுகள் நின்றுவிட்டது. அதன்பிறகு பதிவு எழுத வேண்டும் என்ற எண்ணம் வந்தது ரயில்வே துறை குறித்த ஒரு விவாதத்தை கவனித்தபோதுதான்.

இதை சன் நியுஸில் கவனித்தேன். ரயில்வே துறை லாபகரமாக நடக்கிறது; (கடந்த காலங்களில்) 10,000௦௦௦௦௦ கோடி லாபம் பார்த்திருக்கிறது; அரசுக்கு டிவிடெண்டாக அது கொடுக்கப்பட்டிருக்கிறது என்று ஒருவர் சொன்னார்.

லாபம்?

வழக்கம் போல் இது அரைகுறை புள்ளி விவரம். லாபம் என்றால் என்ன, அதை எப்படி கணக்கிட வேண்டும் என்று வரைமுறை இல்லாமல் மேம்போக்காக சொல்லப்படுபவை.