!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, May 24, 2014

தப்புக்கணக்கு


`பிஜேபி 3 0 +` என்று ஒரு பதிவு போட்டாலும் போட்டேன், நான் என்னவோ கோடிகணக்கில் செலவு செய்து தேர்தலில் நிற்பதுபோல் ரிசல்டுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்தேன். வந்தது ரிசல்ட். தலைகுப்பற விழுந்தேன். (நான் மட்டுமா?) இருந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை. மீசை இருந்தாத்தானே ஓட்டறதுக்கு. தற்போது எனக்கு மீசையே இல்லை. அகமதாபாத் வரும் முன்பே அதை எடுத்துவிட்டேன். இப்படி ஒரு அதிர்ஷ்டம்.

(தேர்தல் முடிந்த உடன் பதிவு போடமுடியவில்லை. மோடி வந்தவுடன் இன்டெக்ஸ் ஏற ஆரம்பிக்க, ஷேர் புரோக்கர்களும் அவ்வப்போது அவர்களுடைய ஆபரேட்டிங் சிஸ்டத்தை மாற்றுவார்கள் என்பதால், அதை ஆராய்வதிலே நேரம் போய்விட்டது. எனவேதான் இந்த தாமதம்.) 

கடந்த பதிவை பொறுத்தவரையில் தமிழகத்தில் பிஜேபி கூட்டணி ஒரு அதிர்வலையை ஏற்படுத்தும் என்றும், தேசிய அளவில் பிஜேபி தனியாகவே பெரும்பான்மை பெரும் என்று நினைத்தேன், எழுதினேன். ஆனால் பிஜேபி தனித்தே பெரும்பான்மை பெறும் என்று சொன்னால், தமிழ்நாட்டு மக்கள் சிரிப்பார்கள், அது இங்கே அகமதாபாத் வரை கேட்கும் என்பதால் கடைசி நேரத்தில் அதை எடுத்துவிட்டேன். இங்கே கொஞ்சம் சந்தேகப்பட்டது நடந்துவிட்டது. ஓரளவு நம்பியது காலை வாரிவிட்டது.

இருந்தாலும் தப்பு நம் மேலேதான். நாம் மற்ற கணக்குகளையே கவனிக்க, அம்மாவின் கணக்கை கவனிக்க மறந்துவிட்டோம்.

இங்கே அம்மாவின் கணக்கு என்ன? 

பொதுவாக நம்மை கடைசியாக யார் கோவப்படுத்துகிறார்களோ அவர்களைத்தான் முதல் எதிரியாக பார்ப்போம். அந்த வகையில் அம்மாவின் இலக்குக்கு விஜயகாந்த ஆளாகிவிட்டார். கடந்த முறை கூட்டணியில் இருந்தவர் என்பதால், அந்த வெற்றியில் விஜயகாந்துக்கு பங்கில்லை என்று காட்ட வேண்டும். ஒருவேளை, அதாவது ஒருவேளை அவர் கொஞ்சம் சீட்டுகள் வாங்கி செல்வாக்கு பெற்றாலும், அடுத்தகட்ட அரசியலில் அவர் முக்கியத்துவம் பெறுவார் என்பதால் அதையும் முடக்க வேண்டும்.

எனவே மற்ற தொகுதிகளுக்கு ரூ. 2 0 0 என்றால், தேமுதிக போட்டியிடும் தொகுதிகளுக்கு 5 0 0 கூட கொடுத்திருக்கலாம். அதைவிட முக்கியமாக தேமுதிக கட்சிக்காரர்களையே `கவனித்து` வைத்திருக்கலாம். இப்படி அம்மா சைலன்ட் கில்லராக தாக்க, கூட்டணி கணக்கும் சுத்தமாக கவிழ்த்துவிட, இந்த ஆல்ரவுன்ட் அட்டாக்கில் விஜயகாந்த் காலியாகிவிட்டார். 

ஆனால்  வைகோ உட்பட மற்ற கட்சிகளும் போண்டியானதை விட, திமுகவும் துடைத்தெரியப்பட்டதை விட,  அதிமுக 44 சதவிகித ஓட்டு வாங்கியதைதான் 6வது, 7வது, 8வது அறிவு என எதுவும் ஏற்க மாட்டேன்ங்கிறது. இது எதார்த்தத்தை மீறிய செயலாயிற்றே? தமிழ்நாட்டின் மின் பற்றாகுறை ஒன்றே போதுமே இவர்களுக்கு ஆப்பு வைக்க.. அதையும் மீறி இவர்கள் ஜெயிக்கிறார்கள் என்றால் இதன் லாஜிக் என்ன? 

இங்கே எனக்கு சில அனுபவங்கள் நினைவுக்கு வருகிறது. சிறையில் ஒரு முறை அபூர்வமாக ஒரு போலீசாரிடம் சட்டம் பேசிவிட்டேன். அதற்கு அவர் `நீ 307 தானே? 302 மாதிரி பேசறே!` என்று பதிலுக்கு எகிறினார். `அது என்ன 302 காரங்க மட்டும் நெய்யுல பொரிச்சவங்களா?` என்று ஆராய முற்பட்டதில் கிடைத்த பதில் இதுதான்.

307 க்கு பெரும்பாலும் தண்டனை அதிகம் கிடைக்காது. அதாவது வாழ்க்கை முடிந்துவிடாது. ஆனால் 3 0 2 வழக்குகளில் (மாட்டிக்கொண்டால்) உங்கள் கதை முடிந்துவிடும். தூக்கு அல்லது ஆயுள்தண்டனைதான். அந்த வகையில் இவர்கள் இன்னொரு கொலை செய்தாலும் அதே தண்டனைத்தான். எனவே இவர்கள் எதற்கும் தயாராக இருப்பார்கள். அந்த பயத்தினால்தான் சிறை போலீசார் இவர்களிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகவே இருப்பார்கள்.

கிட்டத்தட்ட அம்மாவின் கதையும் அப்படிதான். ஏற்கனவே ஒரு வழக்கில் வகையாக மாட்டிக் கொண்டு வாய்தா ராணியாக முழிக்கிறார்.  இந்த வழக்கு அவருக்கு எதிராக போனால்  வாழ்கை முடிந்துவிடாது என்றாலும், ஒரு உயர்ந்த வாழ்க்கை வாழ்பவர்களுக்கு கொஞ்சம் இறங்கினாலே அது மரணத்துக்கு சமம்தான். எனவே இவர் அதிகாரத்தில் இருந்தால்தான் எதையும் சமாளிக்க முடியும். அதற்காக இவர் எந்த எல்லைக்கும் போவார். அதுதான் தமிழ்நாட்டில் 144 தடை உத்தரவாக வந்து இறங்கி இருக்கிறது. அது பணபட்டுவாடாவுக்காக என்று நாம் நினைத்தாலும், (அல்லது நண்பர் வவ்வால் சொன்னதுபோல்) அதிமுக முதலிலேயே கொடுத்துவிட, மற்றவர்கள் கொடுப்பதை தடுக்கத்தான் இந்த தடை உத்தரவு என காரணம் சொன்னாலும், இதையும்தாண்டி வேறு ஏதாவது செய்திருப்பாரோ என்ற சந்தேகமும் வந்து தொலைக்கிறது.

EVM மோசடி சாத்தியம் இருந்தாலும், அந்த அளவுக்கு நமது தேர்தல் கமிஷன் மொக்கையாக வேடிக்கை பார்க்கும் என்பதை நம்புவதற்கும் கஷ்டமாக இருக்கிறது. பணத்தை வாரி இறைத்திருந்தாலும் இத்தனை சதவிகித ஓட்டா? தமிழ்நாட்டில் பாலாறும் தேனாறுமா ஓடுகிறது? இந்த கணக்கு சுத்தமாக புரியவில்லை.

ஆனால் இன்னொரு கணக்கு புரிகிறது. உலகப்போர் நடந்தபோது அப்போதைய வரலாற்று பின்னணியில் எழுதப்பட்ட கதை ஒன்றை படித்தேன். பிரிட்டனின் பொருளாதாரத்தை சிதைக்க ஹிட்லர் திட்டமிடுகிறார். அப்போது சிறையில் இருந்த ஒரு யூத கைதியிடம் பேரம் நடந்தது. அந்த ஆள் அற்புதமான ஓவியனாம். பிரிட்டன் நாட்டின் நோட்டை அச்சடிக்க, அதற்கான காப்பியை /அச்சு இவன் செய்து கொடுத்தால் அவனையும் அவன் இனத்தையும் விட்டுவிடுவதாக பேச்சு. தன்னையும் தன் இனத்தையும் காப்பாற்ற அவனும் உயிரை கொடுத்து தத்ரூபமாக செய்து கொடுக்க, ஹிட்லரும் மானாவாரியாக நோட்டை அடித்து பிரிட்டனை தினறடித்தாராம். 

அதேபோல் அம்மாவும் அமைச்சர்களின் கழுத்தில் கத்தியை வைத்திருப்பார் போலிருக்கிறது. அமைச்சர்களும் MLM காரர்களை விடவும் கடுமையாக கேன்வாஸ் செய்திருக்கிறார்கள். நிர்வாகத்திறமையை விட இதில் அவர்கள் நன்றாகவே ஜொலிக்கிறார்கள். 

எப்படியோ அம்மா ஜெயித்துவிட்டார். மத்தியில் ஆட்சி மாற்றத்தின் மூலம், இந்திய ஜனநாயகம் வலுவாக தெரிந்தாலும் ஓட்டுக்கு பணம் என்பதும், நம் கவனத்துக்கு வராத பிற மோசடிகளும் கரும்புள்ளியாக இருக்கிறது. வரும் காலங்களில் இதற்கும் ஒரு முடிவு வரும் என்றும் நம்புவோம்.

3 comments:

வவ்வால் said...

சிவானந்தம்,
//பிஜேபி 3 0 +` என்று ஒரு பதிவு போட்டாலும் போட்டேன், நான் என்னவோ கோடிகணக்கில் செலவு செய்து தேர்தலில் நிற்பதுபோல் ரிசல்டுக்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்தேன். வந்தது ரிசல்ட். தலைகுப்பற விழுந்தேன்//

மோடி சமஸ்தானம் பற்றி இன்னும் நிறைய எதிர்ப்பார்த்தேன்.

தமிழ் நாட்டைப்பொறுத்த வரையில் பிஜேபி கூட்டணி ரிசல்ட் தான் என்னை தலை நிமிர வச்சது , 2 இடங்கள் கிடைச்சாலே அதிகம் என கணித்திருந்தேன், காக்கா பனம் பழம் போல இரண்டு இடம் தான் கிடைச்சது :-))

#//அதாவது ஒருவேளை அவர் கொஞ்சம் சீட்டுகள் வாங்கி செல்வாக்கு பெற்றாலும், அடுத்தகட்ட அரசியலில் அவர் முக்கியத்துவம் பெறுவார் என்பதால் அதையும் முடக்க வேண்டும்.//

அம்மா முடக்கணும் என்றெல்லாம் அவசியமேயில்லை , மரம்வெட்டி டொக்டரே முடக்கிட்டார் அவ்வ்.

டொக்டர் அணிக்கும், அம்மையாருக்கும் ரகசிய டீலிங் எனவும், டொக்டர் கட்சி போட்டியிடாத இடத்தில் எல்லாம் அவங்க கட்சியினர் இலைக்கே போட சொல்லியாச்சாம் ,தப்பி தவறிக்கூட கூட்டணி முரசு ஒலிக்க கூடாது என தடையாம், அதுக்கு பதிலாக சின்ன டொக்டருக்கு அதிகம் போட்டி இல்லாமல் செய்யப்பட்டதாம் ,இப்படிலாம் உள்ளூர் டீக்கடைல பேசிக்கிறாங்க :-))

#//ஆனால் வைகோ உட்பட மற்ற கட்சிகளும் போண்டியானதை விட, திமுகவும் துடைத்தெரியப்பட்டதை விட, அதிமுக 44 சதவிகித ஓட்டு வாங்கியதைதான் 6வது, 7வது, 8வது அறிவு என எதுவும் ஏற்க மாட்டேன்ங்கிறது. //

நிறைய உள்ளடி வேலைகள் செய்யப்பட்டுள்ளன , அதுக்கு பெரும்பாலும் திமுகவினரே உடந்தை.
பிஜேபி கூட்டணியாகவே செயல்ப்படலை.

//அதிமுக முதலிலேயே கொடுத்துவிட, மற்றவர்கள் கொடுப்பதை தடுக்கத்தான் இந்த தடை //

திமுக ஹெவி வெயிட்கள் சிலர் போட்டியிட்ட இடங்களில் கடைசி சில நாட்களில் பெரும் பணம் இறக்கி,ஓட்டுக்கு 500 கொடுக்க ஆரம்பிச்சார்கள் ,அதுக்கு ஆப்படிக்க தான் 144.

#//EVM மோசடி சாத்தியம் இருந்தாலும், அந்த அளவுக்கு நமது தேர்தல் கமிஷன் மொக்கையாக வேடிக்கை பார்க்கும் என்பதை நம்புவதற்கும் கஷ்டமாக இருக்கிறது. //

தேர்தல் ஆணையம் என்பது ஒரு காகிதப்புலி ,அவர்களுக்கு என ஊழியர்கள் எனப்பார்த்தால் , மாநில அலுவலகத்தில் இருப்பவர்கள் மட்டுமே, மற்ற எல்லாம் மாநில அரசு ஊழியர்கள் தானே? எப்படி ஒத்துழைப்பை கொடுக்காமல் இருப்பாங்க?

சிவானந்தம் said...

வாங்க வவ்வால்,

///மோடி சமஸ்தானம் பற்றி இன்னும் நிறைய எதிர்ப்பார்த்தேன்.///

ஒரு மாற்று ஊடகமாக செயல்பட ஆசை இருக்கிறதுதான். ஆனால் வருமானத்துக்கு வழி இல்லாத பதிவுகளில் அது சரிவராது.

அதைவிட முக்கியமாக, பதிவாக்குவதற்கு பல சுவராஸ்யமான விஷயங்கள் இருந்தாலும், நானும் தற்போது மவுன சாமியாராக இருக்கிறேன். நானே அதிகம் பேசாமல் மற்றவர்களிடம் எப்படி தகவலை கறப்பது?

என்னுடைய பதிவுலக மோகமும் முடிந்துவிட்டது. இனி எப்போதாவதுதான் வருவேன்.

Unknown said...

Happy New Year

அருமை

www.nattumarunthu.com
nattu marunthu kadai
nattu marunthu online

Post a Comment