!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Friday, February 12, 2021

தலைகீழ் உபதேசம்



கடந்த பதிவில் நான் என்னுடைய குணத்தை மாற்றிக்கொள்ள 10 வருடங்கள் ஆனது என குறிப்பிட்டிருந்தேன். ஆனால் அந்த பதிவை எழுதிக்கொண்டிருக்கும் போதே இன்னொரு செய்தியையும் கவனித்தேன். அதாவது சிலர் பச்சோந்தியாக பத்தே நாட்களில் குணம் மாறுவார்கள் போலிருக்கிறது. அப்படி ஒரு செய்தி இங்கே. 

சமீபத்தில் என்னுடைய பேஸ்புக்கில் ஒரு பதிவு வந்தது. பிக்பாஸ் கொஞ்சம் பார்க்க ஆரம்பித்த பிறகு ஜேம்ஸ் வசந்தன் அவர்களை நான் பாலோ செய்திருந்தேன். அவர் இந்து ராம் அவர்களின் ஒரு கருத்தை லைக் பண்ண, அது எனக்கு காட்டியது. இவர் லைக் பண்ணியிருக்கிறார் என்றால் இவருக்கும் அந்த கருத்தில் உடன்பாடு என்றுதான் அர்த்தம்.

சரி இனி விஷயத்துக்கு வருவோம். பிரபல பாப் ஸ்டார் ரிஹானா இந்திய விவசாயிகளின் போராட்டம் சம்பந்தமாக கருத்து தெரிவித்திருக்கிறார். இதற்கு பதிலாக டெண்டுல்கரும் ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறார். இது அவர்களின் உரிமை. எனவே அதை விட்டுவிடுவோம்.

ஆனால் இங்கே டெண்டுல்கரை விமரிசித்து  இந்து ராம் டிவிட்டரில் போட்ட செய்தி இங்கே.

And Sachin Tendulkar pontificating that “External forces can be spectators but not participants” is laughable. Is expressing an opinion ‘participation’?If Tendulkar wishes his opinion to be respected, he should stick to cricket and matters he is knowledgeable about.

ஒரு சம்பவம் நடக்கும் போது கருத்து (opinion) சொல்லும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது. ஆனால் ஆலோசனை (advise) செல்லும்போதுதான் நாம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். இந்த துறையில் எக்ஸ்பர்ட்டா என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். இங்கே மிக மிக முக்கியமாக ஒன்றை கவனிக்கவும். நான் இங்கே எனது கருத்தைதான் பதிவு செய்கிறேன்.

அதேபோல் இந்து ராம் அவர்களும் ஒரு கருத்தை முன் வைத்ததில் தப்பில்லை. அதற்காக அவர் அவர் பயன்படுத்திய வார்த்தைகள்தான் எனக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதைவிட அதிர்ச்சி ஜேம்ஸ் வசந்தன் அதை லைக் பண்ணியது.      

சமீபத்தில் முடிந்த பிக்பாஸ் 4ல் ஒரு சம்பவம்.  பாலாஜிக்கும் ஆரிக்கும் சண்டை வந்தபோது, பாலாஜி பேசற வரைக்கும் அமைதியாக இருந்துவிட்டு, ஆரி பேசும்போது மட்டும் ரம்யா பாண்டியன் இடையில் புகுந்து தன்னுடைய மேதாவித்தனத்தை காட்டுவார். இதை கமலும் சுட்டி காட்டிவிட்டார். ஜேம்ஸ் வசந்தனும் சொல்லிவிட்டார்.

அதேதான் இங்கேயும் நடந்திருக்கிறது. தனக்கு சம்பந்தமில்லாத ஒரு துறையை பற்றி ஒரு பெண் பாடகி கருத்து சொல்கிறார். அப்போது வாய் திறந்து `உன்னுடைய கருத்து பிறரால் மதிக்கப்பட வேண்டுமென்றால் உனக்கு தெரிந்த துறையை பற்றி மட்டும் கருத்து சொல்` என்று அந்த பாடகிக்கு பதில் சொல்லியிருக்க வேண்டும். அப்போது வாய் திறக்காத இந்த புத்திசாலி, கிட்டத்தட்ட அதே கருத்தை /தவறை டெண்டுல்கர் செய்யும்போதுமட்டும்  இவருக்கு அறசீற்றம் வந்துவிட்டது. என்ன ஒரு மொள்ளமாரித்தனம். ஒரு வேளை ரம்யா பாண்டியனுக்கு இவர் ஒன்னுவிட்ட சித்தப்பாவா இருப்பாரோ? அல்லது ரெண்டு பேரோட பேரும் ர வுல ஆரம்பிக்கறதால இப்படித்தான் ரெண்டு நாக்கோட அலைவாங்களோ?

பிக்பாஸ் விமர்சனத்தில் ரம்யா பாண்டியன் செய்த தவறை சுட்டிக்காட்டிய ஜேம்ஸ் வசந்தன் இங்கே ராமை விமர்சனம் செய்யவில்லை, மாறாக லைக் செய்திருக்கிறார். என்ன கொடுமை சரவணன் இது. 

நான் என் குணத்தை மாற்றிக் கொள்வதற்கு பல வருடங்கள் ஆகியது. ஆனால் ஜேம்ஸ் வசந்தன் 10 நாளுக்கு முன்னால் நடுநிலைமை என்றால் என்ன என்று ரம்யாவுக்கு உபதேசம் செய்துவிட்டு, இங்கே இப்படி தலைகீழ் உபதேசம்.   

0 comments:

Post a Comment