இந்த நான்கு சிறுவர்கள் செய்த செயலை நீங்கள் கவனித்து, மறந்து அடுத்த பரபரப்பை நோக்கி நகர்ந்திருக்கலாம். ஆனால் எனக்கு இவை சில கடந்த கால சம்பவங்களை நினைவுக்கு கொண்டுவந்தது. அவை இங்கே.
என் கடையில் வேலை பார்த்த இருவர் தலித்துகள். நான் அதையெல்லாம் தாண்டியவன். எனவே எனக்கு அது பிரச்சினையாகத் தெரியவில்லை. ஆனால் என் கடையில் ஐயர் ஒருவர் அடிக்கடி லாட்டரி டிக்கெட் வாங்குவார். அவர்தான் ஒரு முறை ஒருவரை சுட்டிக்காட்டி எதேச்சையாக கேட்டார் `இவர் தலித்தா?` என்று.
