அதிமுக - பிஜேபி கூட்டணி இப்படித்தான் கடும் இழுபறியில் மிக விரைவாக முடிவெடுத்தார்கள். கடைசியில் இருவருக்கும் நஷ்டம். காங்கிரஸ் - திமுக கூட்டணியும் இப்படித்தான் இழு இழு என இழுத்து விரைவாக கூட்டணி அமைத்தார்கள். அங்கேயும் இருவருக்கும் கோவிந்தாதான். தேமுதிக ஒரு வருடமாக யோசித்து விரைவாக முடிவெடுத்தார்கள். அதுவும் அதோகதி.
இதிலிருந்து என்ன தெரிகிறது? சரியோ, தவறோ முடிவை சரியான நேரத்தில் எடுத்துவிட வேண்டும்.
இப்போது அந்த வரிசையில் அண்ணாமலையும், வைகோவும் இணைந்திருக்கிறார்கள்.
தவெக பக்கம் வருவது என்ற முடிவை துரை வைகோ எடுத்துவிட்டார் போலிருக்கிறது. ஆனால் அந்த முடிவை எடுப்பதற்கு இவரும் நல்ல நாள் பார்த்துக்கொண்டிருக்கிறார். கீழ் மட்ட தொண்டர்கள் மட்டமாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இனி பொதுக்குழுவில் திமுகவுடன்தான் தொடர்வோம் என்றால் தொண்டர்களின் மனக்கசப்பு என்னாவது. திமுகவை கை கழுவுவது என்றால் அதை உடனே செய்யவேண்டியதுதானே? எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு களத்தில் இறங்கிவிட வேண்டும்.
இப்படி ரொம்ப யோசித்து யோசித்து குழம்பிப் போய் முடிவெடுப்பவர்கள் அரசியலில் ஜெயிப்பதில்லை. எனவே இங்கேயா அங்கேயா என்ற முடிவை விரைவில் எடுத்துவிடுங்கள்.
நல்லவன் நடுத்தெருவில் இருந்தாலும் அவனை நாம் கை கழுவக்கூடாது. அதுவும் நமக்கு உதவிய நண்பனாக இருந்தால் எமனே எதிரில் இருந்தாலும் துணை நிற்க வேண்டும். திமுக, அதிமுக போன்ற கட்சிகளெல்லாம் இந்த லிஸ்டில் வரவில்லை. இவர்கள் எல்லோருக்கும் நல்லது செய்தே சொத்து சேர்த்தவர்கள். இவர்கள் கழுத்தை அறுப்பதற்கு நேரம் காலமெல்லாம் பார்க்கக்கூடாது. 24 மணி நேரமும் சுபமுகூர்த்தம்தான். இனி அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இவர்களுக்கு இனி நாதியில்லை. விஜய்க்கு எதிராக திமுக -பிஜேபி என்று வந்தாலும், அல்லது திமுக - அதிமுக என்றாலும் அது இனி மக்களிடம் எடுபடாது. எனவே மண்ணை சீக்கிரம் போட்டுவிட்டு வாருங்கள்.
இனி அண்ணாமலையை பார்ப்போம். இவரும் அதே வகையறாதான். ரொம்ப யோசித்து யோசித்து நிதானமாக முடிவெடுத்திருக்கிறார். இதை தேர்தலுக்கு முன்பே எடுத்திருந்தால் அது கொஞ்சம் பலனைத் தந்திருக்கும். எனவே இவரும் தேறுவது சிரமம்தான். இவரைப் பற்றி கொஞ்சம் நீளமாக எழுத வேண்டும். அதை அடுத்த பகுதியில் பார்ப்போம்.

0 comments:
Post a Comment