!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Friday, January 20, 2012

நண்பன் விமர்சனம். ஸாரி, சங்கர் விமர்சனம்


சிறை அனுபவம் எழுதி ரொம்ப நாள் ஆகிவிட்டதால், அது குறித்து கொஞ்சம் ஆழமாகவே எழுத ஆரம்பித்தால், அது பல இணை துணை சம்பவங்களோடு மெகா சீரியலாக போய்க்கொண்டிருகிறது. இதை சில பதிவுகளாக பிரிப்பதா அல்லது அதன் போக்கில் விடுவதா என்ற குழப்பம் ஒரு பக்கம். இதற்கிடையில் நண்பனை பார்த்ததால், அதாவது சங்கரின் `நண்பனை` பார்த்ததால் இந்த பதிவு

டைரக்டர் சங்கர் கமர்ஷியலாக வெற்றிப் பட இயக்குனராக இருந்தாலும், பாய்ஸ் படத்துக்கு பிறகு அவர் மீதான சந்தேகம் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதற்கு முன் பசுத்தோல் போர்த்தி வலம் வந்தவர், சில வெற்றிகளை கண்டவுடன், கொஞ்சம் திரையை விளக்கி அவருடைய ரசனையை காட்டி இருக்கிறார். அதற்கு கிடைத்த எதிர்ப்பு அவரை அடக்கி வாசிக்க வைத்தாலும், அவருடைய ரசனைகள் எப்படியும் வெளிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறது.
   
நண்பன் படம் பார்த்த பிறகு இனி சங்கர் படம் பார்ப்பதில்லை என்ற முடிவுக்கே வந்துவிட்டேன்!. இதனால் சினிமாத்துறை அழிந்துவிடப் போவதில்லை. இருந்தாலும் இது போன்ற படத்தை பார்பானேன், டெண்ஷனாவானேன் என்ற கதைதான்.

மேம்போக்காக பார்த்தால் படம் ஒரு ஜாலியான ரகம். குறைகளை அதாவது சில வக்கிரங்களை தவிர்த்திருந்தால் நல்ல என்டர்டெயின்மென்டாக, மெசேஜ் சொல்லும் படமாகவும் இருந்திருக்கும். இந்தி வெர்ஷனை நான் பார்க்கவில்லை, ஆனால் டிவியில் பிட்டு பிட்டாக பார்த்திருக்கிறேன் போலிருக்கிறது. இன்டர்வெல் வரை ரசித்தவன் அதன்பிறகு `டே ஜாவு` ஆகிவிட்டது.

இது வெறும் காமெடி படம்தான் என்றால் இந்த விமர்சனமும் தேவை இல்லை. அந்த படங்கள் சிரிக்க மட்டும்தான் என்பதால், மூளை எந்த கேள்வியும் கேட்காது. ஆனால் ஊருக்கு உபதேசம் பண்ண ஒருவர் கிளம்பினால், அந்த உபதேசங்களில் உள்ள ஓட்டையும் சுட்டிக் காட்ட வேண்டியதாகி விடுகிறது.

இன்று குறுக்கு வழியில் செல்பவர்கள் வேகமாக முன்னேறுவதையும், நேர்மையாக இருப்பவர்கள் லாட்டரி அடிப்பதையும் நாம் வெளிப்படையாகவே பார்க்கிறோம். இது இன்றைய யதார்த்தமாகவும் இருக்கலாம். ஆனால் காவியம் என்று வரும்போது, அது புத்தகமோ, சினிமாவோ, இங்கே நல்லவர்கள் ஜெயிக்க வேண்டும், தவறான பாதையில் செல்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இதுதான் நியதி. இந்த நியதி மீறப்படுவது மட்டுமில்லாமல் மொள்ளமாரித்தனம் செய்பவர்கள்தான் ஹீரோக்கள் என்று வலியுறுத்தும் அளவுக்கு போகிறது.

மங்காத்தா மற்றும் வேறு சில படங்களும் இதேபோல் இருக்கலாம். ஆனால் நான் பார்த்தது இதை. எனவே இந்த படத்தை இந்த ட்ரெண்டை விமர்சிக்க வேண்டியதாகி விடுகிறது. இதை எல்லாம் சென்சார் போர்ட் அனுமதிப்பது வினோதம்தான்.

இங்கே ஹீரோ காலேஜில் மோசடியில் ஈடுபடுகிறார். ஹீரோவுக்கு கல்வியின் மீதான ஆர்வம் மற்றும் அவருடைய சூழ்நிலை அதை மன்னிக்க வைக்கும். இதுவே ஒரு யதார்த்தமான கதையில் வந்திருந்தால், கடைசியில் சில பெரிசுகள், `இது தப்பு. இருந்தாலும் படிக்கனும்ன்கிற ஆர்வத்துல செஞ்சிட்ட. அதனால மன்னிக்கிறோம்` என்று மாரல் உபதேசங்களோடு படத்துக்கு சுபம் போட்டிருப்பார்கள். இந்த படத்தில் அது தவறு என்ற கருத்தோ அல்லது இந்த குற்றத்தை புகார் செய்ய வேண்டும் என்ற எண்ணமோ மற்ற ஹீரோக்களுக்கு வரவில்லை. அதாவது இது அவர்களுக்கு ஒரு விஷயமே இல்லை என்ற வகையில் படம் போகிறது. சம்பிரதாயத்துக்கு கூட தவறுகளை கண்டிக்கும் உபதேசங்கள் இல்லை.

ஜீவா, ஒரு காட்சியில், `நான் படித்தே பாசாகிறேன்` என்று வசனம் பேசுகிறார். நல்ல கருத்துதான். ஆனால் இந்த படத்தில் நல்ல காட்சிகள், மோசமான காட்சிகள் என்று லிஸ்ட் போட்டு அதில் கூட்டிக் கழித்து பார்த்தால் மோசமான காட்சிகள்தான் அதிகமாக இருக்கும்.

பிராடு வேலை பார்ப்பவனும், குறும்பு என்ற பெயரில் மட்டமான செயலை (கற்பழிக்க, கொங்கை) செய்பவர்கள்தான் ஹீரோ என்றாகிவிட்டது. இந்த இடத்தில் எனக்கு எந்திரன் படம் ஞாபகத்துக்கு வருகிறது. அங்கே ஐஸ்வர்யாராய் எந்திரன் உதவியுடன் காலேஜில் பிட் அடிப்பார். அது டெக்னாலஜியை நகைசுவையாய் சொன்னதில் ரசிக்க முடிந்தது.ஆனால் இந்த படத்திலும் (ரீமேக்காக இருந்தாலும்) இதையே பார்க்கும் போது எனக்கு சந்தேகம் வருகிறது.

இப்படிதான் பிரபல ஆங்கில எழுத்தாளர் ஜெப்ரி ஆர்ச்சர் ஒரு வழக்கில் கோர்டில் பொய் சொல்லி தப்பிவிட்டார். (பின்னர் மாட்டிக் கொண்டார்). ஆனால் அவருடைய ஒரு சிறுகதையில் ஒருவன் கொலை செய்துவிட்டு, அந்த கொலை வழக்குக்கான ஜுரிக்களில் ஒருவராகவும் வந்து, ஒரு அப்பாவியை குற்றவாளி என்று தீர்பளித்து மாட்டிவிட்டு அந்த உண்மையான குற்றவாளி தப்பி விடுவதாக கதை எழுதி இருப்பார்.

ஒரு தவறு செய்துவிட்டு நீதிமன்றத்தை ஏமாற்றலாம் என்பதை அனுபவபூர்வமாக ஜெப்ரி ஆர்ச்சர் உணர்ந்த பிறகுதான் அவர் இந்த கதையை எழுதி இருப்பார் என்று நான் நினைக்கிறன். இங்கே சங்கரின் கதையும் அப்படி இருக்கலாம். இவர் படிக்கும் போதோ அல்லது வேறு ஏதாவது மோசடி செய்திருப்பாரா, அந்த எண்ணங்கள்தான் இப்படியெல்லாம் காட்சி அமைக்க தூண்டுகிறதோ என்ற சந்தேகம் எனக்கு வலுக்கிறது.

ஒருவர் பிரபலமாகிவிட்டால் அவருடைய இருண்ட பக்கங்கள் மறைந்துவிடும் அல்லது மறைக்கப்படும். ஆனால் யாராவது ஒருவர் கல் எறிந்தால் போதும் that will bring more skeletons. பார்க்கலாம்.

இவர் தன்னை ஒரு சமூக அக்கறை உள்ளவராக காட்டிக் கொண்டாலும், இவர் அதற்கு சொல்லும் தீர்வுகளும் அம்புலிமாமா வகை. அது மட்டுமின்றி வக்கிரங்களும், நகைச்சுவை என்ற பெயரில் மட்டமான ரசனை வேறு. அங்கவை, சங்கவை என்ற போதே இவருக்கு பாடம் புகட்டி இருக்க வேண்டும். அதை விட்டதால்தான் இப்போது முனியம்மாவும், பாரிவேந்தனும் மட்டம் தட்டப்படிருக்கிறார்கள்.

சினிமா விமர்சனம் அனாவசியானதுதான். ஆனால் ஒரு படம் சமூக சீர்திருத்தம் என்ற பெயரில் சமூக விரோத கருத்துக்களையும், நகைச்சவை என்ற பெயரில் மற்றவர்களை அவமானப்படுத்தும்போது அதை பற்றி எழுத வேண்டியதாகிவிடுகிறது.

இது ஒரு ரீமேக். எனவே சங்கரின் பங்களிப்பு குறைவுதான். ஆனாலும் நமக்கு முன் இருக்கும் பல விஷயங்களில் ஒருவர் எதை எடுக்கிறார் என்பதே அவருடைய தரத்தை காட்டும். அதிலும் தரமானவர்கள் அதில் உள்ளே குறைகளை களைந்து அதை மேம்படுத்துவார்கள். ஆனால் சங்கர்? எனக்கு ஒரு பழமொழிதான் ஞாபத்துக்கு வருகிறது.

இந்தப் படம் ஓடும். ஒரு பொருளை திறமையாக மார்கெட்டிங் பண்ணும் திறமை இவரிடம் இருக்கிறது. ஆனால் பளபளப்பான பேப்பரில் மட்டமான சரக்கை விற்கும் வியாபாரி இவர் என்பதுதான் உண்மை.

10 comments:

Jayadev Das said...

இந்தப் படம் இந்திப் படத்தை காட்சிக்கு காட்சி அப்படியே ஜெராக்ஸ் எடுத்து செய்யப் பட்டது. முடிந்தவரை நடிகர்களையும் [விஜயைத் தவிர] ஒரிஜினல் படத்தில் உள்ளவர்களைப் போலவே தேர்ந்தெடுத்துள்ளார்கள். ஆகையால், படத்தின் கதை, வக்கிரம் போன்றவற்றைப் பற்றி குறை சொல்லி பிரயோஜனமில்லை. சொல்லப் போனால், சில காட்சிகளில் வக்கிரத்தை குறைத்தும் எடுத்துள்ளார் ஷங்கர். ஹிந்தியில் ஜட்டியைக் கலட்டி புட்டங்களை திருப்பிக் காண்பித்து "இது உங்களுக்கு சமர்ப்பணம் செய்கிறேன்" என்று சொல்ல வேண்டும், சீனியர் ஒவ்வொரு புட்டத்தின் மேலும் சீல் குத்துவார். இதை நீக்கி விட்டு தரையில் விழுந்து "வணக்கம் செய்கிறேன் தலைவா" என்று தமிழில் எடுக்கப் பட்டுள்ளது. இது ஒரு புறமிருக்கட்டும், தங்கள் பதிவைப் படித்தால் இந்தப் படத்தைப் பற்றி சுற்றி வளைத்து எதையோ குற்றம் சொல்கிறீர்கள் என்று மட்டும் தெரிகிறது, நேரிடையாக என்ன என்று புரிந்துகொள்ள முடியவில்லை!! அதே தப்பு எந்திரன் படத்தில் வந்தது நியாயம் என்கிறீர்கள். குழப்புகிறது. முடிந்தால் தெளிவு படுத்தவும்.

சிவானந்தம் said...

வாங்க ஜெயதேவ தாஸ். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

இந்த பதிவுக்கு நண்பன் படம் மட்டும் காரணமில்லை. ஆங்கிலத்தில் last straw என்ற பதம் உண்டு. அதுபோல் நல்லவர்கள்தான் ஹீரோக்கள் என்ற முறை போய் இன்று தவறான செய்கைகளை ஹீரோக்களே செய்வது போன்ற காட்சிகளை தொடர்ந்து பார்த்து வந்த வெறுப்பில், அது நண்பன் படம் பார்த்தவுடன் வெடித்துவிட்டது. அவ்வளவுதான்.

கல்வியையை பொறுத்த வரையில் `நண்பன்` சித்தாந்தம் உண்மைதான். இதற்காக யாரை வேண்டுமானாலும் பாராட்டலாம். சிறையில் ஒரு காவலர்,`நான் படிக்கும் போது கோல்ட் மெடல் வாங்கியவன்` என்று பெருமையாக பேசுவார். ஆனால் பழைய கைதிகளை பார்த்தால், `என்னப்பா கவனிக்கவே மாட்ற` என்பார். அதாவது அந்த `கவனிப்பு`. இதுதான் மார்க்கை அடிப்படையாக கொண்ட இந்திய கல்வியின் லட்சணம். எனவே அந்த வகையில் இந்த உபதேசம் ஓகேதான். ஆனால் ஒரு ஜாலியான, நல்ல கருத்துள்ள படத்தில் முனியம்மாவையும், பாரி வேந்தன் என்ற தமிழ் பெயரையும் நக்கலடிக்கும் காட்சி தேவையா? இது நிச்சயமாக சங்கரின் இன வெறியைதான் காட்டுகிறது. இது இந்தியில் எப்படி வந்திருகிறது?

அதேபோல் கற்பிக்கும் கற்பழிக்கும் ஆனது, கொள்கை கொங்கை ஆனது prank இல்லை. மட்டமான ரசனை. இந்தியில் எப்படியோ, அந்த படம் பார்த்தால்தான் கருத்து சொல்ல முடியும். ஆனால் இவையெல்லாம் ஜோக் இல்லை, இது சிக் ஜோக் வகை.

காலேஜ் சம்பவங்கள் இந்தியில் இன்னும் மட்டம், சங்கர் அதை செதுக்கியிருக்கிறார் என்றால், நிச்சயம் அதற்காக அவரை பாராட்டலாம். ஆனால் மற்ற இன துவேஷம் கொண்ட காமடியை தவிர்த்திருந்தால் இதை யாரும் குறை சொல்லப் போவதில்லை.

இந்திரனை பொறுத்த வரையில் சிட்டி உதவியுடன் காலேஜில் பிட் அடிக்கும் காட்சி, டெக்னாலஜியை எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று காட்ட தேவைப்பட்டிருக்கலாம். எனவே ரசித்தேன். ஆனால் காலேஜ் மோசடி போன்ற சம்பவம் அடுத்தடுத்து பார்க்க நேர்ந்தால் இது கோ இன்சிடன்ஸ் என்று தோன்றவில்லை. ஒருவேளை இவரும் ஏதாவது பிராட் பண்ணி இருப்பாரோ என்ற சந்தேகத்தைத்தான் ஏற்படுத்துகிறது.

சினிமாவில் எல்லாமே நல்ல காட்சிகளாக இருக்க முடியாது. இதில் சத்யராஜ் ஜீவாவை பரிட்சையில் கழுத்தறுக்க முயற்சிப்பார். அவரை காப்பாற்ற விஜய்யும் இலியானாவும் மார்க் சீட்டை திருடுவார்கள். இங்கே இது தவறு என்றாலும், இந்த திருட்டை நியாப்படுத்தும் காரணங்கள் இருகின்றன. ஆனால் இறுதியில் `நான் படித்தே பாஸ் பண்ணுகிறேன்` என்று ஜீவா சொல்லும் போது அந்த காட்சிகளின் அவசியமும் தெரிகிறது, கடைசியில் சொல்லப்பட்ட நீதி மட்டுமே நம் மனதை ஆக்கிரமிக்கிறது. அந்த ஒரு காட்சி கொடுத்த திருப்தியை இந்த படம் தரவில்லை. சில தத்துவங்கள், பல விஷங்கள். இதுதான் நண்பன்

Anonymous said...

well said jayadev

நெல்லை கபே said...

நெகடிவ் விஷயங்கள் செய்பவன்தான் (அதுவும் திறமையாக!) ஹீரோ என்ற காலம் வந்து பல காலம் ஆகிவிட்டது.அது படியே இப்போது உள்ள தலைமுறையும் அதைப் பின்பற்றுகிறது. take it easy என்பதுதான் தாரகமந்திரம். உங்கள் விமர்சனம் உங்களது கருத்து மட்டுமே துரதிஷ்டவசமாக பொதுப்புத்தி வேறு விதமாகவே உள்ளது. இந்த படம் வெற்றிப்படம்!!!!!!!!!!!!

Rathnavel Natarajan said...

ஒரு பொருளை திறமையாக மார்கெட்டிங் பண்ணும் திறமை இவரிடம் இருக்கிறது. ஆனால் பளபளப்பான பேப்பரில் மட்டமான சரக்கை விற்கும் வியாபாரி இவர் என்பதுதான் உண்மை.

அருமையான வரிகள். நிஜம் தான்.
வாழ்த்துகள்.

காரிகன் said...

உங்களுக்கு ஷங்கரை பிடிக்கவில்லை என்று தெரிகிறது. பெரும்பான்மையானவர்கள் அவரை ஒரு பிராமண வகுப்பை சார்ந்தவர் என்று நினைத்துக்கொண்டு இப்படி இன துவேஷம் என்று வெற்று கொடி பிடிக்கின்றனர். உண்மையில் அவர் பிராமணர் அல்ல.(முதலியார் என்று எண்ணுகிறேன்)இரண்டாவது உங்களின் விமர்சனம் தவறுகளை மட்டும் சுட்டி காண்பிப்பதற்காகவே எழுதப்பட்டது போல் இருக்கிறது. மங்காத்தா, கோவா,அவன் இவன் போன்ற மிகவும் கீழ்த்தரமான ரசனை கொண்ட படங்கள் வெளி வந்த போது அவற்றை கடுமையாக விமர்சனம் செய்யாமல் இப்போது ஆபாசங்கள் இல்லாத ஒரு கல்லூரி கதையை ஷங்கர் கொடுத்ததற்காக (மேலும் இது ஒரு பிரதி எடுக்கப்பட்ட படம்)அவரை எதோ குற்றவாளி அளவுக்கு பேசுவது சரியல்ல.நீங்கள் கன்னடத்து நடிகர் ரஜினிகாந்த் என்பவரின் தீவிர விசிறியாக இருப்பீர்களோ என்று தோன்றுகிறது. இந்திரன் என்கிற மகா மட்டமான படத்தை இப்படி ரசிக்கும் நீங்கள் எந்த விதமான ரசனை கொண்டவர் என்று அப்பட்டமாக தெரிகிறது.எதையாவது வித்தியாசமாக எழுத வேண்டும் என்று கண்ணா பின்னா என்று எழுத விரும்புவது ஒரு விதமான மேதாவித்தனம்.

சிவானந்தம் said...

@ மாயன்

//நெகடிவ் விஷயங்கள் செய்பவன்தான் (அதுவும் திறமையாக!) ஹீரோ என்ற காலம் வந்து பல காலம் ஆகிவிட்டது.அது படியே இப்போது உள்ள தலைமுறையும் அதைப் பின்பற்றுகிறது. take it easy என்பதுதான் தாரகமந்திரம். உங்கள் விமர்சனம் உங்களது கருத்து மட்டுமே துரதிஷ்டவசமாக பொதுப்புத்தி வேறு விதமாகவே உள்ளது. இந்த படம் வெற்றிப்படம்!!!!!!!!!!!!///

நிச்சயம் இது வெற்றிப்படம்தான். ஆனால் ஒரு வெற்றி படத்தில் இன துவேஷத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. முனியம்மாவும், பாரி வேந்தனும் படத்துக்கு தேவையே இல்லாத வசனங்கள். தவிர்த்திருக்கலாம். அங்கவை சங்கவை காமெடியை நான் பார்க்காமல் இருந்தால் இதையும் நான் புறந்தள்ளி இருப்பேன். அடுத்து அந்த காலேஜ் காமெடி. வார்த்தைகளோடு விளையாட வார்த்தைகளா இல்லை. அநாகரீகத்தை தவிர்த்திருக்கலாம்.

அனேகமாக எல்லா காலங்களிலும் இந்த சமுதாயம் கெட்டுவிட்டது என்ற புலம்பல் இருந்திருக்கும். அதை கண்டிப்போரும், சீர்திருத்த நினைப்போரும் இருந்திருப்பார்கள். அந்த காலத்திலாவது இது ஒரு போராட்டமாக, ரிஸ்காக இருந்திருக்கும். ஆனால் இப்போது கூகிள், பிளாக்கர், இணையம் இருக்கிறது. அதைவிட முக்கியமாக சுதந்திரம் இருக்கிறது. எனவே தவறை தவறு என்று கண்டிப்பதில் ரிஸ்க் இல்லை. சமுதாயம் திருந்துகிறதோ இல்லையோ, நான் என் சுதந்திரத்தை பயன்படுத்துகிறேன். அவ்வளவுதான்.

சிவானந்தம் said...

அருமையான வரிகள். நிஜம் தான்.
வாழ்த்துகள்.

வாங்க ரத்னவேல் சார். உங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிவானந்தம் said...

@காரிகன் said...

///உங்களுக்கு ஷங்கரை பிடிக்கவில்லை என்று தெரிகிறது.///

அவர் எந்தவிதத்திலும் என் குடியை கெடுக்கவில்லை. உண்மையை சொல்கிறோம் என்ற பெயரில் அசிங்கத்தை சொல்லக்கூடாது. அதனால் வந்த கோவம்.

/// பெரும்பான்மையானவர்கள் அவரை ஒரு பிராமண வகுப்பை சார்ந்தவர் என்று நினைத்துக்கொண்டு இப்படி இன துவேஷம் என்று வெற்று கொடி பிடிக்கின்றனர். உண்மையில் அவர் பிராமணர் அல்ல.(முதலியார் என்று எண்ணுகிறேன்)///

முதலியாரா! சந்தோசம்! இனி நான் அவரை உரிமையாகவே திட்டலாம். ஜாதிப் பிரச்சினை வராது.

////இரண்டாவது உங்களின் விமர்சனம் தவறுகளை மட்டும் சுட்டி காண்பிப்பதற்காகவே எழுதப்பட்டது போல் இருக்கிறது. மங்காத்தா, கோவா,அவன் இவன் போன்ற மிகவும் கீழ்த்தரமான ரசனை கொண்ட படங்கள் வெளி வந்த போது அவற்றை கடுமையாக விமர்சனம் செய்யாமல் இப்போது ஆபாசங்கள் இல்லாத ஒரு கல்லூரி கதையை ஷங்கர் கொடுத்ததற்காக அவரை எதோ குற்றவாளி அளவுக்கு பேசுவது சரியல்ல.////

நான் என் பதிவிலேயே சொல்லி இருக்கிறேன் நான் இந்த டிரெண்டை விமர்சிக்கிறேன் என்று. அதாவது அசிங்கமாக பலர் பேசுவார்கள். ஆனால் எது நம் காதில் விழுகிறதோ அதைதான் நாம் கண்டிப்போம். நீங்கள் சொன்ன படம் எதுவும் நான் பார்க்கவில்லை. `நண்பனை` பார்த்ததால் கோபம் இங்கே திரும்பிவிட்டது. ஏற்கனவே சங்கர் மீது சந்தேகக் கண்ணோடு இருந்ததால் அது பதிவாகிவிட்டது.

///மேலும் இது ஒரு பிரதி எடுக்கப்பட்ட படம்///

இருக்கட்டுமே. பார்ப்பதை அப்படியே சொல்வதா நாகரீகம். சமீபத்தில் ஒரு மாமியார் மருமகள் சண்டையில் மாட்டிக் கொண்டேன். இதை மற்ற உறவினர்களிடம் நான் எப்படி சொல்வது? காதில் விழுந்ததை அப்படியே சொல்வதா? கோபத்தில் அல்லது விபரம் புரியாமல் வார்த்தையை கொட்டி இருக்கலாம். அதற்காக உண்மையை சொல்கிறேன் என்கிற போர்வையில் குடும்பத்தில் பிளவையா உருவாக்குவது. எனவே அநாகரீகமான வார்த்தைகளை எடிட் பண்ணிதான் சொன்னேன். சில இடங்களில் நாம் நாகரீகத்தை கடைபிடிக்க வேண்டும். சங்கரும் மூலக்கதைக்கு சேதாரம் இல்லாமல் நாகரீகமாக செதுக்கி இருக்கலாம்.

//நீங்கள் கன்னடத்து நடிகர் ரஜினிகாந்த் என்பவரின் தீவிர விசிறியாக இருப்பீர்களோ என்று தோன்றுகிறது. இந்திரன் என்கிற மகா மட்டமான படத்தை இப்படி ரசிக்கும் நீங்கள் எந்த விதமான ரசனை கொண்டவர் என்று அப்பட்டமாக தெரிகிறது.///

எந்திரன் படத்தை பார்க்க மூளைக்கு வேலை இல்லை. அது ஒரு ஜாலியான படம். எனவே லாஜிக்கோ கருத்தையோ பார்க்காமல் ரசித்தேன். அதிலும் மனிதர்களின் சுயநலம் குறித்த மெசேஜ் இருந்தது. அது ரஜினி படமல்ல, சங்கர் படம். மற்றபடி நான் யாருக்கும் விசிறி அல்ல. அதுவும் ரஜினிக்கு? ஒன்னும் சொல்றதுகில்ல!

/// கண்ணா பின்னா என்று எழுத விரும்புவது ஒரு விதமான மேதாவித்தனம்.///

நான் `சொல்ல வருவது புரியவில்லை` என்றார் ஒருவர். மேதைகள் ஏதாவது சொன்னால் அதை புரிந்து கொள்வது சிரமம் என்று படித்திருக்கிறேன். எனவே நீங்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம்.

raja said...

neenga solrathu ok ji

Post a Comment