!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, October 31, 2011

கூடங்குளம்: இங்கேயும் சில அன்னா ஹசாரேக்கள்


இதை தினமலருக்காக (இது உங்கள் இடம்) கொஞ்சம் சுருக்கி எழுதினேன். இங்கே இன்னும் கொஞ்சம் விளக்கமாக...


சில வாரங்களுக்கு முன் அணுசக்தி குறித்த தகவல்களில் முழ்கி இருந்தேன். ஆனால் முதலில் என் கதையை போட்டுவிடுவோம் என்று முடிவெடுத்ததால் அதை பற்றி பதிவு எழுதவில்லை. கூடங்குளம் பிரச்சினை இன்னமும் கொதிக்கும் நிலையில் அது குறித்தும் ஒரு பதிவு.

அணுசக்தி விஷயமாக பல செய்திகளை படித்ததில் ஒரு விஷயம் தெளிவாகிவிட்டது. ஒரு செய்தியை சொல்ல வேண்டும் என்பதை விட அதை எப்படி சொல்ல வேண்டும் என்பதில்தான் உங்கள் திறமை அடங்கியிருக்கிறது. ராமாயணத்தில் `கண்டேன் சீதையை` என்ற சொன்னதிலிருந்து, மகாபாரத்தில் `(யானை) அசுவத்தாமா மரணம்` என்று சொன்னது வரை அந்த வார்த்தைகளுக்கு பின் பல நோக்கங்கள் அடங்கி இருக்கிறது. சொல்வது உண்மை என்றாலும் அதை சொல்லும் விதத்தில் நாம் நமது விருப்பத்தை திணிக்கலாம். இந்த தியரி இந்த பதிவுக்கும் பொருந்தும். இருந்தாலும் பலதரப்பட்ட வாதங்களை நீங்கள் கவனிக்க ஆரம்பித்தால் உங்களால் உண்மையை கண்டுபிடித்துவிட முடியும். 

Tuesday, October 4, 2011

நான் நடத்திய பத்திரிகையும், `நான் தமிழன்` ஜோக்கும்.



கூடங்குளம் பிரச்சினை சம்பந்தமாக இணையத்தில் ஒரு செய்தியை படித்தேன். அது குறித்து பதிவு போடும் எண்ணம் இல்லை. இருந்தாலும் அதில் சொல்லப்பட்ட புள்ளிவிவரம் என்னை குழப்பியதால்,மீண்டும் படிக்க நினைத்தேன். ஆனால் எங்கே படித்தேன் என்பது மறந்துவிட்டது. கூகுளில் `அணுசக்தி` என்று கொடுத்து தேடினாலும் கிடைக்கவில்லை. ஆனால் ஆங்கிலத்தில் `Indian nuclear energy` என்று கொடுத்து தேடினால், அது கடலை காட்டியது. பின்னர் அதில் பல வடிகட்டிகளை பயன்படுத்தி ஓரளவுக்கு எனது சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொண்டேன்.

சில நாட்கள் இப்படி தகவல்களில் மூழ்கி கிடந்ததில், ஆங்கிலம் என்ற மொழியின் அருமையும், இணையம் ஒரு கடலாக இருந்தாலும் அதில் ஆங்கிலம் என்ற மொழியின் அவசியத்தையும் புரிந்துக் கொள்ள முடிந்தது. அப்படியே இதை கற்றுக் கொள்ள நான் எடுத்த விடா முயற்சியும் நினைவுக்கு வந்தது.       

Tuesday, September 20, 2011

ஒரு நீதிக் கதை, ஒரு விளக்கம், ஒரு ஜோக்ஸ்.


இந்த கதையை ஒரு கென்ய பத்திரிகையில் படித்தேன். அரசியல்வாதிகளும், பிரபலமான மனிதர்களும் படிக்க வேண்டிய கதை. நீதிக் கதைகள் ஒவ்வொரு நாட்டிலும் உண்டு. இதையே நீங்கள் வேறு விதமாகவும் படித்திருக்கலாம். இருந்தாலும் நீதி கதைகளை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்கலாம். எனவே படியுங்கள்.

கென்யாவும் ஜனநாயக நாடு என்பதால், அங்கேயும் அரசியல்வாதிகளின் மீது ஊழல் புகார். அங்கே ஒரு கட்டுரையாளர் அவருடைய அரசியல் விமர்சனத்தில் இந்த கதையை சொன்னார்.

Tuesday, September 13, 2011

வெல்கம் பிஜேபி!


இது (பரபரப்பில்லாத) கிரிக்கெட் சீசன். கிரிக்கெட்டில் அவ்வவப்போது நமது கதாநாயகர்கள் மாறுவார்கள். உண்மையில் கிரிக்கெட்டில் நாம் எந்த ஒரு தனி நபர்களையும் துதி பாடுவதில்லை. அவர்கள் பார்மில் அடித்து ஆடும்போது தலையில் தூக்கிவைத்து கொண்டாடுவோம். சரியாக விளையாடாமல் கட்டை போட்டால், `அவுட்டாகித் தொலையேன்` என்று சபிப்போம்.

நாட்டிற்கு வெற்றியையும், பெருமையையும் தேடித்தருகிறார்கள் என்ற வகையில்தான் நாம் இவர்களை ஆதரிக்கிறோம். அவர்களால் நமது அணிக்கு பலம் இல்லை எனும்போது அவர்கள் புறக்கனிக்கப்படுவதையே விரும்புவோம். எனது அரசியல் நிலைப்பாடும் அந்த வகையை சேர்ந்ததுதான். மன்மோகன் சிங் என்ற நேர்மையான பொருளாதார நிபுணர் நம் நாட்டின் பிரதமராக வந்தபோது, இவரால் நாடு வளர்ச்சி பெரும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் எதுவும் செய்ய இயலாமல் இவர் பொம்மையாய் இருப்பதை பார்க்கும் போது இவர் போய் சேர்ந்தால் தேவலை என்ற முடிவுக்கே வரவேண்டி இருக்கிறது.

Wednesday, August 31, 2011

அன்னா ஹசாரேவின் போராட்டத்தினால் கிடைத்த லாபம் + நஷ்டம்


இரண்டாவது சுதந்திரப் போர் (?) முடிவுக்கு வந்துவிட்டது. இதில் யார் ஜெயித்தார்கள் என்று ஆராய்ச்சி செய்யாமல் ஜனநாயகம் ஜெயித்தது என்றே சொல்வோம்.  அரசு அன்னாவின் மிரட்டலுக்கு பணிந்தும் போகவில்லை, அதேசமயம் மீண்டும் ஒரு முறை அவரை கைது செய்து அவருடைய உண்ணாவிரதத்தை முறியடிக்காமல் யதார்த்தமாகவும் செயல்பட்டிருகிறது.

அன்னாவின் மிரட்டலுக்கு அரசு பணிந்து போயிருந்தால் பலர் இந்த பிளாக்மெயில் முறையை பின் பற்ற ஆரம்பித்திருப்பார்கள். அல்லது அடக்குமுறை மூலம் இதை அடக்கி இருந்தாலோ ஏற்கனவே அரசியல்வாதிகளின் மீது கோவத்தில் இருக்கும் மக்கள் மேலும் அந்நியப்பட்டுப் போயிருப்பார்கள். ஆக எதற்கும் இடம் கொடுக்காமல் இரண்டு பேரும் இறங்கி வந்தது பாராட்டுக்குரியது.