!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Sunday, March 29, 2026

A B C D கூட்டணி ஜெயிக்குமா?

அதாங்க.. திமுக கூட்டணி ஜெயிக்குமா என்பதுதான் கேள்வி. அந்த 26 ஏழுத்தை கொண்டவன் ஒரு காலத்தில் உலகத்தை ஆண்டான். இப்போது அவன் நிலை என்ன.. அதுதான் உலகம். இங்கே எந்த சாம்ராஜ்யமும் தொடர்ந்து அதிகாரத்தில் இருந்ததாக சரித்திரம் இல்லை. அதுவும் தற்போது டிஜிட்டல் உலகம். இங்கே வளர்ச்சியும் வீழ்ச்சியும் மிக வேகமாக இருக்கும்.

2026 தேர்தலில் யார் ஜெயித்தாலும் ஒரு சாம்ராஜ்யம் சிதையப் போகிறது. அது திமுகவா அல்லது அதிமுகவா என்பதுதான் புதிர். டைம் மிஷின் மட்டும் கிடைத்தால் உடனடியாக மே மாதம் போய் உலகம் எப்படி இருக்கிறது என்பதை பார்த்துவிட வேண்டும் என்று மனம் துடிக்கிறது.

Wednesday, March 25, 2026

தட்டில் முகம் தெரிகிறது சிறுத்தைகளே...


ஒரு நீதிக் கதை. யார் வீட்டுக்காவது விருந்தாளியாக போனால் தட்டில் முகம் தெரிவதற்கு முன் வந்துவிட வேண்டும் என்று சொல்வார்கள். இணையத்தில் இருப்பவர்கள் விவரம் தெரிந்தவர்கள் என்பதால் இதற்கு விளக்கம் தேவையில்லை.

திருமாவளவனின் கதை அப்படித்தான் இருக்கிறது. தன்மானம் சுயமரியாதை என பெரியாரிஸம் பேசுவார். ஆனால் அதன் அர்த்தம் என்ன என்பது அவருக்கே தெரியாது போலிருக்கிறது. விண்ணில் பெரியார் இதையெல்லாம் பார்த்து இந்நேரம் தலையில் அடித்துக்கொண்டிருப்பார்.

Saturday, March 21, 2026

தமிழ் நாடா, தெலுங்கு நாடா?


தமிழ் நாடா, தெலுங்கு நாடா? இதுதான் இப்போதைய சர்ச்சை. பாக்யராஜ், பார்த்திபன் போன்றோர் இதை பொதுவெளிக்கு கொண்டுவந்துவிட்டார்கள்.

தமிழ்நாட்டில் கணிசமாக தெலுங்கு பேசும் மக்கள் இருக்கிறார்கள். அதிலும் அதிகாரத்தில் இருக்கிறார்கள். அதுதான் பிரச்சினை. இங்கே முதல்வர் மட்டும் தெலுங்கை தாய் மொழியாக கொண்டிருந்தால் பிரச்சினை இல்லை. அவர் நல்லவர், திறமைசாலி என விட்டுவிடலாம். (இங்கே நான் ஸ்டாலினை குறிப்பிடவில்லை, பொதுவாக சொல்கிறேன்.) ஆனால் கணிசமான அமைச்சர்களும் தெலுங்கை தாய்மொழியாக கொண்டவர்களாக இருப்பதுதான் பிரச்சினை.

Tuesday, March 17, 2026

திமுகவும், பங்களாதேஷும்.

திமுகவும், பங்களாதேஷும். இந்த இரண்டுக்கும் என்ன சம்பந்தம் என நினைக்காதீர்கள். இருக்கிறது. 

தற்போது இந்தியாவில் ஒரு கொள்கை நடைமுறையில் இருக்கிறது. சங்கியாக இருந்தால் முழு சங்கியாக இருக்கவேண்டும். உபியாக இருந்தால் அதுவும் அப்படியே. ரத்தத்தின் ரத்தம், தற்குறி, ஜோம்பி என எல்லாம் இந்த வகைதான். அவர்களுடைய தலைவர்கள் தவறு செய்துவிட்டால் அதை அப்படியே பூசி மெழுகிவிட வேண்டும். ஆனால் அடுத்தவர்கள் செய்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க வேண்டும். நான் இந்த கொள்கையை கடைபிடிப்பவன் அல்ல. சில விஷயங்களில் எனக்கு உடன்பாடில்லை என்றால் சொல்லிவிடுவேன்.

Saturday, March 14, 2026

கேஸ் தட்டுப்பாடு, பிஜேபி சறுக்கியதா?


இந்தியாவில் பெட்ரோலிய பொருட்களுக்கான தட்டுப்பாடில் பல விதமான செய்திகள் வருகிறது. மத்திய அரசு சரியாக திட்டமிடவில்லை, இப்படி ஒரு சூழ்நிலையை கணிக்க தவறிவிட்டார்கள் என எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனக்கும் இங்கே ஆர்வம் வந்தது. ஆசியாவில் பல நாடுகளில் நிலை என்ன என்று கவனித்தேன்.

சவுத் கொரியா 200 நாட்கள், ஜப்பான் 250 நாட்கள், மலேஷியா 30 நாட்கள்?, சீனா 100 நாட்கள், இந்தியா 70 நாட்களுக்கான ரிசர்வ் என பலவிதமான தகவல்கள். இதில் சமையல் எரிவாயு வேறு வகை போலிருக்கிறது. அங்கேதான் இந்தியாவின் கையிருப்பு கொஞ்சம் குறைவாக இருக்கிறது. அதுதான் தலைவலியை உருவாக்கியிருக்கிறது.

Saturday, March 7, 2026

இந்தியாவின் மானம் போய்விட்டதா?


ஈரானிய கப்பல் அழிந்ததில் இந்தியாவின் மானம் போய்விட்டதாம். இந்த செய்தியை நான் கவனித்தபோது  எனக்கும் அதிர்ச்சியாக இருந்தது. நம் நாட்டுக்கு வந்த விருந்தாளியை காப்பாற்ற வேண்டியது நம் கடமையாயிற்றே, என்ன நடந்தது என்று புரியவில்லை.

ஆனால் ஒரு விஷயம் மட்டும் எனக்கு தெரியும். நம் நாட்டு பத்திரிக்கையாளர்கள் பரபரப்பு பரதேசிகள். இந்தியாவில் எதிர்க்கட்சிகள் என்பது எதுவும் தெரியாத ஏகாம்பரங்கள். நம்நாட்டு சமூக ஆர்வலர்கள் வேறு வகை. சமோசா சாப்பிட்டுக்கொண்டே சமூக அவலத்தை பேசுவார்கள். வடை சாப்பிடும்போது வரலாறு பேசிவிட்டு அப்படியே அனைத்தையும் மறந்துவிடுவார்கள்.

Friday, March 6, 2026

இது தவறான சிந்தனை


நடிகர் விஜய் திரிஷாவுடன் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாராம். எல்லோரும் கண்டிக்கிறார்கள். இது தவறுதான், அதை மறுப்பதற்கில்லை. ஆனால் அரசியல் கனவு உள்ள நபர் இப்படி செய்கிறார் என்றால் நிச்சயம் ஏதோ ஒரு மர்மம் இதன் பின்னால் இருக்கிறது.

அவர் இப்போது இப்படி வெளிப்படையாக திரிஷாவுடன் வருவதன் முக்கிய காரணம், அவருடைய மனைவியை வெறுப்பேற்றத்தான். அந்த அளவுக்கு வெறுப்பு இவருக்கும் அவர் மனைவி மேல் இருக்கிறது. மனைவியை ஒதுக்குவதை ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம். அப்பா அம்மாவையும் ஒதுக்கும் அளவுக்கு அவர் ஒதுங்கி இருக்கிறார் என்றால் நிச்சயம் ஏதோ ஒரு மனக்காயம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது. அதை அவர் வெளியே சொல்லாமல் மவுனம் காக்கிறார், தனிமையை தேடுகிறார். ஒருவேளை அந்த தனிமைதான் அவரை அரசியல் நோக்கி தள்ளுகிறதோ?

Sunday, March 1, 2026

காமெனி கொல்லப்பட்டார்

ஈரான் அதிபர் காமெனி கொல்லப்பட்டார். இனி ஈரான் மட்டுமின்றி மத்திய கிழக்கு மற்றும் அரபு நாடுகளில் கொஞ்சம் கொஞ்சமாக அமைதி திரும்பும். இது நல்ல செய்திதான். ஆனால் காமெனி போன்ற சர்வாதிகாரிகளை/ அவுட் டேட்டட் தலைவர்களை ஜனநாயக நாடுகள் முறையாக ஒதுக்கி வைத்திருந்தால் அது ஒரு நல்ல முடிவாக இருந்திருக்கும். இஸ்லாமிய நாடுகளில் அது இல்லாததால், இப்படி ஒரு ஜனநாயக ரவுடி வந்து அந்த வேலையை செய்யவேண்டியிருக்கிறது.

ஆனால் நான் சந்தேகப்பேர்வழி. இங்கே சில செய்திகள் மர்மமாக இருக்கிறது. இந்த தாக்குதலை  அமெரிக்காதான் செய்ததா அல்லது ஈரானில் இருக்கும் காமெனி எதிர்ப்பாளர்கள் இதை பயன்படுத்திக்கொண்டார்களா என்பது தெரியவில்லை.

Friday, January 23, 2026

இது மோடியின் சாதனையில் வராதே...

இந்த வாரம் மோடியின் சாதனைகளைப் பார்ப்போம். நிஜமாகவே அவர் பல விஷயங்களில், பல துறைகளில் சாதித்திருக்கிறார். அதேசமயம் சில இடங்களில் அவருக்கு அதிர்ஷ்டம் கை கொடுத்திருக்கிறது. அதை இங்கே பார்ப்போம்.

மோடியின் தேசபக்தி, நிர்வாகத்திறமை, இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற துடிப்பு என எல்லாமே அவரை சிறந்த தலைவராகத்தான் காட்டுகிறது. நானும் அதை நம்புகிறேன். வரலாறு எப்போதுமே இப்படித்தான். வாழும்போது தூற்றும், மறைந்த பிறகு போற்றும்.

காரணம், அரசியலில் Coexist என்ற தியரி கிடையாது. ஒருவர் எவ்வளவு நல்ல தலைவராக இருந்தாலும், நிஜத்தில் அவர் உங்களுக்குப் போட்டியாளர். எனவே வாழும்வரை அவருடைய குறைகளைச் சொல்லிக்கொண்டே/மிகைப்படுத்திக்கொண்டே தான் அரசியல் செய்யவேண்டும். அப்போதுதான் நீங்கள் அதிகாரத்துக்கு வர முடியும். பெரும்பாலான தலைவர்களுக்கு இதுதான் நடந்திருக்கிறது.

Friday, January 16, 2026

இது திமுகவின் சாதனை - மூன்றே மாதத்தில் குழந்தையாம்!


தேர்தல் நெருங்குகிறது. இனி திமுக உடன்பிறப்புகளின் அலப்பரை அதிகமாக இருக்கும். இந்த அலப்பரை எல்லா மனிதர்களிடமும் இருக்கும். ஆனால் திமுகவினர் வித்தியாசமானவர்கள். இவர்களுக்கு லாஜிக் என்றால் என்னவென்றே தெரியாது. அவர்கள் பேசுவது `என்ன... கையைப் பிடிச்சு இழுத்தியா?` என்ற வடிவேலு காமெடி வகை. நாம்தான் தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டும்.    

`எனக்கு குழந்தை பிறந்திருக்கிறது` என்று ஒருவன் சொன்னால் அவனை வாழ்த்தலாம். திருமணமாகி மூன்றே மாதத்தில் ஒருவன் இதைச் சொன்னால் எப்படி இருக்கும்? காதல் திருமணமா, பல மாதங்களுக்கு முன்பே நிச்சயிக்கப்பட்டு இவர்கள் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டார்களா என்ற கேள்வியெல்லாம் உங்களுக்குள் எழும்.

நிச்சயிக்கப்பட்ட திருமணம். அதுவும் பெண்ணை பார்த்த ஒரு மாதத்தில் திருமணம், அடுத்த மூன்று மாதத்தில் குழந்தை என்று சொன்னால்...நமக்கு இப்போது தலை சுற்றுமல்லவா? அப்படிதான் இருக்கிறது தற்போது உடன்பிறப்புகள் சுட்டிக் காட்டும் சில பொருளாதாரப் புள்ளி விவரங்கள்.

Monday, January 5, 2026

தலித் புள்ளிங்கோ - இவர்களை கட்டுப்படுத்துவது எப்படி?


இந்த நான்கு சிறுவர்கள் செய்த செயலை நீங்கள் கவனித்து, மறந்து அடுத்த பரபரப்பை நோக்கி நகர்ந்திருக்கலாம். ஆனால் எனக்கு இவை சில கடந்த கால சம்பவங்களை நினைவுக்கு கொண்டுவந்தது. அவை இங்கே.

என் கடையில் வேலை பார்த்த இருவர் தலித்துகள். எனக்கு அது பிரச்சினையாகத் தெரியவில்லை. ஆனால் என் கடையில் ஐயர் ஒருவர் அடிக்கடி லாட்டரி டிக்கெட் வாங்குவார். அவர்தான் ஒருவரை சுட்டிக்காட்டி எதேச்சையாக கேட்டார் `இவர் தலித்தா?` என்று.