!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, October 3, 2026

விஜய் இடைத்தேர்தலில் அளவுக்கு அதிகமாக உழைக்கிறார். இது பயமா?

எனக்கு அப்படி தெரியவில்லை. இது ஒரு ஃபோபியா.

அவருக்கு அரசியலும் பிரச்சாரமும் புதுசு. நம்மால் முடியுமா என்ற பயத்திலும் இருந்திருப்பார். அதிலும், அவருடைய ரசிகர்கள் எப்போது என்ன செய்வார்கள் என்றே தெரியாது. அந்த விஷயத்தில் அவர்களைத் தற்குறி என்று சொல்வதில் தவறே இல்லை. இருந்தாலும், இது ஒரு இந்திய வியாதி.

அது ஐபோன் வாங்குவதாக இருக்கட்டும் அல்லது எதுவாக இருந்தாலும் சரி. ஒரு இடத்தில கூட்டம் அதிகமாக இருக்கிறது, ஏதோ கொடுக்கிறார்கள் என்று ஒரு பிட்டைப் போட்டுவிட்டால் போதும். எதற்கு இந்தக் கூட்டம் என்றே தெரியாமலேயே வரிசையில் நிற்பார்கள். வரிசையில் நிற்பதை கூட தவறு என்று சொல்லமுடியாது. எப்படியாவது அது என்ன என்று பார்த்துவிட வேண்டும் என்று ஜோம்பியாக மாறிவிடுவார்கள். எனவே, விஜய்க்கு அந்தப் பயம் இருந்திருக்கும்.

அதேசமயம், சிலர் சைக்கிள் ஓட்டவும், ஆறுகளில் இறங்கி நீச்சல் கற்றுக்கொள்ளவும் பயப்படுவார்கள். ஆனால், ஒரு முறை இறங்கி பயம் தெளிந்துவிட்டால், அதன்பின் அதுவே கதி எனக் கிடப்பார்கள்.

விஜய்க்கும் அப்படி ஆகிவிட்டது போலிருக்கிறது. அதிகாரம் வந்துவிட்டது. எனவே, தனக்கும் ரசிகர்களுக்கும் ஒரு பாதுகாப்பை உருவாக்குவது அவருக்கு சுலபமாகிவிட்டது. சட்டசபைத் தேர்தல் பிரச்சாரம் அவருக்குப் பயத்தைத் தெளியவைத்துவிட்டதால், மனிதர் இப்போது உற்சாகமாக இருக்கிறார் போலிருக்கிறது.

இந்தத் தேர்தல் பிரச்சாரம் நாளை முடிவடைந்தவுடன், விஜய், ‘ரிசல்ட் எப்போது?’ என்று கேட்கமாட்டார். ‘அடுத்த இடைத்தேர்தல் எப்போது?’ என்றுதான் ஆவலாகக் கேட்பார். அந்த அளவுக்குப் பயம் தெளிந்து, அவர் அரசியலை ரசிக்க ஆரம்பித்துவிட்டார் போலிருக்கிறது.

குடும்பஸ்தன் அது கொடுக்கும் தலைவலிகளைத் தவிர்க்க தனிமையை விரும்புவான்; தனியே வாழ்பவன், அது கொடுக்கும் வெறுமையைப் போக்க, அவ்வப்போது கூட்டங்களையும் ரசிப்பான்.

Let him enjoy.

0 comments:

Post a Comment